உலகின் மிக முக்கியமான கார்களில் ஒன்று, டொயோட்டா கரோலா. 1966-ம் ஆண்டு கரோலா அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுவரை 154 நாடுகளில் 4 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணம், டொயோட்டா கரோலாவின் நம்பகத்தன்மையும், பிரச்னை இல்லாத ஓனர்ஷிப்பும்தான். 'நன்றாக விற்கிறதே, இதன்மீது ஏன் கை வைக்க வேண்டும்?’ என இத்தனை ஆண்டுகளாக டொயோட்டா இதில் மிகச் சிறிய மாற்றங்களையே செய்துவந்தது. ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில் 2014-ம் ஆண்டுக்காக, டொயோட்டா முதன்முறையாக கரோலாவைத் தைரியமாக மாற்றியமைத்திருக்கிறது.

டிஸைன்

புதிய கரோலாவின் முன் பக்கம், அதன் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு முற்றிலும் புதுமையாக, இளமையாக மாற்றப்பட்டிருக்கிறது. இத்தனை நாளாக கரோலா நம் ஊர் சாலைகளில் 'ஏதோ’வென்று சாதாரண தோற்றத்துடன்தான் இருந்தது. ஆனால், இனி சாலையில் மற்றவர்களின் பார்வையை ஈர்க்க இருக்கிறது இது. அகலமான குரோம் க்ரில் செம ஸ்டைலிஷ். மிக நுணுக்கமான டிஸைன் அம்சங்கள்கொண்ட ஹெட்லைட்டும், LED ஸ்ட்ரிப்பும் கண்களைக் கவர்கிறது. பம்பர்கள் இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காரின் பின் பக்கம் முற்றிலும் மாற்றியமைக்கப் பட்டுள்ளது. ஷார்ப்பான கோடுகளும், வித்தியாசமான டெயில் லைட்டுகளும் மாற்றத்தைப் பறைசாற்றுகின்றன. தடிமனாக இருக்கும் கதவுகளின் கைப்பிடி, பிடித்து இழுக்க நன்றாக இருக்கிறது.

பழைய கரோலாவைவிட நீளமாகவும், அகலமாகவும் இருக்கிறது புதிய மாடல். கூடுதலாகச் சேர்ந்திருக்கும் 100 மிமீ வீல்பேஸ், காருக்கு நல்ல தோற்றத்தை அளிக்கிறது. ஆனால், இந்திய மாடலில் கிரவுண்ட் கிளியரன்ஸுக்காக உயர்த்தி அமைக்கப்பட்டிருக்கும் சஸ்பென்ஷனால், வீல் ஆர்ச்சுகளுக்குள் இடைவெளி மிகவும் பெரியதாகத் தெரிகிறது. 2003-ம் ஆண்டில் கரோலா இந்தியாவில் அறிமுகமானதில் இருந்தே, கிரவுண்ட் கிளியரன்ஸில் விளையாடிக்கொண்டே இருக்கிறது டொயோட்டா. இந்தியாவில் முதல் தலைமுறை கரோலாவில், கிரவுண்ட் கிளியரன்ஸ் மிக அதிகமாக இருக்கும். இதனால், வீல் ஜியோமெட்ரி பாதிக்கப்பட்டு கையாளுமையும் பாதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த தலைமுறை கரோலாவில் 'இதைச் சரி செய்கிறேன்’ என, கிரவுண்ட் கிளியரன்ஸை எக்கச்சக்கமாகக் குறைத்துவிட, வாடிக்கையாளர்கள் புலம்பித் தள்ளினார்கள். அதனால், இந்த 2014 கரோலாவில், இதை ஒரேயடியாக 180 மிமீ-க்கு உயர்த்திவிட்டது. நீளமான வீல்பேஸ் காரணமாக இப்படிச் செய்ய வேண்டியதாயிற்றாம். அதனால், ஸ்பீடு பிரேக்கர்களை எந்தச் சிரமும் இல்லாமல் கடக்கிறது கரோலா.

உள்ளே...

புதிய கரோலாவின் இன்டீரியர் சிறப்பாக மேம்பட்டு இருக்கிறது. ஆனால், வெளிப்புறத்தில் ஸ்டைலிங் விஷயத்தில் விளையாடிய அளவுக்கு உள்ளே பிரமாதப்படுத்திவிடவில்லை டொயோட்டா. புத்தம் புதிய டேஷ்போர்டு அழகாக டிஸைன் செய்யப்பட்டுள்ளது. இந்த டேஷ்போர்டின் டாப் லேயர், வெளிச்சத்தைப் பிரதிபலிக்காத கறுப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ரியர் ஏ.சி வென்ட் இல்லை என்பதால், முன் பக்கம் இருக்கும் வென்ட்டுகளில் இருந்து குளிர்காற்று பின் பக்கத்தை அடையும்படி திறமையாக வடிவமைத்திருக்கிறார்கள். எளிமையான இந்த டிஸைனால் காரின் உள்ளே நிறைய இடவசதி உருவாகியிருக்கிறது. சென்டர் கன்ஸோலில் பெரிய கப் ஹோல்டர்கள் இருக்கின்றன. டோர் பாக்கெட்டுகளில் பாட்டில்களை வைக்க முடியும். க்ளோவ் பாக்ஸில் இடவசதி அதிகம். மேலும், டேஷ் போர்டில் எண்ணற்ற பட்டன்களை வைக்காமல், எல்லா கன்ட்ரோல்களையும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், வால்யூமைக் குறைக்க வேண்டும் என்றால்கூட டச் ஸ்க்ரீனில் ஏகப்பட்ட மெனுக்களுக்குள் சுற்ற வேண்டியிருப்பது கடுப்பேற்றுகிறது. மேலும், இந்த ஸ்க்ரீன் அதிகமாக வெளிச்சத்தைப் பிரதிபலிப்பது மேலும் 'கடுப்ஸ்’. இந்த 2 -DIN சிஸ்டம் ஏதோ கடையில் வாங்கிப் பொருத்திய மாதிரி தரக்குறைவாகத் தெரிகிறது.

இருக்கைகளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. முன்னிருக்கைகளில் நல்ல குஷன் சப்போர்ட் உள்ளது. டிரைவர் சீட்டுக்கு 8 way அட்ஜஸ்ட்மென்ட் (டாப் வேரியன்ட்டில்) இருக்கிறது. பின்னிருக்கை இடவசதியில் தான் தனித்துத் தெரிகிறது கரோலா. வீல்பேஸ் அதிகம் என்பதால், உள்ளே கால் வைக்க இடவசதி அதிகமாக இருக்கிறது. பின்னிருக்கைகளைச் சாய்த்துக் கொள்ளவும் முடியும் என்பது பெரிய ப்ளஸ். பின்னிருக்கை சொகுசில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறது 2014 கரோலா.

முன்பைவிட இப்போது டீசல் இன்ஜின்கொண்ட கரோலாவில் வசதிகள் அதிகம். ஆனால், பெட்ரோல் மாடலில் கிடைக்கும் நேவிகேஷன், க்ரூஸ் கன்ட்ரோல், பனி விளக்குகள் போன்றவை டீசல் மாடலில் இல்லை. ஹூண்டாய் ஒரு பக்கம் தனது கார்களில் வசதிகளை நிரப்பிக்கொண்டிருக்க, டொயோட்டா இந்த விஷயத்தில் இன்னும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.

