மார்க்யூஸை வெல்ல இங்கே யாரும் இல்லை. 'இந்த முறை வாலன்டினோ ராஸி சாம்பியன் பட்டம் வெல்வார்’ என்கிற ராஸி ரசிகர்களின் எண்ணத்தில் வெந்நீரை ஊற்றிவிட்டார் மார்க் மார்க்யூஸ். பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயினைத் தொடர்ந்து, ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற்ற நெதர்லாந்து, ஜெர்மனி ரேஸ்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார் மார்க்யூஸ்.

நெதர்லாந்து

மோட்டோ ஜீபியின் எட்டாவது சுற்று, நெதர்லாந்தின் அஸென் ரேஸ் டிராக்கில் ஜூன் 28-ம் தேதி நடைபெற்றது. மார்க்யூஸ் இரண்டாம் இடத்தில் இருந்தும், லாரன்சோ ஒன்பதாவது இடத்தில் இருந்தும், ராஸி 12-வது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். ஆரம்பம் முதலே மார்க்யூஸின் பைக், பல மீட்டர்கள் முன்னால் பறக்க ஆரம்பித்தது. இறுதி வரை ஹோண்டாவின் மார்க்யூஸை யாராலும் பிடிக்க முடியவில்லை. இரண்டாம் இடம் பிடித்த டொவிஸியோஸோவைவிட 7 விநாடிகள் முன்பாக வந்து முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார் மார்க்யூஸ். டேனி பெட்ரோஸா மூன்றாம் இடம் பிடித்தார்.

ஜெர்மனி

ஜூலை 13-ம் தேதி மோட்டோ ஜீபியின் ஒன்பதாவது சுற்று ரேஸ் போட்டி, ஷாஸென்ரிங் ரேஸ் டிராக்கில் நடைபெற்றது. மார்க் மார்க்யூஸ் முதல் இடத்தில் இருந்தும், டேனி பெட்ரோஸா இரண்டாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். யமஹாவின் லாரன்ஸோ ஐந்தாவது இடத்தில் இருந்தும், ராஸி ஆறாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். ஹோண்டாவின் ஸ்டீஃபன் பிராடில் ஐந்து லேப்புகள் வரை முதல் இடத்தில் பறக்க, ஆறாவது லேப்பின்போது பிராடிலை முந்தினார் மார்க்யூஸ். அதன்பின்பு, மார்க்யூஸ் யாரையும் முந்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மொத்தம் 30 லேப்புகள் கொண்ட இந்தப் போட்டியில் மார்க்யூஸ், டேனி பெட்ரோஸாவைவிட 1 விநாடி முன்னிலை பெற்று ரேஸில் வெற்றி பெற்றார். யமஹாவின் லாரன்ஸோ மூன்றாவது இடத்தையும், ராஸி நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

இதுவரை ஒன்பது சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஹோண்டாவின் மார்க் மார்க்யூஸ் 225 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா 148 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், யமஹாவின் வாலன்டினோ ராஸி 141 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இன்னும் ஒன்பது சுற்றுகள் மிஞ்சியிருக்கும் நிலையில், மார்க்யூஸ் கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலும் தோற்று, வாலன்டினோ ராஸி தொடர்ந்து போடியம் ஏறினால்தான், சாம்பியனாக விடைபெறுவார் ராஸி!