Published:Updated:

மோட்டார் கிளினிக்!

மோட்டார் கிளினிக்!

மோட்டார் கிளினிக்!

மோட்டார் கிளினிக்!

Published:Updated:
மோட்டார் கிளினிக்!

நான் எதிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவன். இப்போது ஒரு 250 சிசி பைக் வாங்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறேன். ஹோண்டா, கேடிஎம் போன்ற வழக்கமான பைக் தயாரிப்பாளர்களுக்குப் பதிலாக, சுஸ¨கி இனஸ¨மா வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்!
மோட்டார் கிளினிக்!

சுஸ¨கி இனஸ¨மா, டெக்னிக்கலாக நல்ல பைக். ஆனாலும், ஒரு 250 சிசி பைக்குக்கான பிரத்யேக ஸ்டைலிங் இல்லை. மேலும், டல்லான தோற்றத்தைக் கொண்டுள்ளது. நல்ல மைலேஜ் தரும் இன்ஜின் இருந்தாலும், பெர்ஃபாமென்ஸ் சுமார்தான். இனஸ¨மாவின் ரைடிங் பொஸிஷன் இதன் பெரிய ப்ளஸ். ஆனால், கையாளுமை சாதாரணமாக உள்ளது. இனஸ¨மாவைப் பொறுத்தவரை நீங்களே டெஸ்ட் டிரைவ் செய்துதான் முடிவெடுக்க வேண்டும்.

அராய் சான்றிதழின்படி ஹோண்டா சிட்டிதான் இந்தியாவின் நம்பர் ஒன் மைலேஜ் கார் என்கிறார்கள். ஆனால், மோட்டார் விகடனின் டாப் 10 மைலேஜ் கார்கள் பட்டியலில் சிட்டி 9-வது இடத்தில் இருக்கிறதே. 'அராய்’ஆக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும் இந்திய சாலைகளில்தானே டெஸ்ட் செய்கிறீர்கள்? பின்னர் எப்படி ஒரே காரில் இரண்டுவிதமான மைலேஜ் கிடைக்கின்றன?

மோட்டார் கிளினிக்!

ARAI (அராய்)சான்றிதழின்படி, ஒரு லிட்டர் டீசலுக்கு 26 கி.மீ மைலேஜ் அளிக்கிறது, புதிய ஹோண்டா சிட்டி. அதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் என்பதால்தான் அராயின் சோதனைகளில் இவ்வளவு அதிகமான மைலேஜை அளித்திருக்கிறது புதிய சிட்டி. ஆனால் அராய், கார்களைச் சோதனை செய்யும் விதம் வேறு; மோட்டார் விகடன் கார்களைச் சோதனை செய்யும் விதம் வேறு. அராய் அமைப்பில் 'இண்டியன் டிரைவிங் சைக்கிள்’ என்ற முறைப்படி காரை சோதனை செய்வார்கள். இது பெரும்பாலும், பரிசோதனைக் கூடத்திலேயே நடந்து முடிந்துவிடும். மிகவும் கச்சிதமான எடை, எரிபொருள் கணக்குகளோடு செய்யப்படுகிறது இந்தப் பரிசோதனை. அதனால்தான் அராய் மைலேஜ் எப்போதும் அதிகமாக இருக்கும். அவர்களால் ஒரே காரை எத்தனை முறை பரிசோதித்தாலும் ஒரே மைலேஜைக் கொண்டுவர முடியும். ஆனால், மோட்டார் விகடன், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளில் சோதனை செய்வதால், யதார்த்தமான மைலேஜ் கிடைக்கிறது.

நான் நிஸான் சன்னி காரை வாங்க இருக்கிறேன். டீலரிடம் சென்றபோது பழைய நிஸான் சன்னி மாடலும், புதிய சன்னி ஃபேஸ் லிஃப்ட் மாடலும் இருந்தன. பழைய சன்னிக்கு சலுகைகள் வழங்குவதாகக் கூறினார்கள். சன்னி ஃபேஸ்லிப்ஃட் பற்றி அதிகம் யோசிக்காமல் சென்றதால், இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது எனக் குழப்பமாக இருக்கிறது. குறைந்த விலையில் பழைய சன்னி வாங்கலாமா? ஃப்ரெஷ் ஸ்டைலிங் கொண்ட புதிய சன்னி மாடலையே வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்!