இன்ஜின் மற்றும் பெர்ஃபாமென்ஸ்

2014 டொயோட்டா கரோலாவின் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், 1.4 லிட்டர் டீசல் இன்ஜினும் படுசுமார்தான். ஓட்டும்போது மற்ற நிறுவன கார்களுடைய இன்ஜின்களின் அருமையைத்தான் உணர வைக்கிறது. 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் உள்ளது. CVT கொண்ட மாடலில் இன்ஜின் ஸ்மூத்தாக இருக்கிறது. CVT ஆட்டோமேட்டிக் சத்தமில்லாமல் இயங்குகிறது. ஆனால், ஒரு எக்ஸைட்டிங்கான உணர்வை இந்த இன்ஜினும், டிரான்ஸ்மிஷனும் அளிக்கவில்லை. வேகமாகச் சென்றாலும்கூட மெதுவாகத்தான் செல்வது போன்ற உணர்வுதான் மிஞ்சுகிறது. ஆனால், பின்னிருக்கையில் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பிடிக்கும். மேனுவல் மோடில் இந்த CVT ஆட்டோமேட்டிக்கை இயக்கும்போது சற்று ஜாலியாக இருக்கிறது, அவ்வளவே! அதிக ஆர்பிஎம்-ல் இந்த பெட்ரோல் இன்ஜின் தரும் உணர்வும் சிறப்பாக இல்லை.

1.4 லிட்டர் டீசல் இன்ஜினில், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த ஆர்பிஎம்-ல் டீசல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் படுமோசம். 2,200 ஆர்பிஎம்-க்குக் கீழ் பவர் டெலிவரியே இல்லை. டிராஃபிக்கில் ஓட்டும்போது கிளட்ச்சை மிதித்துக் கொண்டே இருந்தால்தான் வசதியாக இருக்கும். அதற்குமேல், இன்ஜினை ரெவ் செய்தாலும், பவர் டெலிவரி மிக மெதுவாகத்தான் இருக்கிறது. இதன் 470 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியை முழுவதும் பொருட்களால் நிரப்பிவிட்டு, 5 பேரை காரில் ஏற்றிக்கொண்டு, இந்த டீசல் கரோலாவை ஓட்டினால்தான் இந்த இன்ஜினின் 'அருமை’ தெரியும்.

ஆனால், இந்த டீசல் இன்ஜினிடம் ரொம்பவும் டிமாண்ட் செய்யாமல், 2,000 ஆர்பிஎம்-க்கு மேல் வைத்து ஓட்டினால், பிரச்னை இல்லாமல் பல கிலோ மீட்டர்களைக் கடக்கலாம்.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

எவ்வளவு குண்டும், குழியுமான சாலையாக இருந்தாலும், எந்தச் சிக்கலும் இல்லாமல் கடக்கிறது இந்தியாவுக்காக 'சஸ்பென்ஷன் உயர்த்தப்பட்ட’ கரோலா. சத்தமே இல்லாமல் இயங்குகிறது இதன் சஸ்பென்ஷன். ஆனால், சீராக இல்லாத சாலையில் கொஞ்சம் மேலும் கீழும் அசைந்தாடுகிறது. ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்களுக்கு காரின் ஓட்டுதலையும், கையாளுமையையும் சரியாக பேலன்ஸ் செய்யத் தெரியும் கலை, இன்னும் டொயோட்டாவுக்குக் கைவரவில்லை. புதிய கரோலாவில், நேரான சாலையில் சீரான ஸ்டெபிளிட்டி இல்லை.

வேகமாக ஆக்ஸிலரேட் செய்யும்போது, ஸ்டீயரிங்கில் சற்று எடை உணர்வு குறைகிறது. பெட்ரோல் மாடலில்தான் இதனை அதிகம் உணர முடிகிறது. (டீசல் இன்ஜின் அவ்வளவு சிறப்பாக ரெவ் ஆவது இல்லை). ஆனால், வளைவுகளில் ஸ்டீயரிங் நன்றாக இருக்கிறது. முன்பைவிட கையாளுமையில் முன்னேறியிருக்கிறது என்றாலும், 'தி பெஸ்ட்’ என்ற அளவுக்கு இல்லை. காரில் இருக்கும் மெல்லிய அண்டர் ஸ்டீயர் ஒரு பிரச்னை இல்லை. நார்மல்தான்.