Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

கார், பைக் விலை குறைப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடும் நெருக்கடியில் இருக்கும் ஆட்டோமொபைல் சந்தையைப் பலப்படுத்துவதற்காக, வாகனங்களின் சுங்க வரியைக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. அதன்படி, ஹேட்ச்பேக் கார்கள், பைக்குகள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களின் சுங்க வரி 12 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மிட்சைஸ் செடான் கார்களுக்கான உற்பத்தி வரி 24 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகவும், எஸ்யூவி கார்கள் மீதான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 24 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, கார் மற்றும் டூவீலர்  தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களின் விலைகளை, இங்கு குறிப்பிடப் பட்டு இருக்கும் சதவிகிதத்துக்கு ஏற்ப குறைத்துள்ளன. இந்த இதழ் மோட்டார் விகடனில் கொடுக்கப்பட்டு இருக்கும் கார்/பைக் விலைகள் பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பே தயாராகி விட்டதால், அடுத்த இதழில் குறைக்கப்பட்ட விலைகளுடன் கார் மேளா, பைக் பஜார் பகுதிகள் அப்டேட் செய்யப்படும்.

ஹூண்டாய் ஹேப்பி மூவ்!

மோட்டார் நியூஸ்

கொரியாவில் இருந்து மாணவர்களை அழைத்து வந்து, இங்குள்ள கிராமங்களில் பணிபுரிய ஹூண்டாய் தொடர்ச்சியாக ஏற்பாடுகள் செய்துவருகிறது.  கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கிராமங்களில், இந்த கொரிய மாணவர்கள் பொதுப்பணிகளில் ஈடுபடுவார்கள். கொரிய மாணவக் குழுவின் தலைவரான ஜின் என்பவரிடம் பேசினோம். 'என் இந்தியப் பெயர் விஜய். உண்மையான பெயரைக் கூப்பிடுவதற்குச் சிரமமாக இருப்பதால், இந்தப் பெயரை ஊர் மக்கள் தேர்வு செய்தார்கள். இங்கிருந்து பொதுப்பணி செய்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. திருவங்கரணை ஊராட்சிப் பள்ளிக்கு பெயின்ட் அடித்து, மேடை கட்டித் தந்தோம். வெறும் தரையாக இருந்த வகுப்புகளுக்கு சிமென்ட் தளம் அமைத்தோம். மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தினோம்(?!)' என்றார்.

மோட்டார் நியூஸ்

-  செ.கிஸோர் பிரசாத் கிரண்

மாருதி 800 முடிவுக்கு வந்தது தயாரிப்பு!

1983-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த, மாருதி 800 காரின் கடைசி யூனிட், கடந்த ஜனவரி 18-ம் தேதி அசெம்பிளி லைனில் இருந்து வெளிவந்தது. இந்தக் கடைசி மாருதி 800, ஷில்லாங்கில் இருக்கும் ஒரு டீலர்ஷிப்புக்குச் செல்கிறது. இன்றுவரை கிட்டத்தட்ட 25 லட்சம் மாருதி 800 கார்கள் விற்கப்பட்டுள்ளன. இதன் கடைசி ஆண்டில் 20,754 மாருதி 800 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதே சமயத்தில், டாடா நானோ 18,447 கார்கள்தான் விற்பனையாகின.

பாரத்பென்ஸ் நிறுவனத்தின் நான்கு புதிய டிரக்குகள்!

மோட்டார் நியூஸ்

சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில், பாரத்பென்ஸின் நான்கு புதிய டிரக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. டிராக்டர் டிரெய்லர் மாடலில் 3 டிரக்குகளும், கன்ஸ்ட்ரக்ஷன்/மைனிங் மாடலில் ஒரு டிரக்கையும் அறிமுகப்படுத்தியது பாரத்பென்ஸ். 4023 TT, 4028, 4928 TT ஆகியவை டிராக்டர் டிரெய்லர் மாடல்கள். 3128 CM என்பது கன்ஸ்ட்ரக்ஷன்/மைனிங் மாடல். 3128 மாடலில், ஹப் ரிடக்ஷன் ஆக்ஸில்களும். இன்டர்வீல் மற்றும் இன்டர் ஆக்ஸில் டிஃப்ரன்ஷியல் லாக்கும் அளிக்கப்படுகிறது. 4023 TT மாடல் டிரக் 6.4 லிட்டர், 6 சிலிண்டர் பிஎஸ் 3 இன்ஜின்கொண்டது. இது 230 hp சக்தியையும் 810 Nmடார்க்கையும் அளிக்கிறது. 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த டிரக்கில், ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகிறது. 4928, 4028 மற்றும் 3128 மாடல் டிரக்குகளில், இதே இன்ஜின்தான் இருந்தாலும், இங்கு இது 280 hp சக்தியையும், 1,100 Nm டார்க்கையும் அளிக்கிறது. இந்த மூன்று டிரக்குகளிலும் 9 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். ஆனால், ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுவது, 4928 மற்றும் 4028 மாடல்களில் மட்டும்தான்.  ''இதுவரை இந்தியாவில் 7,500 டிரக்குகளை விற்பனை செய்துள்ளோம். இதில், ஒரு டிரக்கைக்கூட டிஸ்கவுன்ட் அளித்து விற்பனை செய்யவில்லை'' எனக் கூறினார் பாரத்பென்ஸ் நிர்வாக இயக்குனர் மார்க் லிஸ்டோசெலா.

ஹோவர் நிறுவனத்துடனான கூட்டணியை      முறித்தது நிஸான்!