நிஸான் சன்னியின் ப்ளஸ் பாயின்ட் - விலையோ, ஸ்டைலிங்கோ அல்ல. சன்னியின் உள்பக்க இடவசதிதான். ஸ்டாக் தீர்க்க வேண்டியிருக்கும் என்பதால், நிஸான் டீலர் சலுகை விலையில் பழைய சன்னி மாடலைத் தர முன்வந்திருப்பார். ஆனால், உங்களுக்கு ஸ்டைலிங் மிக முக்கியம் என எண்ணினால், புதிய நிஸான் சன்னியையே வாங்குங்கள். காசை மிச்சம் பிடித்தாக வேண்டிய சூழ்நிலை என்றால், பழைய மாடலை வாங்கலாம். மிகவும் விலை குறைவாகக் கிடைக்கும் என்றாலும், காரை விற்கும்போது ரீ-சேல் வேல்யூ குறைவாகத்தான் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

மோட்டார் கிளினிக்!

எனக்கு எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஓட்ட விருப்பம். இந்தியாவில் பல நகரங்களிலும் விற்பனையாகும் மஹிந்திரா ரேவா e2o கார், சென்னையில் கிடைக்குமா? அதை இங்கு வாங்க முடியாது என்றால், பெங்களூரில் இருந்து வாங்கி வந்து இங்கு பயன்படுத்தலாமா?

மோட்டார் கிளினிக்!

மஹிந்திரா ரேவா பெங்களூரூ, புது டெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்குக் காரணம், இந்த நகரங்களில்தான் ரேவா சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைத்துள்ளது. e20 காரை வாங்கினால், அவர்கள் வீட்டிலேயே இதை சார்ஜ் செய்ய 15 amp போர்ட் ஒன்றை நிறுவுவார்கள். அதில் நாம் காரை சார்ஜ் செய்து கொள்ளலாம். சென்னையில் இப்போதைக்கு ரேவா நிறுவனம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் ரேவா சென்னைக்குள் காலடி எடுத்து வைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, பெங்களூரில் இருந்து காரை வாங்கிவந்து, சென்னையில் பயன்படுத்த முடியாது. அதனால், பொறுத்திருப்போம்!

நான் புதிதாக ஒரு டூ-விலர் வாங்க விரும்புகிறேன். சிட்டி டிராஃபிக்கில்தான் ஓட்டப் போகிறேன் என்பதால், 100சிசி பைக்காக இருந்தாலே போதும். இப்போது சந்தையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி வாங்கலாமா அல்லது வேறு நல்ல பைக்குகள் இருக்கின்றனவா?

மோட்டார் கிளினிக்!

100 - 110 சிசி செக்மென்ட்டில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் பைக், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி . ஆனால், இந்த செக்மென்ட்டில் பெஸ்ட் செல்லராக இருப்பது ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்தான். மைலேஜ் விஷயத்தில் 100 சிசி பைக்குகள் நன்றாக இருக்கும் என்றாலும், அது நீங்கள் ஓட்டும் விதத்தைப் பொறுத்தே அமையும். ஸ்டார் சிட்டி பைக்கில் கியர்பாக்ஸும், இருக்கையும் நன்றாக இருக்கிறது. பஜாஜின் 'டிஸ்கவர் 100 எம்’ பைக்கில் சஸ்பென்ஷனும், இன்ஜினும் நன்றாக இருக்கிறது. ஸ்ப்ளெண்டர் பைக்குகளை ஆல்ரவுண்டர் எனச் சொல்லலாம்.

இந்த செக்மென்ட்டிலேயே ரிமோட் கீ உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அதிகம் கொண்ட பைக், மஹிந்திராவின் சென்ட்யூரோ. எனவே, உங்களது தேவைகளை இன்னும் தெளிவாக முடிவு செய்துவிட்டு, இந்த பைக்குகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.