ட்ரையம்ப் பைக்குகளின் சிறப்பம்சமே, பாரம்பரியத்தை நினைவூட்டும் ஸ்டைலும் தொலைநோக்குப் பார்வையையும் ஒருசேரக் கொண்டிருப்பதுதான். இந்தியாவில் ட்ரையம்ப் 'போனவில்’ மற்றும் 'தண்டர்பேர்டு ஸ்டார்ம்’ க்ரூஸர் பைக்குகளுக்குப் பிறகு, ட்ரையம்ப்பில் மிகவும் ஹை-டெக் பைக்கான ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கை ஓட்டினோம். இந்தியச் சாலைகளில் இருப்பதிலேயே மிகவும் வித்தியாசமான ஸ்டைலிங் கொண்ட ஸ்ட்ரீட் பைக், இந்த ஸ்ட்ரீட் ட்ரிபிள்.

ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கின் ஸ்டைலிங் மிகவும் ஷார்ப். பைக்கின் பாடியில் வேலைப்பாடுகள் குறைவுதான். இன்ஜின் பகுதி முழுவதும் கறுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் டூயல் ஹெட்லைட் செட்-அப் காரணமாக, 'அட... இது ட்ரையம்ப் பைக்!’ என்று எளிதாக அடையாளம் காண முடிகிறது. பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மிக அருமை. டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர், லேப் டைமர், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், எக்கானமி மற்றும் ரேஞ்ச் இண்டிகேட்டர், அனலாக் டேக்கோ மீட்டர் என இத்தனை மீட்டர்களும் பார்க்க படிக்க தெளிவாக இருக்கின்றன. ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கின் சுவிட்ச்சுகள் தரமாகவும், சிறப்பாகவும் இயங்குகின்றன. ரியர்வியூ மிரர்கள் தரமானவையாக இருந்தாலும், சரியான பொசிஷனில் வைக்க கஷ்டமாக இருக்கிறது. ஆனால், எந்த வேகத்திலும் ஆடாமல் நிற்கிறது இந்த மிரர்கள்.

செம ஸ்டைலாக இருக்கும் இதன் 17.4 லிட்டர் பெட்ரோல் டேங்க், தொடைகளுக்கு சப்போர்ட் அளிக்கும்விதத்தில் இருக்கிறது. சைடு இண்டிகேட்டர்கள் வித்தியாசமாக, ரேடியேட்டரின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. பைக்கின் பின்பக்க டெயில் லைட்டுகள் LED பல்புகள் கொண்டவை. கச்சிதமான கட்டுமானத் தரத்துடன் ஒரு ஒரிஜினல் ட்ரையம்ப் பைக்காக நிற்கிறது, ஸ்ட்ரீட் ட்ரிபிள்.

இதன் இன்ஜின் ட்ரையம்ப் டேடோனா 675 பைக்கில் இருக்கும் 675 சிசி, லிக்விட் கூல்டு, 4-ஸ்ட்ரோக், இன்லைன் 3 சிலிண்டர் இன்ஜின்தான். அதிகபட்சமாக 104.5bhp சக்தியை 11,850 ஆர்பிஎம்-லும், 6.09 kgm டார்க்கை 9,750 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. கிளட்ச் லைட்டாகவும், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பர்ஃபெக்ட்டாகவும் இருக்கிறது. இன்ஜினை டியூன் செய்தவிதத்துக்கு ஏற்ப கியர் ரேஷியோவை செட் செய்திருக்கிறார்கள். பேலன்ஸர் ஷாஃப்ட் இருப்பதால், அதிக வேகங்களிலும் அதிர்வுகள் இல்லை. ஆக்ஸிலரேட்டரைத் திருகியதும், சக்தி வெள்ளம்போல வெளியாகாமல், அளவான அளவில் வெளிப்படுகிறது. அதிக ஆர்பிஎம்-லும் சீறுகிறது ஸ்ட்ரீட் ட்ரிபிள். பைக்கின் இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் சத்தமும் அருமை.

2014 ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கில் இருப்பது அலுமினியம் ட்வின் ஸ்பார் ஃப்ரேம். எக்ஸாஸ்ட்டை சீட்டுக்கு அடியில் வைக்காமல், பக்கவாட்டில் வைத்திருப்பதற்குக் காரணம், எடையை பேலன்ஸ் செய்வதற்காகத்தான். பைக்கின் முன் பக்கம் தலைகீழாக இருக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் இருக்கின்றன. ஓட்டுதல் தரம் சற்று இறுக்கமாக இருந்தாலும், ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இப்படி செட் செய்யப்பட்டு இருப்பதால்தான் அதிக வேகங்களில் ஸ்டேபிளாகச் செல்கிறது இந்த பைக். பைக்கின் மொத்த எடை 183 கிலோ. ரைடிங் பொசிஷன் சிறப்பாக இருந்தாலும், முகத்தில் காற்று அதிகமாக அடிக்கிறது. பைக்கில் விண்ட் ஸ்க்ரீன் ஸ்டாண்டர்டாக அளிக்கவில்லை. ஆப்ஷனல்தான். எக்ஸ்ட்ரா விலை கொடுத்து வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ட்ரீட் டிரிபிள் பைக்கின் ஸ்ட்ராங்கான ஆக்ஸிலரேஷனைக் கட்டுப்படுத்த, சக்தி வாய்ந்த பிரேக்ஸ் வேண்டும் அல்லவா? ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கில் இருப்பது, முன் பக்கம் இரண்டு பிஸ்டன் கேலிபர் கொண்ட 310 மிமீ டிஸ்க் பிரேக்ஸ். பின் பக்கம் ஒரு பிஸ்டன் கேலிபர் கொண்ட 220 மிமீ டிஸ்க் பிரேக்.

7.45 லட்சம் ரூபாய் விலைகொண்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கை வாங்குவதற்கு, மூன்று காரணங்களைச் சொல்லலாம். லேட்டஸ்ட் தொழில்நுட்பம், ஸ்போர்ட்டியான கையாளுமை, ஸ்டைலிங். ஏன் ஸ்ட்ரீட் டிரிபிள் பைக்குக்கு இவ்வளவு தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது!