Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:

எஸ்.ஆனந்த், சென்னை

இத்தனை நாள் ஹூண்டாய் i10 வைத்திருந்தேன். இப்போது 6.5 லட்சத்துக்குள் புதிய பெட்ரோல் ஹேட்ச்பேக் கார் வாங்க விரும்புகிறேன். மோசமான சர்வீஸ் அனுபவங்கள் காரணமாக, மீண்டும் ஹூண்டாய் காரை வாங்க விரும்பவில்லை. ஸ்விஃப்ட் ZXi வாங்கலாமா? அதில் டயர் சத்தம் அதிகமாக இருப்பதால், வேறு பிராண்டு டயர்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும் என்று படித்தேன்... அது உண்மையா? மியூஸிக் சிஸ்டத்துக்கு ஆம்பிளிஃபையர், ஸ்பீக்கர்களை வெளியில் வாங்கிப் பொருத்தலாமா?

நீங்கள் சரியான காரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். 6.5 லட்சத்துக்கு ஸ்விஃப்ட் ZXi

மோட்டார் கிளினிக்

மாடல் நல்ல சாய்ஸ். இதில் வரும் டயர் சத்தம் அதிகமாக இருப்பதால், வேறு பிராண்டு டயர்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்ற செய்தியே புதிதாக இருக்கிறது. உங்களுக்குப் புதிய டயர்தான் வேண்டும் என்றால், தாராளமாகப் பொருத்திக்கொள்ளலாம். ஸ்விஃப்ட்டில் வரும் மியூஸிக் சிஸ்டம் நன்றாகவே இருக்கும். ஆனால், இன்னும் சிறப்பான ஆடியோ சிஸ்டம் வேண்டுமென்றால், நிச்சயம் அதற்கேற்ற ஆம்ப்ளிஃபையர், ஸ்பீக்கர்களை ஸ்விஃப்ட்டில் பொருத்த முடியும். ஆனால், திறமையான ஆடியோ நிபுணர்களிடம் காரைக் கொடுத்து இந்த வேலையைச் செய்யுங்கள்.

கே.கே.பாலசுப்ரமணியம், கோவை.

நான் 7 சீட்டர் வாகனம் வாங்க உள்ளேன். செவர்லே என்ஜாய், டட்ஸன் கோ , ஹோண்டா மொபிலியோ ஆகிய மூன்றில் எது பெஸ்ட்?. இதில் டட்ஸன் கோ , ஹோண்டா மொபிலியோ ஆகிய இரண்டும் எப்போது சந்தைக்கு வரும்?

ஹோண்டா மொபிலியோ இன்னும் இரண்டு மாதங்களுக்குள் விற்பனைக்கு வந்துவிடும். டட்ஸன் கோ , இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வந்துவிடும். நீங்கள் இப்போதே கார் வாங்கியாக வேண்டுமென்றால், செவர்லே என்ஜாய் வாங்கலாம். ஆனால், ஹோண்டா மொபிலியோவுக்காகக் காத்திருந்தும் வாங்கலாம். பிரியோவை அடிப்படையாகக்கொண்டது மொபிலியோ எம்பிவி. இரண்டில் எது பெஸ்ட் என்பது மொபிலியோ விற்பனைக்கு வந்தபிறகுதான் தெரியும்.

த.ஜான்ஸன், தஞ்சை.

என்னிடம் மாருதி சுஸ¨கி ஆல்ட்டோ இருக்கிறது. அதில் ஏபிஎஸ் பிரேக் இல்லை. சமீபத்தில் ஏபிஎஸ் பிரேக்கின் அவசியம் குறித்துப் படித்தேன். வெளியில் இருந்து வாங்கிய ஏபிஎஸ் சிஸ்டத்தை, என் ஆல்ட்டோ காரில் பொருத்த முடியுமா?

