மார்க்யூஸை வெல்ல இங்கே யாரும் இல்லை... மோட்டோ ஜீபியில் ராஸியின் அத்தியாயம் முடிந்து, மார்க்யூஸின் அத்தியாயம் துவங்குகிறது என்றே சொல்லலாம். கடந்த ஆண்டு முதன்முறையாக மோட்டோ ஜீபி ரேஸுக்கு அறிமுகமாகி, முதல் சீஸனிலேயே சாம்பியன் பட்டம் வென்ற மார்க்யூஸுக்கு, 2014-ம் ஆண்டு எதிரிகள் இல்லாத ஆண்டாகவே அமைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஆண்டு கத்தார், அமெரிக்கா, அர்ஜென்டினா, ஸ்பெயின் என இதுவரை நடைபெற்றிருக்கும் நான்கு ரேஸ்களிலும் தொடர்ந்து முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறார் மார்க்யூஸ்.

'இந்த ஆண்டுதான் மோட்டோ ஜீபியில் இறுதி ஆண்டு’ என்ற நிலையில் ரேஸ் ஓட்டிவரும் முன்னாள் சாம்பியன் வாலன்டினோ ராஸிக்கு, மார்க்யூஸ் மிகப் பெரிய சவால். சாம்பியன் பட்டத்தோடு விடைபெற விரும்பும் ரேஸ் மன்னன் ராஸிக்கு, மார்க்யூஸின் மேஜிக், கிலி கிளப்பியிருக்கிறது.

அர்ஜென்டினா

அர்ஜென்டினாவில் உள்ள டெர்மாஸ் டி ரியோ ஹோண்டா ரேஸ் மைதானத்தில், மோட்டோ ஜீபியின் மூன்றாவது சுற்று ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற்றது. ரேஸுக்கு முந்தைய நாள் நடைபெற்ற தகுதிச் சுற்றில், ஹோண்டா அணியின் மார்க் மார்க்யூஸ் முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதிபெற்றார். யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ இரண்டாவது இடத்தில் இருந்தும், ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். யமஹாவின் வாலன்டினோ ராஸி, ஆறாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

ரேஸ் துவங்கியதுமே தடுமாறினார் மார்க்யூஸ். இரண்டாவது இடத்தில் இருந்த லாரன்சோ, ஆறாவது இடத்தில் இருந்து துவக்கிய ராஸி, டேனி பெட்ரோஸா ஆகிய மூவருமே மார்க்யூஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிப் பறந்தனர். அடுத்த லேப்பிலேயே காட்சிகள் மாறின. ராஸி நான்காவது இடத்துக்குப் பின்தங்க, டுகாட்டியின் டோவிஸியோஸோவும், ஆண்ட்ரியா ஐயனோன் இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு முன்னேறினர். ஆனால், வெறி பிடித்தவர் போல துரத்த ஆரம்பித்த மார்க்யூஸ், ஆறாவது இடத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி, நான்காவது லேப்பில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். போட்டி லாரன்சோவுக்கும், மார்க்யூஸுக்கும் இடையே என ஆனது.

கிட்டத்தட்ட 12 லேப்புகளுக்கு லாரன்சோவுடன் யுத்தம் நடத்திய மார்க்யூஸ், 16-வது லேப்பின்போது லாரன்சோவை முந்தினார். அதன் பிறகு லாரன்சோவால், மார்க்யூஸை முந்த முடியவில்லை. கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டாக, ரேஸ் முடிய இரண்டு லேப்புகளே இருந்த நிலையில், லாரன்சோவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி, இரண்டாம் இடம் பிடித்தார் ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா. ராஸிக்கு நான்காவது இடமே கிடைத்தது.

ஸ்பெயின்

மோட்டோ ஜீபியின் ஐந்தாவது சுற்று ஸ்பெயினின், ஜெரஸ் ரேஸ் டிராக்கில் மே 18-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றிபெற்ற மார்க்யூஸ் முதல் இடத்தில் இருந்தும், யமஹாவின் லாரன்சோ, டுகாட்டியின் டேனி பெட்ரோஸா இருவரும் அடுத்தடுத்த இடங்களில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். ராஸி நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

முதல் லேப்பிலேயே, நான்காவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் வாலன்டினோ ராஸி. மொத்தம் 27 லேப்புகள் கொண்ட இந்தப் போட்டியில் 20-வது லேப் வரை மார்க்யூஸ், ராஸி, லாரன்சோ - யுத்தம் தொடர்ந்து. 21-வது லேப்பின்போது லாரன்சோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார் டேனி பெட்ரோஸா. இறுதிவரை இந்த பொசிஷனில் மாற்றம் இல்லை.

மார்க்யூஸ் தொடர்ந்து நான்காவது வெற்றிபெற, ராஸி இரண்டாம் இடமும், பெட்ரோஸா மூன்றாம் இடமும் பிடித்தனர்.

இதுவரை நான்கு சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், மார்க்யூஸ் 125 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். டேனி பெட்ரோஸா 83 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இரண்டே புள்ளிகள் பின்தங்கி ராஸி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ராஸிக்கு சாம்பியன் ராசி இருக்குமா என்பது, இன்னும் சில ரேஸ்களில் தெரிந்துவிடும்.