தொடர்ந்து நான்கு ரேஸ்களில் வெற்றி பெற்றுவந்த லூயிஸ் ஹாமில்ட்டனின் வெற்றிக்கு, நிக்கோ ராஸ்பெர்க்கும் ரிச்சியார்டோவும் தடை போட்டிருக்கிறார்கள். மலேசியா, பஹ்ரைன், சீனா, ஸ்பெயின் என தொடர்ந்து நடைபெற்ற நான்கு ரேஸ்களிலும் வெற்றி பெற்று அசத்திய லூயிஸ் ஹாமில்ட்டனுக்கு மொனாக்கோவிலும், கனடாவிலும் சின்ன சறுக்கல்!

மொனாக்கோ

சாதாரண சாலைகளிலும், நகர வீதிகளிலும் நடைபெறும் ரேஸ் போட்டி என்பதால், மொனாக்கோ ரேஸ் எப்போதுமே ஸ்பெஷல். ஆபத்தான வளைவுகள் அதிகம். ரேஸ், செம த்ரில்லாக இருக்கும். மே 25-ம் தேதி ஃபார்முலா-1 சீஸனின் ஆறாவது போட்டி மொனாக்கோவில் நடந்தது. மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்தார். லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாம் இடத்தில் இருந்தும், ரெட்புல்- ரெனோ அணியின் டேனியல் ரிச்சியார்டோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். வெட்டல் நான்காம் இடத்தில் இருந்தும், ஃபெராரியின் அலான்சோ ஐந்தாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்க, முதல் லேப்பே பல திடீர் திருப்பங்களைச் சந்தித்தது. டர்போ பிரச்னையால் ரேஸ் துவங்கிய சிறிது நேரத்திலேயே வெட்டல் ரேஸில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து விபத்து மற்றும் மெக்கானிக்கல் கோளாறுகளால் செர்ஜியோ பெரேஸ், மால் டொனால்டோ, ஆட்ரியான் சுட்டில் என அடுத்து மொத்தம் ஏழு வீரர்கள் ரேஸைவிட்டு வெளியேறினர்.

மொத்தம் 78 லேப்புகள்கொண்ட இந்த ரேஸில், இறுதிவரை முயன்றும் ஹாமில்ட்டனால், ராஸ்பெர்க்கை முந்த முடியவில்லை. இதனால், பந்தய தூரத்தை 1 மணி நேரம் 49 நிமிடங்கள், 27 விநாடிகளில் கடந்து வெற்றிபெற்றார் ராஸ்பெர்க். இதில், டேனியல் ரிச்சியார்டோ மூன்றாம் இடம் பிடித்தார்.

கனடா

2014-ம் ஆண்டின் ஏழாவது போட்டி, கனடாவின் மொன்ட்ரியால் ரேஸ் மைதானத்தில் ஜூன் 8-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் மீண்டும் ராஸ்பெர்க் முதல் இடம் பிடிக்க, லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாம் இடம் பிடித்து, ரேஸை இரண்டாம் இடத்தில் இருந்து துவக்கினார். இந்த ரேஸை கோளாறு ரேஸ் என்று சொல்லும் அளவுக்கு விபத்துகளும், இன்ஜின் கோளாறுகளும் அதிகம் இருந்தன. மொத்தம் 11 ரேஸ் வீரர்கள் பல்வேறு காரணங்களால் ரேஸை முடிக்கவில்லை. பிரேக் பிரச்னையால் 42-வது லேப்பின்போது லூயிஸ் ஹாமில்ட்டன் ரேஸில் இருந்து வெளியேற, ரெட்புல் -ரெனோ அணியின் ரிச்சியார்டோ எளிதில் வெற்றி பெற்றார். நிக்கோ ராஸ்பெர்க் இரண்டாம் இடமும், செபாஸ்ட்டியன் வெட்டல் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

இதுவரை 8 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், நிக்கோ ராஸ்பெர்க் 140 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 118 புள்ளிகளுடன் லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாம் இடத்திலும், ரிச்சியார்டோ 79 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல ஹாமில்ட்டன் - ராஸ்பெர்க் இருவரும் கடுமையாக மோதுவார்கள் என்பதால், பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது!