சின்ன வயசுல இருந்தே கார்கள் மீது அதிக காதல். மிடில் கிளாஸ் வாழ்க்கையில், சொந்தமாக ஒரு கார் என்பது பிரம்மாண்ட கனவுதானே! மேலும், நகரத்து வாழ்க்கையில் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் வெளியே அழைத்துச் செல்வதில் இருந்த சிரமத்தைப் போக்க, கார் வாங்க வேண்டும் என முடிவு செய்தேன். பின்பு, நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு என்னென்ன கார்கள் இருக்கின்றன என்பதைப் பற்றிய தகவல்களை இணையதளத்தில் திரட்டினேன். அதன்படி வேகன்-ஆர், ஆல்ட்டோ கே10 அல்லது டட்ஸன் கோ - இவற்றில் ஏதாவது ஒரு காரை வாங்கலாம் என முடிவு செய்தேன். இன்ஜின் அளவு, பூட் ஸ்பேஸ் ஆகியவற்றில் டட்ஸன் கோ என்னைக் கவர்ந்ததால், இதையே வாங்கிவிடலாம் என முடிவுசெய்து சரவணம்பட்டி ரமணி நிஸான் ஷோரூமை அணுகினேன்.

ஷோரூம் அனுபவம்

ரமணி நிஸான் ஷோரூமில் இருந்த சேல்ஸ்மேனின் அப்ரோச், சிறப்பாக இருந்தது. டட்ஸன் கோ பற்றி எனக்கு வேண்டிய தகவல்கள் அனைத்தையும் தெளிவாகக் கூறினார். கடந்த மார்ச் மாதம் ரிலீஸான டட்ஸனுக்கு பிப்ரவரியில் 11,000 ரூபாய் முன் பணம் செலுத்தி புக் செய்துவிட்டேன். என்னுடைய தந்தை, தொழில்முறை வாகன ஓட்டுநர். எனவே, கார் டெலிவரி பெறும்போது அவரை ஷோரூமுக்கு அழைத்துச் சென்று, அவருடைய கையால் காரை வாங்க வேண்டும் என்ற விருப்பத்துடன், தந்தையை ஷோரூமுக்கு அழைத்துச் சென்றேன். அங்கே சென்று பார்த்தால், 'கோவையிலேயே நீங்கள்தான் முதலாவது டட்ஸன் கோ காரை வாங்கும் வாடிக்கையாளர்’ என்ற கௌரவத்துடன் சிறப்பான உபசரிப்புடன் எனக்கு காரை டெலிவரி கொடுத்தனர். எனது வாழ்க்கையில் நான் வாங்கிய முதல் கார் இது. அந்தத் தருணத்தில் என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.

நான்கு லட்ச ரூபாய் விலைகொண்ட சின்ன கார்களில் 1,200 சிசி திறன்கொண்ட கார், டட்ஸன் கோ மட்டுமே! சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, நிஸானின் இன்ஃபினிட்டி கார்களில் பொருத்தும் சஸ்பென்ஷன் டெக்னாலஜி இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இதே செக்மென்டில் வரும் மற்ற கார்களைப் போலவே, இதிலும் 13 இன்ச் டயர் பொருத்தியிருக்கிறார்கள். பவர் விண்டோஸ் கண்ணாடிகளைக் கையாள்வதற்கு எளிதாக இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் போதுமானதாக இருக்கிறது. பின் இருக்கைகளை மடித்துக்கொள்ளும் வசதி இருப்பதால், லக்கேஜ் வைத்துக்கொள்ள அதிகமான இடவசதியும் கிடைக்கிறது.

ஹனிகோம்ப் ஹெட்லைட்ஸ் மற்றும் டி கிரில் டிஸைன் அருமையாக இருப்பதால், காரின் வெளிப்புறத் தோற்றம் மிகவும் ஸ்டைலாக இருக்கிறது. இருக்கைகள் கனெக்டட் சீட்களாகப் பொருத்தியிருப்பதால், அதிக இடவசதி உள்ளது. ஹேண்ட் பிரேக்கை டேஷ்போர்டில் இணைத்துக் கொடுத்திருப்பதால், அதை ஹேண்டில் செய்வதற்கு எளிதாகவும், காம்பேக்ட்டாகவும் இருக்கிறது. மைலேஜ் 20.6 கி.மீ கிடைக்கும் என்று ஷோரூமில் தெரிவித்தார்கள். ஆனால், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 17 கி.மீ, நகருக்குள் 15 கி.மீ மட்டுமே மைலேஜ் கிடைக்கிறது. இது தொடர்பாக ஷோரூமை அணுகியபோது, சர்வீஸ் செய்யச் செய்ய மைலேஜ் பிக்-அப் ஆகிவிடும் என்று நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்.

