பிஎம்டபிள்யூவுக்கு இது சவாலான காலகட்டம். மார்க்கெட் லீடராக உயர்ந்து நின்ற பிஎம்டபிள்யூவுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடும் சரிவு. லக்ஸூரி கார் விற்பனையில் முதலில் ஆடி முந்த, இப்போது பென்ஸும் முந்திவிட்டது. சொகுசில் மட்டும் அல்ல, கையாளுமையிலும் மிகச் சிறந்த கார்கள் எங்களுடையதுதான் என்று சொல்லும் பிஎம்டபிள்யூ, ஆரம்ப விலை சொகுசு கார் மார்க்கெட்டில் அதிகக் கவனம் செலுத்துகிறது. 3 சீரிஸ் கார்களை இந்த செக்மென்ட்டில் களம் இறக்கியிருக்கும் பிஎம்டபிள்யூ, இதில் தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்து வருகிறது. எப்படி இருக்கிறது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் லக்ஸூரி லைன்?

விலை 45.96 லட்சம் (சென்னை ஆன் - ரோடு)

இந்த காரின் சென்னை ஆன் ரோடு விலை 45 லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது. 45 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது?

ஸ்டைல்

ஸ்டைலைப் பொறுத்தவரை, பிஎம்டபிள்யூ-வின் பேஸிக் டிஸைன் எதையுமே மாற்றாமல் 3 சீரிஸ் காரை டிஸைன் செய்திருக்கிறார்கள். ஆனால் புதிய 3 சீரிஸ் பழைய E90 பிளாட்ஃபார்மில் இருந்து மாற்றப்பட்டு புத்தம்புதிய F30 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. புதிய 3 சீரிஸ் காரில், முன்பக்க கிரில் இன்னும் கொஞ்சம் பெரிதாக விரிவடைந்திருக்கிறது. கூடவே, ஹெட்லைட்டின் நீளமும் கூடியிருக்கிறது. பானெட்டின் மீது படர்ந்திருக்கும் இரட்டைக் கோடுகள், காருக்கு ஒரு மிரட்டல் இமேஜைக் கொடுக்கிறது. பனி விளக்குகள் துவங்கி காரின் பெரும்பாலான பாகங்களில் குரோம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது, கவர்ச்சியைக் கூட்டுகிறது.

3 சீரிஸ் காரின் பின் பக்கத்தைப் பார்த்து, 'இது 3 சீரிஸா, இல்லை 5 சீரிஸா? எனக் கண்டுபிடிப்பது சிரமம். பின் பக்கத்தைப் பொறுத்தவரை இரண்டு கார்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஆனால், பின்பக்கம் எல்இடி விளக்குகள் இல்லை என்பது ஆச்சரியம்.

உள்ளே...

பழைய 3 சீரிஸ் காரைவிட புதிய 3 சீரிஸ் 93 மிமீ நீளம் அதிகம். பழைய 3 சீரிஸைவிட 40 கிலோ எடை குறைவு. அதேபோல், வீல்பேஸும் 50 மிமீ அதிகம். அதனால், கால்களை நீட்டி மடக்கி உட்காரவும், வசதியாக சாய்ந்துகொண்டு பயணிக்கவும் ஏற்ற சொகுசான இருக்கைகளைக் கொண்டிருக்கிறது புதிய 3 சீரிஸ்.

3 சீரிஸின் கேபினை பிரம்மாண்டமான கேபின் என்றே சொல்லலாம். எல்லா கன்ட்ரோல்களுமே காரின் ஓட்டுநரை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்டர் கன்ஸோலின் மேலே காம்பேக்ட்டான எல்சிடி திரை வைக்கப்பட்டுள்ளது. டிரைவ் பெர்ஃபாமென்ஸ் கன்ட்ரோலைப் பயன்படுத்தி ஸ்போர்ட்ஸ், எக்கோப்ரோ, கம்ஃபர்ட் என டிரைவ் மோடுகளை மாற்றிக்கொள்ளலாம். கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, இரட்டை ஏ.சி என்பதால் வலதுபக்கம், இடதுபக்கம் என இருபக்கப் பயணிகளுக்கும் ஏற்ற வகையில் செட் செய்துகொள்ளலாம். நீளமான கார்தான். ஆனால், நகருக்குள் ஈஸியாக ஓட்ட முடியும். காரணம், இதன் டிரைவர் சீட் பொசிஷன். டிரைவர் சீட்டில் உட்கார்ந்துவிட்டால், முழுச் சாலையும் பார்த்து ஓட்ட முடிகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகம் என்பதால், மேடு பள்ளங்களில் இடித்துவிடுமோ என்று அஞ்சத் தேவையில்லை. பவர் சீட் என்பதால், பட்டன் மூலமாகவே இருக்கையை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். டிக்கியில் பொருட்கள் வைத்துக்கொள்ள போதுமான இடம் உள்ளது. இடவசதியைப் பொறுத்தவரை, போட்டி கார்களிலேயே அதிக இடவசதி கொண்டது, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்தான். ஆனால், நான்கு பேர் மட்டுமே வசதியாக உட்கார முடியும்.

