க்ராஸ் கல்ச்சர் என்பது இப்போது கார்களுக்கும் வந்துவிட்டது. சாதாரண கார்தான்; அதில் கொஞ்சம் ஸ்போர்ட்டியான அம்சங்களைச் சேர்த்துவிட்டு, பவரையும் கொஞ்சம் கூட்டிவிட்டால்... அதுதான் க்ராஸ் கார்.

இங்கே நிற்கும் ஃபோக்ஸ்வாகன் போலோ, எட்டியோஸ் லிவா கார்களின் தோற்றத்தைக் கண்டு ஏமாற வேண்டாம். ஏனெனில், எட்டியோஸ் க்ராஸும், க்ராஸ் போலோவும் எஸ்யுவி அல்ல. இவை, தற்போது ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் சாதாரண எட்டியோஸ் லிவா மற்றும் போலோ கார்கள்தான். ஆனால், ரூஃப் ரெயில், ஸ்பாய்லர், முன்பக்க பிளாஸ்டிக் அலங்காரம் என தோற்றத்தைக் கொஞ்சம் ஸ்டைலாக மாற்றி, 'க்ராஸ்’ எனப் பெயர் வைத்துவிட்டார்கள். இதனால், இவற்றை யாரும் ஆஃப் ரோடு கார்கள் எனக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.

அப்படி என்றால், எதற்காக இந்த க்ராஸ் கார்களை வாங்க வேண்டும்? குறைந்த விலையில், எஸ்யுவி போன்று ஸ்டைலான கார் வேண்டும் என்று ஏங்குபவர்களுக்காகத்தான் இந்த க்ராஸ் கார்கள்.

க்ராஸ் போலோ, எட்டியோஸ் க்ராஸ் - இரண்டில் எது சூப்பர் கிராஸ்?

ஸ்டைல்

செம டல்லாக, பார்க்கும்போதே சலிப்படைய வைக்கும் எட்டியோஸ் லிவாவை, இவ்வளவு அழகாக மாற்ற முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறது எட்டியோஸ் க்ராஸ். காரைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் கிளாடிங் டிஸைனும், பம்பர்களும் காரின் ஒட்டுமொத்தத் தோற்றத்தையே மாற்றி விடுகின்றன. ரூஃப் ரெயில், இருபக்க ஸ்கஃப் ப்ளேட்ஸ், முன் விளக்குகளுடன் இணைந்திருக்கும் புல் பார் ஆகியவை எட்டியோஸ் க்ராஸுக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனால், சாதாரண எட்டியோஸைவிட, எட்டியோஸ் க்ராஸ் அகலமாகவும், நீளமாகவும், உயரமாகவும் இருக்கிறது. ஆனால், வீல் சைஸ் மட்டும் சிறிதாக இருப்பது காரின் பிரம்மாண்டத்தைக் குறைத்து விடுகிறது.

ஃபோக்ஸ்வாகன் போலோவுக்கு குறுகிய 15 இன்ச் வீல்களைப் பொருத்தியதில் எந்தப் பயனும் இல்லை. வீல்தான் சாதாரண போலோவையும் க்ராஸையும் வித்தியாசப்படுத்துகிறது. ஆனால், சின்ன வீல்கள் இந்த (Rugged) வடிவமைப்புக்குப் பக்க பலமாக இல்லை. கூடுதல் சேர்க்கைகளான ரூஃப் ரெயில், பாடி கிளாடிங், சில்வர் சின் கார்டு, டிஃப்யூஸர் ஆகியவை போலோ க்ராஸில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

உள்ளே

கதவைத் திறந்து பார்த்தால், சாதாரண போலோவையும் எட்டியோஸ் லிவாவையும் ஒப்பிடுவதுபோல ஆகிவிடும். ஏனெனில், காருக்குள்ளே எந்த மாற்றமும் இல்லை. லிவாவைப் போலவே எட்டியோஸ் க்ராஸும் விலை மலிவான டேஷ்போர்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ஏ.சி வென்ட் டிஸைன்கள், காரின் உள்பக்க டிஸைன் தீமுடன் பொருந்தவில்லை. கேபினின் கறுப்பு நிறம், லிவாவில் காணப்படும் விலை குறைந்த பிளாஸ்டிக்குகளை மூடி மறைக்க உதவுகிறது.

காருக்குள்ளே சின்னப் பொருட்களை வைக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் க்ளோவ் பாக்ஸிலும் இட வசதி அதிகம். செங்குத்தாக அமைக்கப்பட்டிருக்கும் ஏ.சி வென்ட்டுகளை, பலவிதங்களில் மாற்றியமைக்க முடியும். பெரிய ஜன்னல்கள், காருக்குள்ளே அதிக இடம் இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. சமமான முன் இருக்கைகள், நினைப்பதைக் காட்டிலும் அதிக வசதியைக் கொடுகின்றன.

மறுபுறம் கிராஸ் போலோ, பில்டு குவாலிட்டியில் சிறந்த காராக, ஸ்ட்ராங்காக இருக்கிறது. கதவை மூடும்போது வரும் 'தட்’ எனும் சத்தத்தில் இருந்தே இதன் பில்டு குவாலிட்டியைத் தெரிந்துகொள்ளலாம். எட்டியோஸுடன் ஒப்பிடும்போது, போலோவின் கேபின் மற்றும் டேஷ்போர்டு தரம் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது.

போலோவில் டேஷ்போர்டு உயரமாக இருப்பது, முன் சீட்டில் உட்காரும் உயரம் குறைவானவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். மேலும், ஓட்டுநர் இருக்கையை அட்ஜஸ்ட் செய்வதும் சிரமமாக உள்ளது. ஆனால், இருக்கைகளின் சொகுசுத் தன்மை இந்தக் குறைகளை மறைத்துவிடும்.

போலோவின் பின் இருக்கைகளைவிட எட்டியோஸ் க்ராஸின் பின் இருக்கைகள் நன்றாக உள்ளன. போலோவின் சிறிய ஜன்னல்களும், குறைவாக உள்ள கால் வைக்கும் இடமும் பின் இருக்கைகளின் சொகுசுத் தன்மையைக் குறைத்துவிடுகின்றன. எட்டியோஸ் வசதியான பின் இருக்கைகளைக் கொண்டுள்ளது. இரு கார்களும் பெரிய டிக்கியைக் கொண்டுள்ளதால், பயணத்துக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் செல்ல முடியும்.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

டொயோட்டா, எட்டியோஸ் கிராஸை மூன்று இன்ஜின்களுடன் அளிக்கிறது. மூன்றுமே லிவாவில் இருப்பதுதான். 79 bhp சக்தி கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 89 bhp சக்திகொண்ட பெட்ரோல் என இரண்டு பெட்ரோல் ஆப்ஷன்கள். இது தவிர, 67bhp சக்திகொண்ட 1.4 லிட்டர் டீசல் இன்ஜின்.

நாம் டெஸ்ட் செய்தது டீசல் இன்ஜின்தான். கேட்கும்போது வெறும் 67 bhp இன்ஜின்தானா என்பதுபோலத் தோன்றும். ஆனால், நகருக்குள் வளைந்து நெளிந்து வேகமாக வெளியே வர, சிறந்த பெர்ஃபாமென்ஸ் காராக இருக்கிறது எட்டியோஸ் க்ராஸ். டர்போ லேக் மிகவும் குறைவாக இருப்பதால், அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய தொல்லை இல்லை.

ஆனால், எட்டியோஸின் குறையே, இதன் லைட் ஸ்டீயரிங்தான். தொட்டவுடன் சட்டெனத் திரும்புவதோடு, அதிக வேகத்தில் செல்லும்போது, முன் சக்கரங்களுடன் தொடர்பைத் துண்டித்துவிட்டது போலவே ஸ்டீயரிங் இருக்கிறது.

இப்போதைக்கு க்ராஸ் போலோவில் 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டு இருந்தாலும், விரைவில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், கிராஸ் போலோவில் வரவிருக்கிறது. எட்டியோஸ் கிராஸின் இன்ஜினை விட ஒரு சிலிண்டர் குறைவாக இருந்தாலும், கிராஸ் போலோவில் 7 bhp[ சக்தி அதிகம். மூன்று சிலிண்டர் யூனிட்டாக இருந்தாலும் இது டொயோட்டா இன்ஜினைவிட சத்தம் குறைவாகவே இருக்கிறது.

ஃபோக்ஸ்வாகன் இன்ஜின், எட்டியோஸ் அளவுக்கு வளைந்து கொடுக்கும் இன்ஜினாக இல்லை. மேலும் டர்போ லேக் அதிகம். 2,500 ஆர்பிஎம் வரை மந்தமாகவே இருப்பதால், நகருக்குள் ஓட்டுவது சிரமமாக இருக்கிறது. இதனால், அடிக்கடி கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், 2,500 ஆர்பிஎம்-க்குப் பிறகு சீறுகிறது. ஓட்டுதல் தரத்தைப் பொறுத்த வரை ஃபோக்ஸ்வாகனின் சஸ்பென்ஷனைவிட, டொயோட்டாவின் சஸ்பென்ஷன் மேடு பள்ளங்களைத் திறமையாகச் சமாளிக்கிறது.

தீர்ப்பு

எட்டியோஸ் க்ராஸின் விலை உயர்ந்த வேரியன்ட்டின் சென்னை விலை 8.55 லட்சம் ரூபாய். ஃபோக்ஸ்வாகன் போலோ க்ராஸின் விலை உயர்ந்த வேரியன்ட்டின் விலை 9.12 லட்சம்.

கூடுதல் விலை கொடுத்து வாங்க இரண்டு கார்களிலும் சிறப்பு அம்சங்கள் எதுவுமே இல்லை. அதிக விலைக்கு பெரிய டயர்களையாவது இரண்டு நிறுவனங்களும் கொடுத்திருக்கலாம். இரண்டு கார்களில் ஸ்டைல்தான் முக்கியம் என்பவர்களுக்கு, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் நல்ல சாய்ஸ்!