பிறப்பினால் எல்லா மனிதர்களும் சமமே என்பதை, தமிழ் மொழி 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லும். ஆனால், நிஜத்தில் நிலைமை தலைகீழ். எல்லோருக்கும் இங்கே ஒரே மாதிரியான பாதுகாப்பு கிடைப்பது இல்லை. சாலையில் பயணிக்கும் கார்கள், ஆங்காங்கே திடீரெனத் தீப்பற்றி எரிவது, ஒரு புதிய செய்தியே இல்லை என்ற அளவுக்குச் சாதாரண நிகழ்வாக ஆகிவருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால், எத்தனை உயிர்கள் பலியாகின்றன என்பதைவிட, எத்தனை உயிர்கள் மரண பயத்துக்கு ஆளாகின்றன என்பதைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அதிர்ச்சியாக இருக்கும். 'நாம் பயணிக்கும் காரும் ஒருநாள் இதுபோன்று திடீர் என்று தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது’ என்ற பயத்துடன்தான் பலரும் பயணிக்கும் நிலைமை. மத்தியில் பதவியேற்றிருக்கும் புதிய அரசு, இந்தப் பிரச்னை குறித்து தனிக் கவனம் செலுத்துவது ஆறுதல் அளிக்கிறது.

'கார்கள் ஏன் இப்படி 'திடீர் திடீர்’ என்று தீப்பிடித்து எரிகின்றன’ என்பதை The central motor vehicles Rules-technical standing Committee தீவிரமாக ஆராய இருக்கிறது. இனி இப்படி ஏதாவது கார் 'திடீர்’ என்று தீப்பிடித்து எரிந்தால், 'மியூஸிக் சிஸ்டத்துக்கான ஒலிபெருக்கிகளைப் பொருத்தத் தகுதி இல்லாதவர்களால் கார் கையாளப்பட்டதுதான் காரணம்!’ என்று சொல்லி, கார் நிறுவனங்கள் தங்களின் கடமையைத் தட்டிக்கழித்துவிட்டுத் தப்பித்துவிட முடியாது. நடந்த கார் தீ விபத்துக்கு வெளியாட்கள் பொருத்திய ஒலிபெருக்கி வொயர் இணைப்புதான் காரணமா என்பதும், இனி இந்த கமிட்டியின் விசாரணை வளையத்துக்குள் வந்துவிடும்.

'இந்தப் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் அணுக, அரசு தீர்மானித்திருக்கிறது!’ என்று கூறியிருக்கும் மத்தியப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, 'காரின் தரத்தை மேம்படுத்த ஆயிரமாயிரம் கோடிகளைச் செலவிடுவதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கார் நிறுவனங்கள், உயிர் சம்பந்தப்பட்ட இந்த முக்கியப் பிரச்சனையைத் தீர்க்க ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை’ என்று கோபத்துடன் கேட்டிருப்பதுடன், 'இனி முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும்’ என்று கண்டிப்போடும் கூறியிருக்கிறார்.

கார் தீப்பற்றி எரிவதற்கு கார் தயாரிப்பில் இருந்த பிரச்னைதான் காரணம் என்று இந்த கமிட்டி கண்டறிந்தால், அந்த கார் கம்பெனி விற்பனை செய்த மற்ற கார்களையும் திரும்ப அழைத்து, பிரச்னையைச் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று கார் கம்பெனிகளுக்கு அரசு அழுத்தம் கொடுக்குமாம். இது போதாது; உயிர் சம்பந்தப்பட்ட இதுபோன்ற பிரச்னையில் அலட்சியமாக இருந்ததற்காக கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டால்தான், பயணிகளின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க முடியும்.

என்றும் உங்களுக்காக,

ஆசிரியர்