Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள்!

மோட்டார் நியூஸ்

நிறுவனத்தின் லோகோவை மாற்றிய கையோடு தனது கிளாஸிக், தண்டர்பேர்டு பைக்குகளுக்குப் புதிய கலர் ஆப்ஷன்களைக் கொடுத்துள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். கிளாஸிக் 350 பைக்குக்கு, இப்போது நீலம் மற்றும் வெள்ளை நிற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கிளாஸிக் 500 பைக்குக்கு மெரூன் நிற ஸ்ட்ரைப்புகள் கொண்ட பீஜ் வண்ண ஆப்ஷன்; தண்டர்பேர்டு 350 மற்றும் 500 மாடல் பைக்குகளுக்கு நீலம் மற்றும் பழுப்பு வண்ண ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கலர் மாடல்களுக்கென கூடுதல் விலை எதுவும் கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃப்யூல் இன்ஜெக்ஷனுடன் FZ

மோட்டார் நியூஸ்

தயாராகிவிட்டது யமஹா FZ-S V2.0. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்தப் புதிய மாடலின் டிஸைன், மிரட்டலாக இருக்கிறது. முன்பக்க ஃபெண்டர், பெட்ரோல் டேங்க்கின் டிஸைனில் மாற்றங்கள் இல்லை. ஆனால், பைக்கின் டிஜிட்டல் கிளஸ்டர் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம், ஏர் இன்டேக் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய இன்ஜின்தான் என்றாலும், இந்த V2.0 மாடலில் கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் கொடுக்கப் பட்டுள்ளது!

செப்டம்பரில் வருகிறது ஃபோர்ஸ் கூர்கா!

மோட்டார் நியூஸ்

2013 பிப்ரவரி மாதமே ஃபோர்ஸ் கூர்கா எஸ்யுவி-யின் டெக்னிக்கல் விவரங்களும், விலைப் பட்டியலும் அறிவிக்கப்பட்டாலும், விற்பனையை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் துவக்க இருக்கிறது ஃபோர்ஸ் மோட்டார்ஸ். 'இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஆட்டோமொபைல் எக்ஸ்பர்ட்டுகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டு, காரை மேலும் மேம்படுத்தியிருக்கிறோம்’ என்கிறார்கள்.

புதிய ஸ்டைலிங் வீகோ!

மோட்டார் நியூஸ்

புதிய மாற்றங்களுடன் 2014 மாடலாக வெளிவந்திருக்கிறது டிவிஎஸ் வீகோ. எக்கனாமி மீட்டர்,  டியூப்லெஸ் டயர்கள், எக்ஸாஸ்ட் கேனிஸ்டர் ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், பைக்கின் வெளிப்புறத்தில் புதிய ஸ்டிக்கர் கிராஃபிக்ஸ் சிங்கிள், டூயல் வண்ணங்களில் வருகின்றன. ரீ-ட்யூன் செய்யப்பட்டிருக்கும் புதிய வீகோவின் 110 சிசி இன்ஜின், அதிகபட்சமாக 8 bhp சக்தியை 7,500rpm ல் அளிக்கிறது. புதிய வீகோவுக்கும், பழைய வீகோவுக்கும் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

டஸ்ட்டர்ஆஃப் ரோடிங் ஆர்ப்பாட்டம்!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் 1  லட்சம் டஸ்ட்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டதைக் கொண்டாடுகிறது ரெனோ. கோவையில் தனது டஸ்ட்டர் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க, ஆஃப் ரோடு டிரைவிங் அனுபவத்துக்கு ஏற்பாடு செய்தது. கடந்த ஜூன் 21-ம் தேதி கோவையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கோபி கிருஷ்ணன், ''இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு தங்களது டஸ்ட்டர் கார் மற்ற வாகனங்களில் இருந்து எவ்வாறு சிறந்தது என்பதை அறிந்து கொள்ள வைப்பதுதான். வாகனத்தின் கண்டிஷன், கிரவுண்ட் கிளியரன்ஸ், பவர் மற்றும் சாமர்த்தியமான டிரைவிங் அனுபவம் ஆகியவற்றை அறிந்துகொள்ள வாய்ப்பாக இது அமையும். ஆஃப் ரோடிங் சாகசத்துக்காக நேர்த்தியான வளைவுகள், மேடுகள், மற்றும் நீர் நிரப்பிய குட்டைகளைச் செயற்கையாக உருவாக்கினோம். சாலையில் மட்டுமே பயணித்தவர்களுக்கு இது நிச்சயம் நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கும்' என்றார். மிகக் குறைந்த நேரத்தில் பயணத்தை நிறைவு செய்த வாடிக்கையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

-  ஞா.சுதாகர்

சென்னையில் 'ஐஷர் ப்ரோ!’

மோட்டார் நியூஸ்

வால்வோ ஐஷர் கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் நிறுவனம், தமிழகத்தில் 'ஐஷர் ப்ரோ 1000’ மற்றும் 'ஐஷர் ப்ரோ 3000’ ரக ட்ரக்குகளை அறிமுகப்படுத்தியது. 'ஐஷர் ப்ரோ 1000’ என்பது 5 டன் முதல் 14 டன்கள் வரை சுமை தாங்கும் திறன்கொண்டது. "E2 Plus" ரக ட்ரக்குகளுக்கு மாற்றாக வந்திருக்கும் இந்த ட்ரக்கில் ணி483 இன்ஜின் உள்ளது. முற்றிலும் புதிய மாடலாக அறிமுகமாகியிருக்கும் 'ஐஷர் ப்ரோ 3000’ ரக ட்ரக், 10 - 15 டன்கள் எடையைத் தாங்கும் சக்திகொண்டது. இதில் E-494 CRS இன்ஜினும், ஓட்டுநர் இருக்கையை ஆறுவிதமாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளன.

 ஆல்ட்டோவை முந்திய டிசையர்!

வழக்கமாக டாப் 10 கார்கள் வரிசையில் ஆல்ட்டோதான் முதல் இடத்தில் இருக்கும். ஆனால், மே மாத விற்பனையில் டிசையரும்,  ஸ்விஃப்ட்டும் தூள் கிளப்பியதால், ஆல்ட்டோவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு, முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. ஹுண்டாய் எக்ஸென்ட் 7,792 கார்கள் விற்பனையாகி டாப் டென் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறது. ஹோண்டா சிட்டி 7,216 கார்கள் விற்பனையாக, ஹூண்டாய் வெர்னா 3,334 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது.

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism