நம் நாட்டைப் பொறுத்தவரை, சாலைகளே இல்லாத இடத்தில் ஓட்டுவது; சாலைகளில் ஓட்டுவது; இரண்டுமே அட்வென்ச்சர்தான்.

நம் ஊரின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவை, அட்வென்ச்சர் பைக்குகள். ஆனால், ஹீரோவின் இம்பல்ஸைத் தவிர்த்து, குறைந்த விலையில் இந்தியாவில் அட்வென்ச்சர் பைக்குகள் இல்லை. டுகாட்டி மல்ட்டிஸ்ட்ராடா, ஹைப்பர்ஸ்ட்ராடா, பிஎம்டபிள்யூவின் F 650GS, R 1200 GS, ட்ரையம்ப்-ன் டைகர் ரக பைக்குகள் என எல்லாமே, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொண்டவை. இந்த வரிசையில் விற்பனைக்கு வரவிருக்கிறது சுஸ¨கி வி-ஸ்ட்ராம்.

சுஸ¨கி வி-ஸ்ட்ராம் பார்க்க செம கெத்தாக இருக்கிறது. பெரிய சைஸில் இருப்பதாலும், கரடு முரடான டிஸைனைக் கொண்டிருப்பதாலும், சாலையில் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. இதன் வைஸரை நாம் மூன்றுவிதமாக மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். ஆனால், இதற்குப் பிரத்யேகக் கருவி தேவை.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அனலாக் டிஜிட்டல் கலவையுடன் பார்க்கத் தெளிவாக இருக்கிறது. இதன் எல்சிடி திரையின் வெளிச்சத்தைக் குறைக்கவும், கூட்டவும் முடியும். ஓடோ மீட்டர், ஸ்பீடோ மீட்டர், கியர் இண்டிகேட்டர், ஃப்யூல் எகானமி/ ரேஞ்ச் மீட்டர் போன்றவையுடன் டிராக்ஷன் கன்ட்ரோல் லெவல் இண்டிகேட்டர், வோல்டேஜ் மீட்டர், ஆம்பியன்ட் டெம்பரேச்சர் மீட்டர் போன்றவையும் இருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்குக் கீழே பவர் சாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளதால், நேவிகேஷன் யூனிட், அலைபேசி போன்றவற்றை சார்ஜ் செய்துகொள்ளவும் முடியும்.

ஹேண்டில்பார் பட்டன்கள், க்ரிப் போன்றவை பயன்படுத்த மிக வசதியாகவும், எளிமையாகவும் இருக்கின்றன. கிளட்ச், பிரேக் லீவர்கள் பயன்படுத்த சிறப்பாக இருக்கின்றன. ரியர்வியூ கண்ணாடிகள் பெரிதாக இருந்தாலும், பழைய மாடல் பைக்குகளில் இருப்பதுபோலவே இருக்கின்றன.

20 லிட்டர் ஃப்யூல் டேங்க் பெரிதாக இருந்தாலும், கால்களை வைக்க வசதியாகவே இருக்கிறது. இன்ஜின், எக்ஸாஸ்ட் கேனிஸ்டர் போன்றவை பார்க்க பெரிதாகத் தெரிவதால், அட்வென்ச்சர் பைக்குகளுக்கு உரிய முரட்டுத் தோற்றம் கிடைக்கிறது. பைக்கின் ஒட்டுமொத்த தரம் மோசம்

இல்லை.

சுஸ¨கி வி-ஸ்ட்ராம் பைக்கில் இருப்பது லிக்விட் கூல்டு, V ட்வின், 4 ஸ்ட்ரோக், 1,037 சிசி இன்ஜின். ஒரு உலகத்தரமான அட்வென்ச்சர் பைக்குக்கு உரிய 99.2 bhp சக்தியையும், 4,000 ஆர்பிஎம்-ல் வெளிப்படும் 10.5 kgm டார்க்கையும் கொண்டிருக்கிறது. இதனால், பைக்கின் ஆக்ஸிலரேஷன் செம மிரட்டல். ஆக்ஸிலரேட்டரைக் கொஞ்சம் திருகினாலும், திமிறிக்கொண்டு சீறுகிறது வி-ஸ்ட்ராம். முன்னே செல்லும் வாகனத்தை முந்த, இதன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸை டவுன் ஷிஃப்ட் செய்யத் தேவையில்லை. ஆக்ஸிலரேட்டரைக் கொஞ்சம் அதிகமாகத் திருகினாலே போதும். எக்ஸாஸ்ட் சத்தம் கடுப்படிக்கும் அளவுக்கு இல்லாமல் மிதமாக இருக்கிறது. வி-ஸ்ட்ராம் பைக்கின் அதிக சக்தியைக் கட்டுக்குள் வைக்க டிராக்ஷன் கன்ட்ரோல் இருப்பதால், பயப்படாமல் விரட்டலாம்.

அலாய் ஸ்பார் ஃப்ரேம், ஸ்விங் ஆர்ம் கொண்ட வி-ஸ்ட்ராம் பைக்கில் முன்பக்கம் தலைகீழாக அமைக்கப்பட்ட ஃபோர்க்குகளும், பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன. உயரமாக உள்ளவர்களுக்கு இந்த பைக் ஓட்ட மிக எளிதாகவும் வசதியாகவும் இருக்கும். பைக்கின் ஓட்டுதல் தரம் இறுக்கமாகவே இருக்கிறது. அதனால்தான் பைக்கின் கையாளுமை இந்தியச் சாலைகளில் சிறப்பாக இருக்கிறது. லாங் டிராவல் சஸ்பென்ஷன் என்பதால், மோசமான சாலைகளில் சிறப்பான ஓட்டுதல் தரம் இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பைக் போன்று வளைவுகளிலும் வளைத்து, நெளித்து ஓட்ட நன்றாகவே இருக்கிறது வி-ஸ்ட்ராம்.

ஸ்டேபிளான கையாளுமையைக் கொண்டிருக்கும் வி-ஸ்ட்ராம் பைக்கில் முன்பக்கம் இரண்டு டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கம் ஒரு டிஸ்க்கும் உள்ளன. ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகிறது. பிரிட்ஜ்ஸ்டோன் டயர்கள் நல்ல க்ரிப்பைத் தருகின்றன.

இந்தியச் சாலைகளிலும் சரி, சாலைகள் இல்லாத இடங்களிலும் சரி, சுஸ¨கி வி-ஸ்ட்ராம் சிரமமில்லாமல் இயங்குகிறது. நல்ல பெர்ஃபாமென்ஸ், செம ஸ்டைலிங், கரடுமுரடான தோற்றம் என அட்வென்ச்சர் பைக்குக்கான அனைத்து ஃபார்முலாக்களையும் சமன் செய்கிறது வி-ஸ்ட்ராம்.

ஆனால், இந்திய மார்க்கெட்டில் வி-ஸ்ட்ராம் சந்திக்கப் போகும் ஒரு பிரச்னை, விலைதான்!