ஒவ்வொரு காருக்கும் உள்ள ஏபிஎஸ் சிஸ்டம் அந்த காருக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, டியூன் செய்யப்பட்டு இருக்கும். ஒரு காரின் ஏபிஎஸ் சிஸ்டத்தை எடுத்து இன்னொரு காரில் பொருத்த முடியாது. ஏபிஎஸ் சிஸ்டம் என்பது காரின் பிரேக்கில் இருந்து ஈசியூ, சென்ஸார் என நிறைய வொயரிங் வேலைகளும், டியூனிங், புரோக்ராமிங் வேலைகளும் நிறைந்தது. ஏபிஎஸ் மாற்றுவது என்பது நீங்கள் நினைப்பதுபோல எளிதானது அல்ல. ஏபிஎஸ் உங்களுக்கு மிகவும் அவசியம் எனத் தோன்றினால், நீங்கள் ஏபிஎஸ் இருக்கும் வேறு கார்தான் வாங்க வேண்டும்; புதிய கார் வாங்க முடியாது என்றால், உங்கள் காரின் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை மிகவும் கச்சிதமாக டெஸ்ட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். புதிய பிரேக் பேடு, க்ரிப் அதிகமாக இருக்கும் டயர் போன்றவற்றை வாங்கிப் பொருத்துவதன் மூலம் இன்னும் சிறப்பான பிரேக் கிடைக்கும்.

மோட்டார் கிளினிக்

சி.கார்த்திகேயன், ஆத்தூர்.

நான் என் வாழ்க்கையில் முதன்முதலாக கார் வாங்க இருக்கிறேன். எனது பட்ஜெட் 5 லட்சம். இந்த பட்ஜெட்டுக்குள் எனக்கு ஏற்ற காரைச் சொல்லுங்கள். காருக்கு சிறந்த ரீ-சேல் மதிப்பும், நல்ல சர்வீஸும் கிடைக்க வேண்டும்.  

5 லட்சத்துக்குக் கீழே பெட்ரோல் கார்தான் கிடைக்கும். இதில் ரீ-சேல் மதிப்பும், சர்வீஸ் வசதியும் நிறைந்த கார் எனப் பார்த்தால், மாருதி, ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார்களைத்தான் சொல்ல முடியும். உங்கள் ஊர் இருக்கும் சேலம் மாவட்டத்திலேயே மாருதி, ஹூண்டாய் டீலர்களும், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களும் இருக்கின்றன. உங்களுக்கு ஏற்ற காராக மாருதி வேகன் ஆர் அல்லது ஹூண்டாய் மி10 காரைச் சொல்லலாம். இந்த இரண்டு கார்களுமே பழைய கார் மார்க்கெட்டில் நல்ல டிமாண்டில் இருக்கின்றன. இந்த இரண்டு கார்களிலுமே எல்லா அடிப்படை வசதிகளும் இருக்கின்றன.

பெ.நிஷாந்த், சென்னை.

நான் பெர்ஃபாமென்ஸ் பிரியன். சிட்டி டிராஃபிக்கில் ஜாலியாக ஓட்டக்கூடிய கார் வாங்க விரும்புகிறேன். நான் தேர்ந்தெடுத்திருப்பது ஃபோக்ஸ்வாகன் போலோ GT TSI மற்றும்   ஃபோக்ஸ்வாகன் போலோ GT TDI ஆகிய இரண்டும்தான். இந்த இரண்டு கார்களுமே கிட்டத்தட்ட 9.5 லட்சம் ரூபாய் விலை கொண்டவை. இந்த இரண்டில் எது பெஸ்ட்?

பெர்ஃபாமென்ஸ் விஷயத்தில் இந்த இரண்டு கார்களுமே உங்களைத் திருப்திப்படுத்தும். போலோ  GT TSI , பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் கார். போலோ GT TDI , டீசல் மேனுவல் கார்.GT TSI  காரின் இன்ஜின் சத்தம் நன்றாக இருக்கும். DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் ஷிஃப்ட் தரமும் த்ரில்லாக இருக்கும். இந்த காரை மிகவும் நிதானமாக ஓட்டினால், நல்ல மைலேஜ் கிடைக்கும். GT TDI  மாடலில் இருப்பது வென்ட்டோவில் இருக்கும் டீசல் இன்ஜின். இதன் டார்க் வெளிப்பாடு மிகவும் ஸ்ட்ராங். சிட்டிக்குள்தான் அதிகம் பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதால், இந்த இரண்டு கார்களிலும் இருக்கும் உயிரோட்டமில்லாத ஸ்டீயரிங் பெரிய பிரச்னை இல்லை. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருந்தாலும் ஜாலியான ஓட்டுதல் எனப் பார்த்தால், ஃபோக்ஸ்வாகன் போலோ GT TSI நல்ல சாய்ஸ்.