வெட்டல் விளையாட்டை ஓரங்கட்டிவிட்டார் ஹாமில்ட்டன். இதுவரை நடந்து முடிந்த ஐந்து ரேஸ்களில், முதல் ரேஸைத் தவிர, மீதி நான்கு ரேஸ்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்று அசத்தியிருக்கிறார் மெக்லாரன் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன். கடந்த ஆண்டு வரை ஃபார்மில் இருந்த ரெட்புல் ரெனோ காரின் பெர்ஃபாமென்ஸை, இந்த ஆண்டு மெர்சிடீஸ் பென்ஸ் இன்ஜின் பொளந்துகட்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் ஹாமில்ட்டனின் தொடர் வெற்றி, 'இந்த ஆண்டு ஃபார்முலா-1 ரேஸில் பெரிதாகப் போட்டியே இருக்காது’ என்ற விமர்சனங்களையும் கிளப்பியிருக்கிறது. காரணம், ஹாமில்ட்டன் மட்டும் அல்ல, மெர்சிடீஸ் அணியின் மற்றொரு வீரரான நிக்கோ ராஸ்பெர்க்கும் தொடர்ந்து போடியம் படியேறி நிற்பதுதான்.

ஸ்பெயின்

மே 11-ம் தேதி ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா - கேட்டலுன்யா ரேஸ் டிராக்கில் ரேஸ் நடைபெற்றது. மொத்தம் 307 கி.மீ தூரம் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் தகுதிச் சுற்றில், லூயிஸ் ஹாமில்ட்டன் வெற்றிபெற்று முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். மெர்சிடீஸ் அணியின் மற்றொரு வீரர் நிக்கோ ராஸ்பெர்க் இரண்டாவது இடத்தில் இருந்தும், ரெட்புல் ரெனோ அணியின் டேனியல் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். ஃபெராரி அணி வீரர்களான ராய்க்கோனன் ஆறாவது இடத்தில் இருந்தும், அலான்சோ ஏழாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

முதல் இரண்டு இடங்களில் இருந்து போட்டியைத் துவக்கிய ஒரே அணியைச் சேர்ந்த வீரர்களான லூயிஸ் ஹாமில்ட்டனும், நிக்கோ ராஸ்பெர்க்கும் வெவ்வேறு வகை டயர்களுடன் களத்தில் இறங்கினார்கள். ராஸ்பெர்க் ஹார்டு டயருடன் ரேஸைத் துவக்க, ஹாமில்ட்டன் மீடியம் வகை டயர்களுடன் பறக்க ஆரம்பித்தார். 43-வது லேப்பின்போது இரண்டாவது முறையாக ஹாமில்ட்டனும், 45-வது லேப்பில் நிக்கோ ராஸ்பெர்க்கும் டயர்களை மாற்ற பிட் ஸ்டாப்புக்குள் நுழைந்தனர். இரண்டாவது பிட் ஸ்டாப்புக்குப் பின்பு, ஹாமில்ட்டனுக்கும், ராஸ்பெர்க்கும் இடையே இருந்த இடைவெளி குறைய ஆரம்பித்தது.

இறுதியில் 0.6 மைக்ரோ விநாடிகள் வித்தியாசத்தில் நிக்கோ ராஸ்பெர்க்கைத் தோற்கடித்து வெற்றிபெற்றார் லூயிஸ் ஹாமில்ட்டன். ரெட்புல் ரெனோ அணியின் டேனியல் ரிக்கார்டோ ரேஸை எந்த இடத்தில் இருந்து துவக்கினாரோ, அதில் எந்த மாற்றமும் இல்லாமல், மூன்றாவது இடத்தில் ரேஸை முடித்தார்.

ஐந்து சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், சாம்பியன்ஷிப் பட்டியலில் 100 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார் லூயிஸ் ஹாமில்ட்டன். மூன்றே புள்ளிகள் பின்தங்கி ராஸ்பெர்க் இரண்டாவது இடத்திலும், ஃபெர்னாண்டோ அலான்சோ 49 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

இந்த முறை போட்டி பென்ஸுக்கும், ரெனோவுக்கும் அல்ல. பென்ஸுக்கு உள்ளேயேதான் போட்டி. ஹாமில்ட்டனைத் துரத்துகிறார் ராஸ்பெர்க். ஹாமில்ட்டன் தாக்குப் பிடிப்பாரா? இதற்கான விடை இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன்பு, ஃபார்முலா-1 ரேஸின் அடுத்த சுற்று மே 25-ம் தேதி மொனாக்கோவில் நடந்து முடிந்திருக்கும்!