மர்ஷியல் வாகனத் தயாரிப்பில் குளோபல் லீடர் இசுஸ¨. ஜப்பானின் ஜீவ நதிகளில் ஒன்றான இசுஸ¨ நதியை நினைவுபடுத்தும்விதமாக, இந்த நிறுவனத்துக்கு இசுஸ¨ மோட்டார்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கமர்ஷியல் வாகனம் மற்றும் டீசல் இன்ஜின் தயாரிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது இசுஸ¨. இதுவரை கிட்டத்தட்ட 2 கோடி டீசல் இன்ஜின்களைத் தயாரித்திருக்கிறது இசுஸ¨. இந்தியாவில் அம்பாஸடர் கார்களில், ஒரு காலத்தில் இசுஸ¨ இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இசுஸ¨ இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர், ஷிஜிரோ வக்கபயாஷியைச் சந்தித்தேன்.

''சென்னையைத் தலைமையகமாகத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?''

''தாய்லாந்து, எங்களுக்கு மிகவும் முக்கியமான மார்க்கெட். சென்னை, இந்தியாவின் ஆட்டோமொபைல் ஹாட் சென்டர். இங்கே ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனிகள் அதிகம். உதிரி பாகங்களை தாய்லாந்தில் இருந்துகொண்டு வரவும், எக்ஸ்போர்ட் செய்யவும் துறைமுக வசதியும் இங்கு இருப்பதால், சென்னையைத் தேர்ந்தெடுத்தோம்.''

''தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துவரும் இசுஸ¨ தொழிற்சாலை எப்போது செயல்படத் துவங்கும்?''

''இசுஸ¨வின் இந்தியத் தொழிற்சாலை, 2016-ம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கும். முதல்கட்டமாக ஆண்டுக்கு 50,000 வாகனங்கள் தயாரிக்கப்படும். 2019-ம் ஆண்டுக்குள் தொழிற்சாலையின் தயாரிப்பு, ஆண்டுக்கு 1.20 லட்சமாக உயர்த்தப்படும். அப்போது எங்கள் வாகனங்களில் 100 சதவிகிதம் லோக்கலைசேஷன் (உள்ளூர் உதிரிபாகங்கள்) இருக்கும். இசுஸ¨, இந்தியாவில் 3,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும். 2016-ம் ஆண்டில் தொழிற்சாலை முழுவதுமாகச் செயல்படத் துவங்கும்போது, இந்தியாவில் எங்களுக்கு 60 டீலர்ஷிப்புகள் இருக்கும்.''

''இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்கள்தான் அதிகம் விற்பனையாகும். இசுஸ¨ நிறுவனத்தில் இருந்து சின்ன கார்கள் எதையும் எதிர்பார்க்கலாமா?''

''ஹேட்ச்பேக் கார்கள் எங்களிடம் கிடையாது. தொடர்ந்து எஸ்யுவி மற்றும் பிக்-அப் வாகன மார்க்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.''

''இந்தியாவில் இசுஸ¨வின் பலம் என்னவாக இருக்கும்?''

''டீசல் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இசுஸ¨தான் மார்க்கெட் லீடர். மேலும், நம்பகத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் வாகனங்களுக்குப் பெயர் பெற்றது இசுஸ¨. பிக்-அப் வாகனங்களை ஒவ்வொருவரும் பெருமிதத்துடன் பயன்படுத்தக் கூடிய நிலையைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்!'' என்று புன்னகைக்கிறார் ஷிஜிரோ வக்கபயாஷி.