உள்நாட்டுப் போர் என்பதுபோல, அணிக்குள்ளேயே பிரச்னையால் அதகளமாகியிருக்கிறது 2014 ஃபார்முலா-1 சீஸன். மெர்சிடீஸ் பென்ஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டனுக்கும், நிக்கோ ராஸ்பெர்க்குக்கும்தான் இப்போது யார் சாம்பியன் என்கிற போட்டி. இதுவரை நடந்து முடிந்திருக்கும் 10 ரேஸ் போட்டிகளில், ஒன்பது போட்டிகளில் ஹாமில்ட்டனும், ராஸ்பெர்க்கும்தான் மாறி மாறி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ராஸ்பெர்க் 190 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 14 புள்ளிகள் பின்தங்கி இரண்டாம் இடத்தில் இருக்கிறார், அனுபவசாலியான ஹாமில்ட்டன்.

ஆஸ்திரியா

2014 ஃபார்முலா-1 ரேஸ் சீஸனின் எட்டாவது போட்டி, ஆஸ்திரியாவில் ஜூன் 22-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்து, ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார் வில்லியம்ஸ்-மெர்சிடீஸ் அணியின் ஃபிலிப் மாஸா. அதே அணியின் வால்ட்டரி பொட்டாஸ் இரண்டாம் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்க, நிக்கோ ராஸ்பர்க் மூன்றாவது இடத்தில் இருந்தும், ஃபெராரியின் அலான்சோ நான்காவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். லூயிஸ் ஹாமில்ட்டன் ஒன்பதாவது இடத்தில் இருந்து போட்டியைத் துவங்கினார். ரேஸ் துவங்கியதுமே ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது லூயிஸ் ஹாமில்ட்டனின் கார். 71 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில், மூன்றாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ராஸ்பெர்க் முதல் இடம் பிடித்து வெற்றி பெற, ஹாமில்ட்டன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். வால்ட்டரி பொட்டாஸ் மூன்றாம் இடம் பிடித்தார்.

இங்கிலாந்து

இங்கிலாந்தின் சில்வர் ஸ்டோன் ரேஸ் டிராக்கில் ஃபார்முலா-1 பந்தயத்தின் ஒன்பதாவது சுற்று ஜூலை 6-ம் தேதி நடைபெற்றது. சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால், செம உற்சாகத்தில் இருந்தார் லூயிஸ் ஹாமில்ட்டன். ஆனால், தகுதிச் சுற்றில் சொதப்பினார். ஹாமில்ட்டன் ஆறாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற, நிக்கோ ராஸ்பெர்க் முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். முதல் இடத்தில் பறந்து கொண்டிருந்த ராஸ்பெர்க்க்கின் வெற்றிக் கனவுகள், 28-வது லேப்பின்போது சிதைந்துபோனது. ராஸ்பெர்க்கின் கார் கியர்பாக்ஸ் பிரச்னையால் ரேஸில் இருந்து வெளியேற... ஹாமில்ட்டன் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் மைந்தனான ஹாமில்ட்டனின் வெற்றியால், உற்சாகமானார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். வால்ட்டரி பொட்டாஸ் இரண்டாம் இடமும், ரெட்புல் ரெனோ அணியின் டேனியல் ரிச்சியார்டோ மூன்றாவது இடமும் பிடித்தனர்.

ஜெர்மனி

ஃபார்முலா-1 ரேஸின் பத்தாவது சுற்று, ஜெர்மனியின் நர்பர்கிரிங் மைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் சாம்பியனும், ரெட்புல் அணி வீரருமான செபாஸ்ட்டியன் வெட்டலின் சொந்த ஊர் என்பதால், வெட்டலின் ரசிகர்கள் குவிந்துவிட்டார்கள். வெட்டல், தகுதிச் சுற்றில் ஆறாவது இடம் பிடித்ததால், ரேஸை ஆறாவது இடத்தில் இருந்து துவக்கினார். நிக்கோ ராஸ்பெர்க் முதல் இடத்தில் இருந்தும், பொட்டாஸ் இரண்டாம் இடத்தில் இருந்தும், ஃபிலிப் மாஸா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். தகுதிச் சுற்றின்போது விபத்தில் சிக்கிய லூயிஸ் ஹாமில்ட்டன், 20-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே மாஸாவின் கார் விபத்தில் சிக்க, ரேஸில் இருந்து வெளியேறினார். 67 லேப்புகள் கொண்ட இந்தப் போட்டியில் ராஸ்பெர்க் முதல் இடம் பிடித்து வெற்றிபெற, பொட்டாஸ் இரண்டாம் இடத்தையும், 20-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய லூயிஸ் ஹாமில்ட்டன், பறந்துவந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தார். ஹாமில்ட்டனா, ராஸ்பெர்க்கா? உங்கள் சப்போர்ட் யாருக்கு?