Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

மாருதி சியாஸ் எனப் பெயர் மாறுகிறது எஸ்எக்ஸ்4

மோட்டார் நியூஸ்

ஷிஙீ4 காரைக் கொஞ்சம் மாற்றியமைத்து, சியாஸ் என்கிற பெயரில் வெளியிடவிருக்கிறது மாருதி. ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் விற்பனைக்கு வந்த மாருதி செலெரியோ காரின் வெற்றிக்குப் பிறகு, தன்னுடைய அனைத்து கார்களிலும் கிவிஜி வசதியை மாருதி நிறுவனம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'ஏழைகளின் ஆட்டோமேட்டிக்' என்ற இமேஜ், கிவிஜி டிரான்ஸ்மிஷனுக்கு இருப்பதால், சியாஸ் காரில் இதைப் பொருத்தவேண்டாம் என மாருதி முடிவெடுத்திருக்கிறதாம். இதனால், சிக்ஷிஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு, இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது மாருதி சியாஸ். மேலும், இந்த காரின் பின்னிருக்கை இடவசதியில் மாருதி அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறது என்றும், கேபின் ஐரோப்பிய சொகுசு கார் அளவுக்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் பிஎம்டபிள்யூக்காக தொழிற்சாலை அமைக்க இருக்கிறது ஃபோர்ஸ் மோட்டார்ஸ்!

மோட்டார் நியூஸ்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், ஏற்கெனவே மெர்சிடீஸ் பென்ஸ் இன்ஜின்களை அசெம்பிள் செய்துவரும் நிலையில், சென்னையில் பிஎம்டபிள்யூ இன்ஜின்களை அசெம்பிள் செய்வதற்காக ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்க இருக்கிறது. பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் இருந்து 10 கி.மீ தூரத்தில் செங்கல்பட்டு அருகே அமைக்கப்பட இருக்கும் இந்தத் தொழிற்சாலை, 100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப் படுகிறது. 2015-ம் ஆண்டில் செயல்படத் துவங்கும் இந்த தொழிற்சாலையில் பிஎம்டபிள்யூவுக்காக இன்ஜின்களும், கியர்பாக்ஸ்களும் அசெம்பிள் செய்யப்படும். ஆனால், இந்தத் தகவலை பிஎம்டபிள்யூ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

விற்பனைக்கு வந்தது டாடா மோவஸ்!

மோட்டார் நியூஸ்

டாடா சுமோ கிராண்டே காரைத்தான், 'மோவஸ்’ என்ற பெயரில் திரும்பவும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது டாடா. 7, 8 மற்றும் 9-பேர் பயணிக்கக்கூடிய இருக்கை அமைப்புகளில் விற்கப்படுகிறது மோவஸ். இதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைந்த யுட்டிலிட்டி கார். டாடா மோவஸ்-ல் இருப்பது 2.2 லிட்டர் க்ஷிகிஸிமிசிளிஸி டீசல் இன்ஜின். இது 118 தீலீஜீ சக்தியையும், 25.4 ளீரீனீ டார்க்கையும் அளிக்கிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த டீசல் கார், லிட்டருக்கு 15.16 கி.மீ மைலேஜ் அளிக்கும் என்றும், புதிய ஸ்டீயரிங் சிஸ்டம் கொண்டது என்றும் சொல்கிறது டாடா மோட்டார்ஸ். மோவஸ் ஆரம்ப விலை 6.99 லட்சம் ரூபாய்(எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

சென்னையில் ஸ்பேர் பார்ட்ஸ் விநியோக மையத்தை துவக்கியது நிஸான்!

மோட்டார் நியூஸ்

சென்னை ஒரகடம் அருகே அமைந்துள்ள நிஸான் கார் தொழிற்சாலை அருகிலேயே, ஸ்பேர் பார்ட்ஸ் விநியோக மையத்தையும் துவக்கியிருக்கிறது நிஸான். இந்த விநியோக மையம் மூலம் டீலர்ஷிப் சர்வீஸ் சென்டர்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை இது சப்ளை செய்ய இருக்கிறது. 45,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில் மொத்தம் 300 பேர் வேலை செய்கிறார்கள்.

யமஹாவின் சூப்பர் ஸ்டார்!

பைக் மார்க்கெட்டின் லேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார், யமஹா ஸி25. இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் யமஹா ஸி25, கடந்த மாதம் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஸி25 பைக்கின் படங்கள் வெளியான 25 மணி நேரத்தில், இந்தோனேசியாவில் 2,800 பைக்குகள் புக் செய்யப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவில் தற்போது தீவிர டெஸ்ட்டிங்கில் இருக்கும் யமஹா ஸி25 பைக்கில், அப்படி என்ன ஸ்பெஷல்?

மோட்டார் நியூஸ்

மோட்டோ ஜீபி ரேஸ் பைக்கான யமஹா வி1 பைக்கை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான், ஸி25 பைக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. மூன்று கண்கள் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் பைக்கின் முன் பக்கம் மிரட்டலாக இருக்கிறது. பின் பக்கம் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது 600 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போல் கனமாக இருக்கிறது ஸி25. டயல்களைப் பொறுத்தவரை அனலாக் மீட்டரோடு, எல்சிடி ஸ்கிரீனில் ஸ்பீடோ, ஓடோ, ஃப்யூல் மீட்டர்கள் டிஜிட்டலில் மிளிர்கின்றன. 14.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், கால்களை அரவணைத்து உட்காரும் வகையில் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது.

249 சிசி திறன்கொண்ட 8 வால்வு, லிக்விட் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 35.5தீலீஜீ சக்தியை வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸைக்கொண்டது ஸி25.

166 கிலோ எடைகொண்ட யமஹா ஸி25 பைக்கின் முன் பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின் பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன. 10 ஸ்போக் அலாய் வீல்களின் இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கவாஸாகி நின்ஜா 300 மற்றும் ஹோண்டா சிஙிஸி 250 ஸி பைக்குகளுடன் போட்டி போட இருக்கும் யமஹா ஸி25, இந்தியாவில் 3 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வரும்.

வி ஆர் வெயிட்டிங்!

வாப்கோ நிறுவனத்தின் புதிய ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்!

சென்னையைச் சேர்ந்த வாப்கோ நிறுவனம், கன ரக வாகனங்களின் பயன்பாட்டுக்கு என

மோட்டார் நியூஸ்

'ளிஜீtவீஞிக்ஷீவீஸ்மீ’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (கிவிஜி) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதைப் பற்றி வாப்கோ நிறுவனத்தின் ஆசிய அதிபர் லியான் லியு கூறுகையில், ''எங்களுடைய ''ளிஜீtவீஞிக்ஷீவீஸ்மீ’ டிரான்ஸ்மிஷன் உபயோகப்படுத்த, தொழில்நுட்பரீதியில் சிறந்ததாக விளங்கும். எரிபொருள் சிக்கனம் மற்றும் ஓட்டுநரின் பாதுகாப்பும் அதிகரிக்கும். இதுவரை 2 லட்சம் டிரான்ஸ்மிஷன்களை உலகளவில் விற்பனை செய்திருக்கிறோம்'' என்று கூறினார்.

இதையடுத்து நடந்த செயல்முறை விளக்கத்தில் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட பஸ் ஒன்றை இயக்கிக் காட்டினார்கள்.

சாதாரண மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் ஒரு கன்ட்ரோல் யூனிட்டும், ஆக்சுயேட்டரையும் இணைத்து இதை உருவாக்கியுள்ளனர். இது தானாகவே கியரை மாற்றிக்கொள்ளும். வேண்டும் என்கிறபோது நாமும் கியரை மாற்றிக்கொள்ளலாம். கியரில் இருக்கும் ஃபங்ஷன் பட்டன் அழுத்தி முன்னும் பின்னுமாக கியரை மாற்றிக்கொள்ளலாம். 'கி’ மோடில், கியர்கள் வேகம் வேண்டுமென்றால், வேகத்திற்கும்; மைலேஜ் வேண்டுமென்றால், அதற்கும் ஏற்றதுபோல தானாகவே மாறிக்கொள்ளும். இந்த நிகழ்ச்சியில் வாப்கோ நிறுவனத்தின் அதிபர்(ஆசியா) லியான் லியு மற்றும் துணை அதிபர்(உலகம்) யோர்கே சோலிஸ், நிர்வாக இயக்குனர் கன்னியப்பன்(இந்தியா) ஆகியோர் கலந்துகொண்டனர்.

- மெல்வின், படம்: எஸ்.கேசவசுதன்

25 லட்சம் ஆல்ட்டோ கார்கள் விற்பனை!

மாருதி சுஸ¨கி நிறுவனம், இந்தியாவில் 25 லட்சம் ஆல்ட்டோ ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. முதன்முதலாக 2000-ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தது ஆல்ட்டோ. 2001-ம் ஆண்டு 1.1 லிட்டர் இன்ஜினுடன் ஒரு மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்து, அதை 2004-ம் ஆண்டுடன் நிறுத்திவிட்டது. அதே ஆண்டில்தான் முதன்முறையாக, மாருதி 800 காரை விற்பனையில் முந்தி, இந்தியாவிலேயே அதிகம் விற்கப்படும் காராக ஆனது, மாருதி ஆல்ட்டோ.

மோட்டார் நியூஸ்

2007-ம் ஆண்டு இது முதன்முறையாக ஃபேஸ் லிஃப்ட் செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு 67 தீலீஜீ சக்தியை அளிக்கும் 1.0 லிட்டர் கே-சீரிஸ் இன்ஜினுடன் விற்பனைக்கு வந்தது மாருதி ஆல்ட்டோ ரி10. 2011-ம் ஆண்டு மே மாதம்தான் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில், அதாவது 38,065 ஆல்ட்டோ கார்கள் விற்பனையானது. முதல் தலைமுறை ஆல்ட்டோவை வழியனுப்பும்விதமாக, 2012-ம் ஆண்டில் ஆல்ட்டோ 800 அறிமுகமானது. இப்போது ஆல்ட்டோ 800 காருக்கான ஃபேஸ் லிஃப்ட் மாடலை சோதனை செய்துகொண்டிருக்கிறது மாருதி.

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism