2 ஸ்ட்ரோக் பைக்குகளுக்குத் தடை விழுந்த பின்பு, இந்தியாவில் யமஹாவின் பிசினஸ் தடுமாறிப் போனது. யமஹாவுக்கு மீண்டும் முகம் கொடுத்தது ஆர்-15 பைக் என்றால், விற்பனை ஏணியில் ஏற்றிவிட்ட பைக் FZ-16. அந்த பைக்குக்கு இப்போது புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது யமஹா. வெர்ஷன் 2.0 எனும் பெயரில், கார்புரேட்டர் கொண்டிருந்த இந்த பைக்கை, ஃப்யூல் இன்ஜெக்ஷன் உள்ளிட்ட பல மாற்றங்களுடன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது யமஹா. விற்பனையில் உச்சம் தொடுமா புதிய FZ...?

மினி வரலாறு

முதன்முறையாக FZ16 பைக்கை, 2008-ம் ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவந்தது யமஹா. போட்டியாளர்களைவிட வேகமான பைக்காக இது இல்லை என்றாலும் ஸ்டைல், சிறப்பம்சங்கள், மிதமான பெர்ஃபாமென்ஸ், போதுமான மைலேஜ் என ஒரு முழுமையான 150 சிசி பைக்காக இருந்தது. அதனால், சட்டென இளைஞர்களின் வீடுகளில் இடம் பிடித்துவிட்டது FZ16. யமஹாவே எதிர்பார்க்காத வெற்றி இது என்பதால், சின்ன வைஸருடன் FZ ஷி, அதனைத் தொடர்ந்து ஃபேஸர் என அதே சீரிஸில் மொத்தம் மூன்று பைக்குகளை அறிமுகப்படுத்தி, இளைஞர்களுக்கான சாய்ஸை அதிகப்படுத்தியது. ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சர்ப்ரைஸாக, பவரைக் குறைத்து, அதேசமயம் தொழில்நுட்பத்தைக் கூட்டி புதிய FZ சீரிஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது யமஹா.

டிஸைன்

தோற்றத்தைப் பொறுத்தவரை பழைய FZ பைக்குகளுக்கும், புதிய பைக்குக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. புதிய கிராஃபிக்ஸ், 5 ஸ்போக் அலாய் வீல்களில் சிவப்பு வண்ணப் பட்டை மற்றும் பின்பக்க டயர் ஹக்கர் என கவனித்துப் பார்த்தால், புதிய பைக்கில் சின்னச் சின்ன மாற்றங்கள் தெரிகின்றன. புதிய பைக்கில் டிஜிட்டல் மீட்டர்களின் டிஸைன் மாறியிருக்கின்றன. நீளமான, அகலமான டிஜிட்டல் திரையில் ஸ்பீடோ, ஓடோ, ட்ரிப் மீட்டர் விவரங்கள் டிஜிட்டலில் ஒளிர்கின்றன. சுவிட்ச்சுகள், லீவர்கள், கைப்பிடிகளின் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவை, நீடித்து உழைக்கக் கூடியவையாக இருக்கின்றன.

இன்ஜின்

புதிய யமஹா FZ-ல் சர்ப்ரைஸ், இன்ஜினில்தான். இது சிலருக்குச் சந்தோஷ செய்தியாகவும் இருக்கலாம்; சிலருக்குத் துக்கச் செய்தியாகவும் இருக்கலாம். எப்போதுமே புதிதாக அடுத்த வெர்ஷன் வெளிவரும்போது, பவரைக் கூட்டுவதுதான் வழக்கம். ஆனால் யமஹாவோ, புதிய FZ பைக்குகளின் இன்ஜின் பவரைக் குறைத்திருக்கிறது. 153 சிசி திறன்கொண்டிருந்த பழைய யீக்ஷ் பைக்குகளைவிட புதிய பைக்கில் சிசி திறன் 149 சிசியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பெரிய விஷயம் இல்லை என்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தால், ஏற்கெனவே 14bhp சக்திகொண்டிருந்த இந்த இன்ஜினை, 12.9 bhp சக்தியாகக் குறைத்திருக்கிறார்கள். இதன் இரட்டை வால்வு இன்ஜின், அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 1.3 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

5-ஸ்பீடு கியர்பாக்ஸ் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், கார்புரேட்டர் இன்ஜின் இப்போது ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இன்ஜினாக மாறியிருக்கிறது. இதனால், ஓட்டுதல் தரத்தில் மாற்றம் தெரிகிறது. இன்ஜினின் பெர்ஃபாமென்ஸிலும், சத்தத்திலும் மாற்றம் தெரிகின்றன. பவரும் குறைந்திருப்பதால், அதிக வேகத்தில் முன்பு இருந்த அதிர்வுகள்கூட இப்போது இல்லை. பைக்கை முழுமையாக டெஸ்ட் செய்யாததால், 0-60, டாப் ஸ்பீடு போன்ற விவரங்களை இந்த இதழில் வெளியிட முடியவில்லை.

சஸ்பென்ஷன்

ரைடிங் பொசிஷன், அகலமான ஹேண்டில்பார் என புதிய பைக்கில் எந்த மாற்றமும் இல்லை. இதனால், சிறப்பான ஓட்டுதல் தரம் புதிய பைக்கிலும் தொடர்கிறது. முன்பக்கம் மட்டுமே டிஸ்க் பிரேக். டயர்களில் எந்த மாற்றமும் இல்லை. அதே அகலமான டயர்கள் இந்த பைக்கிலும் தொடர்வதால், வளைத்து நெளித்து ஓட்டுவதற்குச் சிறந்த பைக்காக இருக்கிறது யமஹா FZ.

மைலேஜ்

ஃப்யூல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் சக்தியும் குறைந்திருப்பதால், பழைய பைக்கை விட 14 சதவிகிதம் அதிக மைலேஜ் கொடுக்கும் என்கிறது யமஹா. நம்முடைய கணிப்பின்படி புதிய FZ லிட்டருக்கு 50 கி.மீ வரை மைலேஜ் தரும். இதை முழுமையாக டெஸ்ட் செய்த பிறகே உறுதி செய்ய முடியும்.

முதல் தீர்ப்பு

புதிய FZ வெர்ஷன் 2.0 பைக்குகளின் வருகை, யமஹா குழப்பத்தில் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. பெர்ஃபாமென்ஸுக்காகவும், ஸ்டைலுக்காகவும் யமஹாவை வாங்குபவர்களே அதிகம். 'யமஹா என்றாலே பெர்ஃபாமென்ஸ்தான்’ என அவர்களே சொல்லும் நிலையில், பவரைக் குறைத்து, மைலேஜ் அதிகம் கொடுக்கும் பைக் என யமஹா காட்டும் 'டிரான்ஸ்ஃபர்மேஷன்’ இளைஞர்களிடம் எடுபடுமா என்பது சந்தேகமே! முந்தைய பைக்கைவிட பவர்ஃபுல்லாக இருந்தால் மட்டுமே அது இளைஞர்களையும், பைக் ஆர்வலர்களையும் கவரும். முந்தைய பைக்கைவிட மைலேஜ் அதிகம் கிடைக்கும் என்று சொல்வது, இந்த செக்மென்ட் வாடிக்கையாளர்களை ஈர்க்காது!