சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு... சாதாரண டிரைவராக இருந்தாலும்கூட, அவர் அம்பாஸடர் காரில் எங்கே சென்றாலும் தனி மரியாதை கிடைக்கும். எப்படியாவது கார் வைத்திருப்பவர்களோடு நட்பை வளர்த்துக்கொள்ள, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக முயற்சி செய்வார்கள். பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் என எந்த வசதியும் இல்லாத காராக இருந்தாலும், அம்பாஸடர் காரில்தான் மத்திய, மாநில மந்திரிகள் துவங்கி, போலீஸ் உயர் அதிகாரிகள் வரை அத்தனை பேரும் பயணிப்பார்கள். ஆகையால், அம்பாஸடர் காரை செல்வச் செழிப்போடு மட்டுமல்ல, அதிகாரத்தோடும் தொடர்புபடுத்தியே பார்த்து வந்திருக்கிறோம்.

பாரதிராஜா தன் படங்களில் காட்டியதைப்போல, ஊருக்குள் ஓர் அம்பாஸடர் கார் வந்தால், அதைத் துரத்திக்கொண்டு ஊரின் மொத்த சிறுவர்களும் ஓடிவரும் அளவுக்கு அதற்கு மவுசு இருந்தது. அது தன்னுடைய மார்க்கெட்டை வேகமாக இழந்துவந்த காலத்திலும்கூட, 'அம்பாஸடர் என்றால் டாக்ஸி; டாக்ஸி என்றால் அம்பாஸடர்’ என்று சொல்லும் அளவுக்கு, அது அந்தத் தொழிலில் கொடி கட்டிப் பறந்தது.

அம்பாஸடரைப் பற்றி இத்தனை விரிவாகச் சொல்வதற்குக் காரணம் - அதன் உற்பத்தி இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இனிமேல் புதிய அம்பாஸடர் கார் விற்பனைக்கு வருமா என்பது பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.

அம்பாஸடர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அதாவது 1980-களில், ஆண்டுக்கு 24,000 கார்கள் விற்பனையானது. இந்த விற்பனை படிப்படியாகக் குறைந்து கடைசியாக, நாள் ஒன்றுக்கு ஐந்தே ஐந்து கார்கள் என்ற அளவுக்கு உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. 2,600 தொழிலாளர்கள் சேர்ந்து ஐந்து கார்களை உற்பத்தி செய்தால் கட்டுப்படியாகாது என்று, மேற்குவங்கத்தில் இயங்கிவந்த அம்பாஸடர் தொழிற்சாலையை, அதன் நிர்வாகம் இப்போது மூடிவிட்டது.

''காலத்துக்கு ஏற்ப அவ்வப்போது அம்பாஸடரில் மாற்றங்கள் செய்திருந்தால், அது இன்று இந்தியாவின் ரோல்ஸ்ராய்ஸாக இருந்திருக்கும். ஏனெனில், என்னைப் போலவே பலருக்கும் அம்பாஸடரைப் பிடிக்கும்!'' என்று, பிரபலமான கார் வடிவமைப்பாளர் திலீப் சாப்ரியா சொன்னதைச் செயல்படுத்த இன்னமும் காலம் இருப்பதாக சிலர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அம்பாஸடரைத் தயாரித்துவந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், சீன நிறுவனம் ஒன்றோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கசியும் செய்திகள், இந்த நம்பிக்கைக்குப் புத்துயிர் கொடுக்கின்றன.

சுமார் இரண்டு மாத காலம் எந்த ஒரு புதிய அறிமுகமும் இல்லாமல், மார்க்கெட்டில் இப்போது மீண்டும் புத்துணர்ச்சியைப் பாய்ச்ச, மொபிலியோவை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா. இதன் முழுமையான டெஸ்ட் டிரைவை முதன்முதலாகக் கொடுத்திருக்கிறோம். புது கார்களின் விற்பனை எப்போதெல்லாம் தள்ளாட்டம் காண்கிறதோ, அப்போதெல்லாம் பழைய கார் சந்தையின் மீது பலரின் பார்வையும் படரும். ஆகையால், இந்த இதழுடன், 'பழைய கார் வாங்கலாமா?’ என்ற யோசனையில் இருப்பவர்களின் வசதிக்காக, பழைய கார் என்றால், எந்தப் பழைய கார் வாங்கலாம். எங்கே, என்ன விலைக்கு வாங்கலாம். வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று 32 பக்கங்களுக்கு ஒரு முழுமையான கையேட்டைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறோம். அது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

என்றும் உங்களுக்காக,

ஆசிரியர்