நீண்ட காலமாக மாருதியும், ஹூண்டாயும் மட்டுமே பங்குபோட்ட பட்ஜெட் மார்க்கெட்டுக்குள், புதிதாக நுழைந்திருக்கிறது நிஸானின் டட்ஸன். 'கோ’ என்ற பெயரில் நிஸான் அறிமுகப்படுத்தியிருக்கும் பட்ஜெட் கார், ஹூண்டாய்க்குத்தான் மிகப் பெரிய போட்டியாக வந்திருக்கிறது. விலை குறைவான கார் என்றாலும், டட்ஸன் கோ சின்ன கார் அல்ல. 1.2 லிட்டர் இன்ஜின், 3.7 மீட்டர் நீளம் என முழுமையான ஹேட்ச்பேக் காராக இருக்கிறது. சின்ன கார் மார்க்கெட்டில் தரமானது எனப் பெயர் பெற்ற ஹூண்டாய் ஐ10 காரை வீழ்த்துமா டட்ஸன் கோ?

டட்ஸன் என்ற பெயரைக் கேட்டவுடனே சிலருக்கு 'இது சைனா காரா?’ என்ற சந்தேகம் வரும். டட்ஸன் என்கிற பெயர்தான் புதியதே தவிர, இது நிஸானின் கார்தான். இன்ஜின், உதிரி பாகங்கள் அனைத்துமே நிஸான்தான். சென்னையில் உள்ள நிஸான் தொழிற்சாலையில் தயாராகும் கார்தான் டட்ஸன்.

டிஸைன்

மைக்ரா பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கார் என்றாலும், மைக்ராவின் தோற்றத்தில் இருந்து முற்றிலுமாக மாறியிருக்கிறது டட்ஸன் கோ. பெரிய கிரில், நீளமான ஹெட்லைட்ஸ், பானெட்டின் மீது படர்ந்திருக்கும் இரட்டைக் கோடுகள் என ஹேட்ச்பேக் கார்களுக்கான விதிமுறைகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது டட்ஸன் கோ. பாதியி லேயே முடிந்துவிடும் ஹூண்டாய் ஐ10 காரின் பின்பக்கம் போல இல்லாமல், அழகாக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது டட்ஸன் கோ. ஆனால், பெரிய வீல் ஆர்ச்சுகளுக்குச் சம்பந்தம் இல்லாமல், சிறிய டயர்களைப் பொருத்தியிருப்பது காரின் பிரம்மாண்டத்தைக் குறைத்துவிடுகிறது.

'டால் பாய்’ டிஸைனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கார், ஹூண்டாய் ஐ10. கோ அளவுக்கு முழுமையான ஹேட்ச்பேக் காராக இல்லை என்றாலும், இதன் பூனைக் கண் வடிவ ஹெட்லைட்ஸ் கவர்கிறது. முன்பக்க ஸ்பிளிட் கிரில், காருக்குப் புதிய அடையாளத்தைக் கொடுக்கிறது.

உள்ளே...

வெளியே முழுமையான காராக இருக்கும் டட்ஸன் கோ, காருக்குள் நுழைந்த பிறகுதான் இது பட்ஜெட் கார் எனப் புரிய வைக்கிறது. முன்பக்க இருக்கைகள் ஃப்ளாட்டாக இருப்பதோடு, ஹேண்ட் பிரேக் மற்றும் கியர் லீவரை டேஷ்போர்டுடன் இணைத்துவிட்டதால், முன்பக்க இருக்கைகளில் அதிக இடவசதி. ஆனால், இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் யாரும் உட்கார முடியாது. பைகள் அல்லது ஏதாவது சிறிய பொருட்களை வைத்துக்கொள்ளலாம். இது புதிய டிஸைன்தான் என்றாலும், 'விலை மலிவான காரோ’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, டேஷ்போர்டில் வைக்கப்பட்டிருக்கும் ஹேண்ட் பிரேக். ஸ்பீக்கர்கள் உண்டு. ஆனால், ஆடியோ சிஸ்டம் இல்லை. ஆக்ஸ்-இன் போர்ட் மூலம் ஸ்மார்ட் போன் அல்லது ஐ-பாட் இணைத்து பாடல்கள் கேட்கலாம். யுஎஸ்பி போர்ட்டும் உண்டு. ஆனால், இதில் பாடல் கேட்க முடியாது. ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம். டயல்களைப் பொறுத்தவரை டேக்கோ மீட்டரும், ஸ்பீடோ மீட்டரும் அனலாக் மீட்டராக இருக்கின்றன. ஃப்யூல் இண்டிகேட்டர், இருக்கும் பெட்ரோல் மூலம் இன்னும் எவ்வளவு கி.மீ தூரம் பயணிக்கலாம் என்கிற 'டிஸ்டன்ஸ் டு எம்ப்டி’ மீட்டர், டிரிப் மீட்டர் ஆகியவை டிஜிட்டலாக உள்ளன. ஆனால், டயல்களுக்கான பேக்லைட், பழைய மஞ்சள் பல்பு கலரில் இருப்பது அலுப்பு.

பின்பக்கத்தைப் பொறுத்தவரை இடவசதி அதிகம். மூன்று பேர் கால்களை நீட்டி, மடக்கி வசதியாக உட்கார்ந்து பயணிக்கலாம். ஆனால், இது பட்ஜெட் கார் என்பதை நினைவுப்படுத்தும் வகையில், ப்ரீ - டென்ஷன் சீட் பெல்ட் இல்லை. இதனால், சீட் பெல்ட் தேவையில்லாத சமயங்களில் சீட்டின் மேல் படர்ந்திருப்பது உறுத்தலாக இருக்கிறது.

ஹூண்டாய் ஐ10 காரின் உள்பக்கம், இது ஒரு காம்பேக்ட் கார் என்பதை நினைவுப்படுத்துகிறது. டட்ஸன் கோ காரில் இருக்கைகள் உயரம் குறைவாக இருக்க, ஐ10 காரில் உட்காரும்போது உயரமான இடத்தில் உட்காருவது போன்ற உணர்வு வருகிறது. மேலும், முன்பக்க இருக்கைகள் உயரமாக இருப்பதால், முழுச் சாலையையும் பார்த்து ஓட்ட முடிகிறது. ஆனால், பின்பக்கக் கண்ணாடி மிகவும் சிறிதாக இருப்பது, காருக்குள் இடவசதி குறைவு என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இது டட்ஸன் கோ காரைவிட நீளத்தில் 200 மிமீ-யும், வீல்பேஸில் 70 மிமீ-யும் குறைவு என்பதால், கோ காரைவிட இடவசதி குறைவுதான். மேலும் டட்ஸன் கோ காரின் பின் பக்கத்தில் இருப்பதுபோன்ற ஹெட்ரெஸ்ட், ஐ10 காரில் இல்லை. டயல்களைப் பொறுத்தவரை இங்கேயும் ஸ்பீடோ, டேக்கோ மீட்டர்கள் அனலாக். மற்றவை டிஜிட்டல். வேகத்துக்கு ஏற்றபடி எந்த கியரில் செல்ல வேண்டும் என்பதைச் சொல்லும் டிஜிட்டல் இண்டிகேட்டர் உண்டு. ஆனால், 'டிஸ்டன்ஸ் டு எம்ப்டி’ மீட்டர் இல்லை.

இரட்டை வண்ண டேஷ் போர்டு ஃப்ரெஷ் ஆக இருப்பதோடு, ஏராளமான வசதிகளையும் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் பாகங்களின் தரம் டட்ஸன் கோ-வுடன் ஒப்பிடும்போது, சூப்பர் என்றே சொல்லலாம். டட்ஸன் கோ காரில் முன்பக்கக் கதவுகளில் மட்டுமே பவர் விண்டோஸ் இருக்க, ஐ10 காரில் நான்கு கதவுகளிலுமே பவர் விண்டோஸ் வசதி உண்டு. முழுமையான மியூஸிக்/எஃப்எம் ப்ளேயர் உண்டு என்பதோடு யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ்-இன் போர்ட் வசதிகளும் உள்ளன.

டிக்கி இடவசதியைப் பொறுத்தவரை டட்ஸன் கோ காரில்தான் பொருட்கள் வைத்துக்கொள்ள அதிக இடம் உள்ளது. ஹூண்டாய் ஐ10 காரைவிட டட்ஸன் கோ காரில் 40 லிட்டர் கொள்ளளவு இடம் அதிகம். கிரவுண்ட் கிளியரன்ஸைப் பொறுத்தவரை, ஐ10 காரைவிட டட்ஸன் கோ காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 5 மிமீ அதிகம்.

இன்ஜின்

நிஸான் மைக்ராவில் இருக்கும் அதே 1.2 லிட்டர் இன்ஜின்தான் டட்ஸன் கோ காரிலும் இடம் பிடித்திருக்கிறது. ஹூண்டாய் ஐ10 காரில் இருப்பது 1.1 லிட்டர் இன்ஜின். டட்ஸன் கோ அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம்-ல் 67தீலீஜீ சக்தியை வெளிப்படுத்த, ஹூண்டாய் ஐ10 அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 68bhp சக்தியை வெளிப்படுத்துகிறது.

பவரில் இரண்டு கார்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மூன்று சிலிண்டர் இன்ஜின்கொண்ட டட்ஸன் கோ காரில் இருந்து வரும் சத்தம் காதுகளை எரிச்சலாக்க, 4 சிலிண்டர் இன்ஜின் கொண்ட ஹூண்டாய் ஐ10 சத்தம் இல்லாமல் இருக்கிறது..

ஆரம்ப வேகத்தில் டட்ஸன் கோ காரைவிட ஹூண்டாய் ஐ10 காரின் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது. ஆனால், வேகம் செல்லச் செல்ல டட்சனின் பிக்-அப் அதிகமாக இருக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை 15.55 விநாடிகளில் ஹூண்டாய் ஐ10 கடக்க, இதே வேகத்தை 14.54 விநாடிகளில் கடக்கிறது டட்ஸன் கோ. ஹூண்டாய் ஐ10 அதிகபட்சமாக மணிக்கு 149 கி.மீ வேகத்தைத் தொட, டட்ஸன் கோ மணிக்கு 155 கி.மீ வேகத்தைத் தொடுகிறது.

நெடுஞ்சாலையில் 100 - 120 கி.மீ வேகத்தில் செல்லும்போதும் டட்ஸன் கோ காரில் ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருக்கிறது. இன்னும் வேகமாகப் போகலாம் என இன்ஜின் தூண்டுகிறது. இது, ஐ10 காரில் மிஸ்ஸிங். 100 கி.மீ வேகத்தைத் தாண்டியவுடனே இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் ஃப்ளாட்டாகி விடுகிறது. இதனால், பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை டட்ஸன் கோ முன்னிலை வகிக்கிறது. ஆனால், இன்ஜின் தரத்தில் டட்ஸன் மிகவும் பின்தங்கியிருக்கிறது. கியர் ஷிஃப்ட் ஸ்மூத்தாக இல்லை என்பதோடு, இன்ஜின் சத்தமும், வெளிச்சாலை சத்தமும் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது. கிட்டத்தட்ட ஒரு டீசல் இன்ஜின்கொண்ட காரை ஓட்டுவது போன்ற உணர்வைத் தருகிறது டட்ஸன் கோ.

சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, மிகவும் சாஃப்ட்டான சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கிறது டட்ஸன் கோ. இதனால், நகருக்குள் மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அலுங்கல் குலுங்கல்கள் அதிகமாகத் தெரியவில்லை. ஆனால், வேகமாகப் பறக்கும்போது, சாஃப்ட் சஸ்பென்ஷன் ஓட்டுதல் தரத்தைக் குறைத்துவிடுகிறது.

விலை மற்றும் மைலேஜ்

இந்த செக்மென்ட்டில் கார்களின் தலையெழுத்தைத் தீர்மானிப்பது மைலேஜும், விலையும்தான். 1.1 லிட்டர் திறன் கொண்ட ஹூண்டாய் ஐ10 நகருக்குள் லிட்டருக்கு 12 கி.மீ, நெடுஞ்சாலையில் 16.3 கி.மீ மைலேஜ் தருகிறது.

1.2 லிட்டர் இன்ஜின்கொண்ட டட்ஸன் கோ, நகருக்குள் லிட்டருக்கு 12.8 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.9 கி.மீ மைலேஜ் தருகிறது. மைலேஜில் வின்னரான டட்ஸன் கோ, விலையிலும் வின்னர்தான். விலை உயர்ந்த ஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 5.12 லட்சம் ரூபாய். டட்ஸன் கோ டாப் வேரியன்டான 'T’ மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 4.24 லட்சம் ரூபாய். விலையில் ஹூண்டாய் கிட்டத்தட்ட 90 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருந்தாலும், விலைக்கேற்ற வசதிகள் கொண்ட காராக இருப்பது, ஐ10 காரின் பலம்.

இன்ஜின் தரத்திலும், சிறப்பம்சங்களிலும், பில்டு குவாலிட்டியிலும் சிறந்த கார் ஹூண்டாய் ஐ10 என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், விலை குறைவு, அதிக இடவசதி, மைலேஜ் அதிகம் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த 1.2 லிட்டர் இன்ஜின் என பட்ஜெட் கார் வேண்டும் என்பவர்களுக்கான நம்பர் ஒன் சாய்ஸாக இருக்கிறது டட்ஸன் கோ. இன்ஜின் சத்தம் அதிகமாகக் கேட்கிறது, பில்டு குவாலிட்டி ரொம்ப சுமார் என்கிற மைனஸ்கள் இருந்தாலும், நகரப் பயன்பாட்டுக்கான பட்ஜெட் கார் என்கிற வகையில், டட்ஸன் கோ காரே போட்டியில் வெற்றி பெறுகிறது!