மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கும் இரண்டாவது 'ஹல்க்,’ ML63 AMG. ஏற்கெனவே GL63 AMG மற்றும் GL63 AMG ஆகிய கார்கள் இங்கு விற்பனையில் இருக்க, இப்போது ML63 AMG-யையும் சேர்த்துக்கொண்டு, 'அவெஞ்ஜர்ஸ்’ பட ஹீரோக்கள் போல செம லைன்-அப் ஆக நிறுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். ஏற்கெனவே மற்ற இரண்டு ஹீரோக்களையும் நாம் 'தரிசனம்’ செய்துவிட்ட நிலையில், புது வரவு ML63 AMG எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

பென்ஸின் இந்த டெரர் லைன்-அப், போர்ஷே கெய்ன் டர்போ, சூப்பர் சார்ஜ்டு இன்ஜின்கொண்ட ரேஞ்ச் ரோவர் போன்ற கார்களைக்கொண்ட செக்மென்ட்டில் போட்டி போடுகிறது.

ML63 AMG போன்ற கார்கள் ஸ்போர்ட்ஸ் கார் பெர்ஃபா மென்ஸும், எஸ்யுவி காருக்கான யதார்த்தத்தையும் ஒருசேர அளிக்கின்றன. ஆல் வீல் டிரைவ் மற்றும் நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், தைரியமாக இந்த வகை கார்களின் உச்சபட்ச லிமிட்டைத் தொட்டுவர முடியும். மெர்சிடீஸ் பென்ஸின் AMG லைன்-அப்-பில் ML63 AMG காருக்கு 'எடை’ மட்டும் ஸ்பெஷல் ப்ளஸ் பாயின்ட்டாக அமைந்துள்ளது. யானை போன்று இருக்கும் GL63 AMGகாரைவிட இது, 235 கிலோ எடை குறைவு. ஆனால், இரண்டிலும் ஒரே இன்ஜின்.

ML63 AMG காரில் இருப்பது V8 ட்வின் டர்போ, 5.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். இது அதிகபட்சமாக 550 bhp சக்தியையும் 77.5 kgm டார்க்கையும் அளிக்கும். 2,300 கிலோ எடைகொண்ட இந்த கார் 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 5.1 விநாடிகளில் கடக்கிறது. 2,000 ஆர்பிஎம்-க்கு முன்பே அதிகபட்ச டார்க் வெளிப்படுவதால், ஏதோ மதயானைக் கூட்டம் ஒன்று உங்களை இழுத்துக்கொண்டு ஓடுவது போன்று முன்னே இழுக்கிறது ML63 AMG. 7G -ட்ரானிக் 7 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், நார்மல் மோடில் சற்று மந்தமாக இயங்கினாலும், 'ஸ்போர்ட்’ மற்றும் 'மேனுவல்’ மோடில் சக்தியைச் சீறவிடுகிறது. இவ்வளவு பெர்ஃபாமென்ஸையும் சிட்டி டிராஃபிக்கில் கையாளும்போது மிகுந்த கவனம் வேண்டும். இந்த காருக்கு ஏற்றது எக்ஸ்பிரஸ்-வே சாலைகள்தான்.

வளைந்து நெளிந்து செல்லும், குறுகிய சாலைகளில் ஓட்டும்போதுதான் இவ்வளவு பெர்ஃபாமென்ஸையும் கட்டுக்குள் வைக்க, சிறப்பான டைனமிக்ஸ் இருப்பதை உணர முடிகிறது. முன்னும் பின்னும் ஆக்டிவ் ஆன்டி ரோல் பார்கள் இருப்பதால், காரின் பாடி ஸ்டேபிளாக இருக்கிறது. ஸ்டீயரிங் கச்சிதமாக இருந்தாலும், ஓட்டத் தூண்டும் விதத்தில் இல்லை. க்ரிப் நன்றாக இருந்தாலும், சாலையை முழுக்க நம் கைவிரல்களில் உணர முடியவில்லை. விரட்டி ஓட்டினால், பிரேக் ஃபீல் மிருதுவாகிவிடுகிறது. அப்படியென்றால், இந்த காரை ஜாலியாக ஓட்ட முடியாதா? இல்லை. இதன் எடையை மட்டும் சரியாக உணர்ந்துகொண்டால் போதும்; சிறப்பாக வளைத்து நெளித்து ஓட்ட முடியும். ஆனால், டைனமிக்ஸில் போர்ஷே கெய்ன் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஓட்டுதல் தரம் சற்று இறுக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், மோசமாக இல்லை. கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று சஸ்பென்ஷன் செட்-அப் உள்ளன. இதில் ஸ்போர்ட் மோடில்தான் ஓட்டுதலும், கையாளுமையும் பேலன்ஸாக இருக்கிறது.

8 காற்றுப் பைகள், சன் ரூஃப், எலெக்ட்ரிகல் ஹீட்டடு/கூல்டு கப் ஹோல்டர்கள், மூன்று வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், ஹர்மன் கார்டன் லாஜிக் 7 சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் என வசதிகளிலும் 'பெர்ஃபார்ம்’ செய்கிறது ML63 AMG. காருக்குள் எல்லா பட்டன்களும் பயன்படுத்த அருமையாக இருக்கின்றன. காருக்கு வெளியே இது ஒரு AMG பெர்ஃபாமென்ஸ் கார் என்பதைக் காட்ட, பெரிய டிஸைன் அம்சங்கள் இல்லை. வீல்களில் AMG என்று ஸ்டைலாகப் பொறிக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பிரேக்ஸ், நான்கு எக்ஸாஸ்ட் டிப்கள், V8 Biturbo பேட்ஜ்கள் ஆகியவற்றைப் பார்த்தால் தான் வித்தியாசம் தெரிகிறது. ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, இவ்வளவு சிம்பிளான டிஸைன் அம்சங்கள் பிடிக்குமா என்பது தெரியவில்லை.

மெர்சிடீஸ் பென்ஸ் ML63 AMG-ன் விலை ரூ.1.52 கோடி. (எக்ஸ்- ஷோரூம், பெங்களூரு) இது சாதாரண ML350 CDI காரைவிட இரண்டு மடங்கு அதிகம். கையில் காசை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஏற்ற கார் ML63 AMG.