இன்டெலிஜென்ட் வைப்பர் செயல்படும் விதம் அருமை. மழைக் காலத்தில் அதனுடைய பயன்பாடு திருப்திகரமாக உள்ளது. மேலும், ஃபாலோ மீ ஹெட்லேம்ப் வசதியைக் கொடுத்திருக்கிறார்கள். இரவு நேரங்களில் வீட்டுக்கு வந்து சேரும்போது வெளிச்சமின்றி இருட்டாக இருப்பதால், பாலோ மீ ஹெட்லேம்ப் ஆப்ஷனை ஆன் செய்துவிட்டு, நாம் காரை முழுமையாகப் பூட்டிவிட்டு இறங்கிய பின்பும் ஃபாலோ மீ ஹெட் லேம்ப் வெளிச்சத்தை அளிக்கிறது. கியர் ஷிஃப்ட்டிங் கைடு ஆப்ஷன், நாம் எந்த ஆர்பிஎம்-ல் கியரை மாற்றலாம் என்ற வழிகாட்டுதலை அளிக்கிறது. ஆக்ஸ் இன் போர்ட் வசதியைப் பயன்படுத்தி மொபைல் அல்லது எம்பி-3 ப்ளேயரில் இருந்து பாடல்கள் கேட்கலாம். இதில், மொபைல் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் அளித்திருக்கிறார்கள். பேனட் டிஸைன் தரமாக இருக்கிறது. டெயில் லேம்ப்ஸ் ஸ்டைலாக உள்ளன.

பிடித்தது

இருக்கைகள் அனைத்தும் மனிதனின் முதுகுத் தண்டுவடத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இவை மிகவும் வசதியாக இருப்பதால், எவ்வளவு அதிக தூரம் பயணம் செய்தாலும் முதுகு வலி, சோர்வு ஏற்படவில்லை. இந்த செக்மென்டில் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட கார் டட்ஸன் கோ மட்டுமே! ஸ்விஃப்ட்டில்கூட 215 லிட்டர்தான் பூட் ஸ்பேஸ் இருக்கிறது. ஆனால், டட்ஸன் கோ 265 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது. பயணங்களில் நமக்குத் தேவையான அனைத்து லக்கேஜ்களையும் எடுத்துச் செல்ல டட்ஸன் கோ இடமளிக்கிறது. ஸ்பீடு சென்ஸ் பவர் ஸ்டீயரிங் மிகவும் சிறப்பாக இருப்பதால், ஓட்டுதல் தரம் அருமை. வெளிப்புற வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருப்பதால், பட்ஜெட் காராக இருந்தாலும், ரிச் லுக் கொடுக்கிறது.

பிடிக்காதது

கியர் ஷிஃப்டிங் ஸ்மூத்தாக இல்லை. சைடு மிரரை உள்ளே இருந்து அட்ஜஸ்ட் செய்யும் ஆப்ஷன் இல்லை. பின் இருக்கையில் சீட் பெல்ட் மேனுவலாகக் கொடுத்திருப்பதால், அதைப் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. முன் இருக்கைகள் கனெக்டட் சீட்களாக இருப்பது இடவசதியை அதிகரித்துக் கொடுத்தாலும் ஏ.சியை ஆன் செய்யும்போது அதன் குளிர் பின் இருக்கைகளுக்குப் பரவ மிகவும் தாமதமாகிறது. பிளாஸ்டிக் பாகங்களின் தரம் மிகவும் சுமாராக இருக்கிறது. முன்பக்க கேபின் க்ளோவ்பாக்ஸ் மூடும் வசதி இல்லாதது மைனஸ். குழந்தைகளோடு பயணம் செய்யும்போது, க்ளோவ்பாக்ஸில் வைக்கப்பட்டு இருக்கும் பொருட்களை விளையாட்டுத்தனமாக குழந்தைகள் தூக்கிப் போட்டுவிடும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், நான்கு லட்சம் ரூபாய்க்குள் கொஞ்சம் பெரிய, பவர்ஃபுல் காரை வாங்கிய திருப்தியைக் கொடுத்திருக்கிறது டட்ஸன் கோ.