இந்தியாவில் அறிமுகமாகி விட்டது, 2014 ஆடி A8 L ஃபேஸ் லிஃப்ட். பிஎம்டபிள்யூ சமீபத்தில் தன்னுடைய 7 சீரிஸ் காரை சின்னச் சின்ன மாற்றங்களுடன் விற்பனைக்குக் கொண்டுவர, இன்னொரு பக்கம் மெர்சிடீஸ் பென்ஸும் ஷி கிளாஸ் காரை தடபுடலாக விற்பனைக்குக் கொண்டுவர, ஆடிக்கு A8 காரைப் புத்தம் புதியதாகக் காட்ட வேண்டிய கட்டாயம். அதன் விளைவுதான் 2014 ஆடி A8L ஃபேஸ் லிஃப்ட். காரைக் கொஞ்சம் நிதானமாக ரசித்தால்தான் நுணுக்கமான மாற்றங்களைக் கவனிக்க முடியும். முன் பக்கம் பானெட் புதிது; கிரில் புதிது; பம்பர் புதிது; ஹெட்லைட் புதிது. பின் பக்கம் பூட் கதவு புதிய டிஸைனில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் டெயில் லைட், பம்பர், எக்ஸாஸ்ட் டிப் ஆகியவையும் புதிதாக இருக்கின்றன.

நாம் ஓட்டிய 2014 ஆடி A8L 3.0 TDI மாடல், இந்தியாவில் குறைந்த சக்திகொண்ட A8 மாடல். இதில் இருக்கும் 3.0 லிட்டர் V6 TDI இன்ஜின், 255 bhp சக்தியையும், 59.14kgm டார்க்கையும் அளிக்கிறது. இது பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, 8 bhp சக்தியும் 3 kgm டார்க்கும் அதிகம். இன்ஜினை ஆன் செய்தவுடன் மெல்லிய சத்தத்துடன், ஸ்மூத்தான ஐடிலிங்கில் இயங்குகிறது இந்த இன்ஜின். காரை ஓட்டும்போதும் இவ்வளவு பெரிய டீசல் இன்ஜின் இயங்குவதற்கான அறிகுறிகளே இல்லை. இந்த இன்ஜினின் மிட்ரேஞ்ச் பவர் டெலிவரியும் அருமை.

8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் கச்சிதமாக இயங்குகிறது. மணிக்கு 200 கி.மீ வேகத்துக்குப் பிறகுதான் காரில் சக்தி குறைய ஆரம்பிக்கிறது. பழைய A8 கார், 1,890 கிலோ எடைகொண்டது. ஆனால், இந்த லேட்டஸ்ட் மாடல் 1,935 கிலோ எடைகொண்டது என்பதால், 0 - 100 கி.மீ வேகத்தை சற்று மெதுவாக 6.6 விநாடிகளில்தான் அடைகிறது புதிய A8 L.

'கம்ஃபோர்ட்’ மோடில் ஓட்டும்போது, மெதுவான வேகங்களில் படு ஸ்மூத்தான ஓட்டுதல் தரத்தைக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய பள்ளங்களைக் கடக்கும்போதுதான் உள்ளே சத்தம் கேட்கிறது. ஆனால், லேட்டஸ்ட் மெர்சிடீஸ் பென்ஸ் S கிளாஸ் காரைப் போன்ற ஓட்டுதல் தரம், புதிய A8 காரில் சிறப்பாக இல்லை. மேலும், கான்க்ரீட் சாலைகளில் ஓட்டும் போது, காருக்குள்ளே டயர் சத்தம் அதிகமாகக் கேட்கிறது. ஆல் வீல் டிரைவ் என்பதால், வேகமான வளைவுகளில் சாலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது A8. அதிக வேகங்களில் S கிளாஸைவிட யூத்ஃபுல் கையாளுமையைக் கொண்டிருக்கிறது. எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஸ்டீயரிங்கும் ஓகே!

ஆடி A8L ஃபேஸ் லிஃப்ட் மாடலின் இன்டீரியரைப் பற்றித்தான் வாடிக்கையாளர்களின் ஆர்வம் அதிகமாக இருக்கும். நாங்கள் ஓட்டிய காரில் பின் பக்கம் ஆப்ஷனல் எக்ஸிகியூட்டிவ் பேக்கேஜ் இருக்கைகள் இருந்தன. இவற்றைச் சாய்த்துக்கொள்ள முடியும்.

மசாஜ் வசதி, ரெஃப்ரிஜிரேட்டர், எலெக்ட்ரிக் ஃபுட் ரெஸ்ட், எழுதுவதற்கான டேபிள் பேட்கள் என சொகுசின் உச்சம் இந்த இருக்கைகள். கேபினில் அல்கான்டரா, அலுமினியம் மற்றும் மர வேலைப்பாடுகள் உள்ளன. ஆனால், இதன் கியர் லீவர் பயன்படுத்த வசதியாக இல்லை.

சென்டர் கன்ஸோலில் ஏகப்பட்ட பட்டன்கள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் புதிய மாடலில் இருக்கும் மிக முக்கிய மாற்றமே, இதன் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்தான். இதில் இருக்கும் 25 LED லைட்டுகள் தேவைக்கேற்ப தனித்தனியாக ஆன்/ஆஃப் ஆகும். இரவு நேரத்தில் இந்த காரை ஓட்டும்போது, எதிர்திசையில் வரும் காரின் ஓட்டுநருடைய கண்ணில் மட்டும் க்ளார் அடிக்காமல் இருக்க, அதற்கான LED விளக்குகளை மட்டும் ஆஃப் செய்துவிட்டு, சாலையை ஃபுல் பீமில் காட்டுவதே இதன் சிறப்பம்சம்.

புதிய 2014 ஆடி கி8லி, 3.0 ஜிஞிமி காரின் விலை 1.1 கோடி ரூபாய். ஆனால், சன் ரூஃப், மேட்ரிக்ஸ் லிணிஞி ஹெட்லைட், Bang&Olufsen ஸ்டீரியோ சிஸ்டம் போன்ற முக்கிய அம்சங்கள் அனைத்தும், ஆப்ஷனலாகத்தான் அளிக்கப்படுகின்றன. ஆனால், பென்ஸ் S கிளாஸ் காரை வீழ்த்துவதாக, புதிய ஆடி A8L இல்லை என்பதுதான் உண்மை.