ஆட்டோமேட்டிக் சாவி வசதிகொண்டது 3 சீரிஸ். இப்போது விலை குறைவான கார்களிலேயே வந்துவிட்ட வசதியான இது, பிஎம்டபிள்யூவில் எப்படி இயங்குகிறது எனச் சோதித்தோம். சாவி, பாக்கெட்டிலோ அல்லது காருக்குள்ளோ இருந்தால் போதும்; பட்டனைத் தட்டிவிட்டால் கார் ஆன் ஆகிவிடும். அதன் பிறகு காருக்குள் இருந்துகொண்டு யாராவது டிக்கியைத் திறக்கவோ அல்லது கதவுகளைத் திறக்கவோ முடியாது. அதேபோல், ஆட்டோமேட்டிக் சாவியை 10 மீட்டருக்கு அப்பால் கொண்டு போனால், வேறு யாரும் காரைத் திறக்க முடியாது. இதுதான் டெக்னாலஜி. ஆனால், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை ஆன் செய்துவிட்டு, கதவுகளை மூடிவிட்டு கிட்டத்தட்ட 50 மீட்டரைத் தாண்டிய பிறகும் கார் ஆன்-லேயே இருந்தது அதிர்ச்சியாகவே இருந்தது. ஆட்டோமேட்டிக்காக கார் ஆஃப் ஆகவில்லை.

ஏராளமான வசதிகள் கொண்டிருக்கும் இந்த 46 லட்சம் ரூபாய் மாடலில், ரிவர்ஸ் கேமரா இல்லை. வெறும் சென்ஸார்கள் மட்டுமே. ஆர்ம் ரெஸ்ட்டில் பொருட்கள் வைத்துக்கொள்ள வசதிகள் இல்லை.

இன்ஜின்

184 bhp சக்திகொண்ட 2 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது 3 சீரிஸ். போட்டி கார்களைவிடவும் பவர்ஃபுல் கார் என்பது, திராட்டிலை 1,500 ஆர்பிஎம் தாண்டி மிதித்த உடனே தெரிகிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது 320d. டீசல் இன்ஜின் என்பதால், ஆரம்பத்தில் டர்போ லேக் இருக்கிறது. 1,500 ஆர்பிஎம் தாண்டிய பிறகுதான் டர்போக்களின் உதவியுடன் சீறுகிறது பிஎம்டபிள்யூ.

8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அற்புதமாக வேலை செய்கிறது. கால்களின் கட்டளைக்கு கியர்பாக்ஸ் கீழ்படிகிறது. காலை திராட்டிலில் இருந்து சட்டென எடுத்தால், உடனடியாக கியர்கள் மாறி, குறைந்த வேகத்துக்கு வந்துவிடுகிறது. 0 - 100 கி.மீ வேகத்தை 7.83 விநாடிகளில் கடக்கிறது 3 சீரிஸ். மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பறக்கும் போது செம ஸ்டேபிளாக இருப்பது, இதன் சிறப்பான பில்டு குவாலிட்டிக்கு உதாரணம். ஆனால், வேகமாகச் செல்லும்போது வெளிச்சத்தம் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது.

கையாளுமை

'ஃபன் டு டிரைவ்’ என்றால், அது பிஎம்டபிள்யூதான். நகருக்குள் வளைத்து நெளித்து ஓட்டுவதனாலும் சரி, நெடுஞ்சாலைகளில் சீறிப் பறந்தாலும் சரி, அசத்துகிறது பிஎம்டபிள்யூ.

மைலேஜ்

மைலேஜைப் பொறுத்தவரை பிஎம்டபிள்யூவைக் குறை சொல்ல முடியாது. 320d நகருக்குள் லிட்டருக்கு 11.1 கி.மீ, நெடுஞ்சாலையில் 15.5 கி.மீ மைலேஜ் தருகிறது.

பெர்ஃபாமென்ஸ், ஸ்டைல் மற்றும் கையாளுமையில் சிறந்த கார் வேண்டும் என்பவர்களுக்கு, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் நல்ல சாய்ஸ். ஆடி ஏ4, பென்ஸ் சி கிளாஸ் கார்களுடன் ஒப்பிடும்போது, பெர்ஃபாமென்ஸில் முதல் இடத்தில் இருக்கிறது பிஎம்டபிள்யூ. டீசல் இன்ஜின் என்பதால் மைலேஜும் அதிகம். ஆனால், 46 லட்சம் ரூபாய் காரில் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட முக்கியமான சில வசதிகள் இதில் இல்லை. பெர்ஃபாமென்ஸ், ஃபன் டு டிரைவ் என்றால், கண்ணை மூடிக்கொண்டு பிஎம்டபிள்யூ வாங்கலாம்!

BMW 3 ASeries டெஸ்ட் டிரைவ் வீடியோ பதிவை www.vikatan.com மற்றும் youtube.com/vikatanwebtv - ல் காணலாம்!