மோட்டார் நியூஸ்

கடந்த நான்கு ஆண்டுகளாக கார் தயாரிக்கும் பொறுப்பை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு விற்பனை, டீலர்ஷிப் அதிகாரங்களை ஹோவர் ஆட்டோமோட்டிவ் எனும் நிறுவனத்திடம் கொடுத்திருந்தது நிஸான். ஒரகடம் நிஸான் தொழிற்சாலையைவிட்டு கார் வந்துவிட்டால், அதன்பிறகு அந்த காருக்குப் பொறுப்பு ஹோவர் ஆட்டோமோட்டிவ் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக டீலர்ஷிப்புகளில் இருந்து ஹோவர் நிறுவனத்துக்கு எதிராகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. டீலர்கள் கேட்கும் கார்களைக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது ஹோவர் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு. நான்கு ஆண்டுகளாக அமைதி காத்த நிஸான் நிறுவனம், இப்போது வெகுண்டெழுந்து ஹோவர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைத் திடீரென ரத்து செய்திருக்கிறது. 'இனி, நிஸான் கார்களை நிஸானே இந்தியாவில் விற்பனை செய்யும்’ என அறிவித்துள்ளது. ஆனால், ஹோவர் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனம், 'சட்டப்படி நிஸான் நிறுவனத்தால் திடீரென்று கூட்டணியை ரத்து செய்ய முடியாது’ என்று தெரிவித்துள்ளது. தொடர்கிறது சர்ச்சை.

இனி வாரன்டி பற்றிய கவலை இல்லை!

மோட்டார் நியூஸ்

டிவிஎஸ் ஆட்டொமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த 'தி வாரன்டி க்ரூப்’ நிறுவனமும் கூட்டணி அமைத்துள்ளன. நம் நாட்டில் விற்கப்படும் ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு வாரன்டி சம்பந்தமான சேவைகளை இந்த இரு நிறுவனங்களும் அளிக்கவிருக்கின்றன. முதல் ஆண்டில் 50,000 வாகனங்களுக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வாகனங்களுக்கும் மேல் வாரன்டி சேவைகளை அளிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த வாரன்ட்டி சேவைகளை அந்தந்த கார் நிறுவனம் கொடுத்திருக்கும் வாரன்டி முடிந்தாலும் வாங்கிக் கொள்ளலாம். வாகனத்தின் தயாரிப்புத் தேதியில் இருந்து ஏழு ஆண்டுகளுக்கு கவரேஜ் அளிக்கும் வசதியும் உண்டு. இந்த வாரன்டி திட்டம், வாகனத்தின் ரீ-சேல் மதிப்பையும் அதிகரிக்கும் என்கிறது டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனம்.

ரகசியம்!

நிஸானின் வழியைப் பின்பற்ற இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். போலோ, வென்ட்டோ என இந்தியாவுக்கான கார்களாக ஃபோக்ஸ்வாகன் அறிமுகப்படுத்திய எந்த கார்களும் அதன் மார்க்கெட் ஷேரை உயர்த்தவில்லை என்பதுதான் காரணம். நிஸானின் 'டட்சன்’ பிராண்ட் போலவே மாருதி, ஹூண்டாயுடன் போட்டி போட புதிய பிராண்டை அறிமுகப்படுத்தி, அதில், 2-4 லட்ச ரூபாய் கார்களை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

2016-க்குள் மிட்சுபிஷி நிறுவனத்தின் 5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!

மோட்டார் நியூஸ்

பஜேரோ ஸ்போர்ட்ஸ் காரை மட்டுமே விற்பனை செய்துவரும் மிட்சுபிஷி நிறுவனம், 2016-ம் ஆண்டுக்குள் ஐந்து புதிய கார்களை விற்பனைக்குக்கொண்டு வரவிருக்கிறது. இந்தமுறை மாருதி, ஹூண்டாய் போன்ற மாஸ்-மார்க்கெட் செக்மென்ட் நிறுவனங்களுடன் போட்டி போட இருக்கிறது மிட்சுபிஷி. இதற்காக மிராஜ் ஹேட்ச்பேக், அட்ராஜ் செடான் கார்களை முதலில் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறதாம். மிராஜ் ஹேட்ச்பேக்கில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. அட்ராஜ் செடான், மிராஜ் காரை அடிப்படையாகக் கொண்டதுதான். மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பஜேரோ ஸ்போர்ட் காரில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்டை விற்பனைக்குக்கொண்டு வரவிருக்கிறது மிட்சுபிஷி!

எம்.ஐ.டி திருவிழா - ஆட்டோமீட் 2014

மோட்டார் நியூஸ்

சென்னை எம்.ஐ.டி வளாகம் கடந்த பிப்ரவரி 22, 23 தேதிகளில் வெளியூர் மாணவர்களால் நெரிபட்டது. எம்.ஐ.டி ஆட்டோமொபைல் துறை ஆண்டுதோறும் நடத்தும் 'ஆட்டோமீட்’ நிகழ்ச்சிக்கு இந்த முறை 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் கலந்துகொண்டனர்.  பேப்பர் பிரசன்டேஷன், கேட் மாடலிங், ட்ராக் ரேஸ், ஆர்.சி கார் ரேஸ், ஆட்டோ க்விஸ் என இரு நாட்களும் ஆட்டோமொபைல் உலகின் அத்தனை விஷயங்களையும் பிரித்து மேய்ந்தனர். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

செய்தி, படம்:  க.பாலாஜி

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism