Published:Updated:

ஆண்களுக்கும் பெண்களுக்கும்...

ரீடர்ஸ் ரெவ்யூ டிவிஎஸ் ஜுபிட்டர்மு.ஜெயராஜ், படங்கள்: ஜெ.முருகன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பஜாஜ் டிஸ்கவர் 100 பைக் வாங்கினேன். மைலேஜ் நன்றாகக் கொடுத்தாலும், அதிர்வுகள் பெரிய பிரச்னையாக இருந்தது. எனவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய பைக் வாங்க முடிவெடுத்தேன். அக்டோபரில் மோட்டார் விகடனில் வெளிவந்த டிவிஎஸ் ஜுபிட்டர் பற்றிய கட்டுரை என்னை ஈர்த்தது. அதன் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிப் படித்ததும், வாங்கினால் டிவிஎஸ் ஜூபிட்டர்தான் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும்...

ஷோரூம் அனுபவம்

எனது வீட்டுக்கு அருகில் இருந்த ராஜ்விஜய் டிவிஎஸ் ஷோரூமில் ஜூபிட்டரைப் பார்த்தேன். பார்த்ததும் பிடித்தது. டெஸ்ட் டிரைவ் கேட்டும், சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் டெஸ்ட் டிரைவ் செய்ய அனுமதிக்கவில்லை. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ஜூபிட்டரை புக் செய்தேன். ஒரு மாதம் கழித்து, ஜனவரி 3 அன்று ஜூபிட்டரை டெலிவரி செய்தனர். டெலிவரி வாங்கியவுடன், ஜூபிட்டரை ஓட்டிப் பார்த்தபோது, மஃப்ளர் கார்டிலிருந்து சத்தம் வரவே, அதைச் சரியாகப் பொருத்தாததை அறிந்தேன். உடனே ஷோரூம் சென்று இதைப் பற்றிக் கூறியதும், உடனே சரிசெய்து தராமல், மறுநாள் வருமாறு கூறிவிட்டனர். அதேபோல், ஃப்ளோர்மேட்டையும் இரண்டு நாள் கழித்தே போட்டுக் கொடுத்தனர். இதுவரை இரண்டு முறை சர்வீஸ் செய்துள்ளனர்.  எக்ஸ்பிரஸ் வேக சர்வீஸ் என்று ஒரு மணி நேரத்துக்குள் சர்வீஸ் செய்து கொடுத்துவிட்டனர். சர்வீஸில் குறை எதுவும் இல்லை.

ஆண்களுக்கும் பெண்களுக்கும்...

பிடித்தது:

பெட்ரோல் டேங்க் மூடி வெளியே இருப்பது, உபயோகிக்க எளிதாக இருக்கிறது. இதன் மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே பெட்ரோல் டேங்க்கைத் திறக்க முடிக்கிறது. ஜூபிட்டரில் பிரேக் லாக்கிங் கிளாம்ப், கீ ஷட்டர் காக்,  ஹெல்மெட் ஹூக்ஸ் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. 3டி லோகோ ஸ்கூட்டருக்கு நல்ல தோற்றத்தைத் தருகிறது. நீளமான இருக்கை சொகுசாக உள்ளது. ஜூபிட்டரின் எடை அதிகம் என்றாலும், சென்டர் ஸ்டாண்டை எளிதாகப் போட முடிகிறது. மல்ட்டி ஃபோகல் ரிஃப்ளெக்டருடன் கூடிய  ஹாலோஜன் ஹெட்லைட், செம பவர்ஃபுல். இதனுடன் பைலட் லைட்ஸும் கொடுத்துள்ளனர். மைலேஜை அதிகரிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எனக்கு லிட்டருக்கு 48 கி.மீ மைலேஜ் கிடைக்கிறது. இன்ஜினை ஸ்டார்ட் செய்துவிட்டு, 110 விநாடிகள் ஐடிலிங்கில் இருந்தால், பவர் மோட் விளக்கு ஒளிர்கிறது. அதேபோல், ஸ்கூட்டர் ஓட்டும்போது, 20 விநாடிகள் ஐடிலிங் மோடில் இருந்தால், பவர் மோட் ஒளிர்கிறது. அதன் மூலம் பெட்ரோல் விரயமாவதை உணர்த்துகிறது. 17 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொடுத்துள்ளனர். இதில் மொபைல் சார்ஜர் வசதி இருப்பதால், நீண்ட நேரப் பயணத்தின்போது வசதியாக இருக்கிறது. பாஸ் லைட் சுவிட்ச் இருப்பது ஓவர்டேக் செய்யும்போது, சிக்னல் கொடுக்கலாம். முன் பக்கம் உள்ள டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கம் உள்ள கேஸ் சார்ஜ் ஷாக் அப்ஸார்பர் சிறப்பாக உள்ளன. பிரேக்ஸ் அருமை. ட்யூப்லெஸ் டயருடன்கூடிய 12 இன்ச், 5 ஸ்போக்ஸ் அலாய் வீல்ஸ் ஸ்கூட்டருக்குக் கம்பீரத்தைக் கொடுக்கின்றன. இதன் டர்னிங் ரேடியஸ் குறைவு என்பதால், சிட்டியில் ஓட்ட எளிதாக உள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில், ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், லோ ஃப்யூல் இண்டிகேட்டர், எக்கோ மற்றும் பவர் மோட் விளக்குகள் உள்ளன.

பிடிக்காதது

ஜூபிட்டரில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு, கிரே என்று நான்கு வண்ணங்கள்தான் உள்ளன. இதில் கிரே தவிர மற்றவை ஈர்க்கவில்லை. எனக்குப் பிடித்த நீலம் அல்லது சாக்லேட் பிரவுன் நிறம் இருந்திருந்தால், அதைத்தான் நான் தேர்ந்தெடுத்திருப்பேன். டிஸைனில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம். வண்ணங்கள் மற்றும் டிஸைனில் அசத்தியிருந்தால், கல்லூரி மாணவர்களையும் ஜூபிட்டர் ஈர்த்திருக்கும். ரியர் வியூ மிரர்களை இன்னும் பெரிதாகக் கொடுத்திருக்கலாம். பயணத்தின்போது, மிரரைப் பார்த்தால், பாதி இடத்தை கையின் பிரதிபலிப்பு ஆக்கிரமிக்கிறது. அதனால், சாலை முழுதாகத் தெரியவில்லை. ஜூபிட்டரில், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டரை டிவிஎஸ் கொடுக்காமல் விட்டிருப்பது எனக்கு ஆச்சரிய அதிர்ச்சியாக உள்ளது. டிஸ்க் பிரேக்கை ஆப்ஷனலாகவாவது கொடுத்திருக்கலாம்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும்...

என் தீர்ப்பு

சிறந்த கம்ஃபர்ட், சிறப்பம்சங்கள், எதிர்பார்ப்புக்கேற்ற மைலேஜ் ஆகிய விஷயங்களில், கொடுக்கும் விலைக்கேற்ற ஸ்கூட்டராக உள்ளது ஜூபிட்டர். ஆண்கள் மற்றும் பெண்கள் ஓட்டும் வகையில் இருக்கிறது. கொடுக்கும் காசுக்கேற்ற சொகுசான ஸ்கூட்டர் வாங்குவது உங்கள் விருப்பமென்றால், நீங்கள் டிவிஎஸ் ஜூபிட்டரை வாங்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு