'பாதுகாப்பு’ குறித்து சென்ற இதழில் நாம் துவங்கிய விவாதம், இப்போது நாடெங்கும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கார்களின் பாதுகாப்பு குறித்து ஆராயும் உலகம் தழுவிய சுயேட்சையான அமைப்பான 'குளோபல் என்கேப்’ (Global NCAP- Global New Car Assessment Program) என்ற அமைப்பு, நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு குறித்து, அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் பற்றிப் பேசியிருக்கிறது.

ஓடுகிற கார்கள் அல்லது நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கார்கள், திடீர் திடீர் என தீப்பிடித்து எரிவது பற்றி தினம் தினம் செய்திகள் வந்தாலும், காரின் வொயரிங் சிஸ்டத்தில் லோக்கல் மெக்கானிக்குகளை வைத்து ஒலிபெருக்கிகளைப் பொருத்துவதும், அலங்கார விளக்குகளைப் பொருத்துவதும்தான் காரணம் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு, கார் நிறுவனங்கள் ஒதுங்கிக்கொள்வதில் நியாயம் இல்லை. 'வொயரிங் விஷயத்தில் தலையை நுழைக்காதே’ என்று சொல்லும் அதே கார் நிறுவனங்கள்தான், அடிப்படையான மியூஸிக் சிஸ்டம்கூட இல்லாமல் பல கார்களை விற்பனை செய்கின்றன.

வலதுபக்கம் அமர்ந்து காரை ஓட்டும் பழக்கம் உள்ள நம் நாட்டில், இண்டிகேட்டரை இயக்கும் விசையை வலப்பக்கம் வைப்பதுதான் ஓட்டுநருக்கு வசதியாக இருக்கும். இருந்தாலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இருப்பதைப்போலவே, இந்த விசையை நம் நாட்டில் விற்பனையாகும் கார்களிலும் இடதுபக்கமாகவே கொடுப்பது என்ன நியாயம்? இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில்கூட நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.

சர்வதேசத் தரத்தில் கார்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்யும் பல கார் நிறுவனங்களும், மேலை நாடுகளில் விற்பனையாகும் தன் கார்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பு அம்சங்களை நம் ஊர் கார்களுக்குக் கொடுப்பது இல்லை. இதுபோன்ற விஷயங்கள் எல்லாம், தானமாகப் பெற வேண்டியவை அல்ல. இவை நம் தார்மீக உரிமைகள். 'பாதுகாப்பு அம்சங்களைக் கூட்டினால்... விலையும் கூடிவிடும். பரவாயில்லையா?’ என்று கார் நிறுவனங்கள் நம் பாதுகாப்பைப் பணயமாக வைத்துப் பேரம் பேசுவதை, அரசு ஊக்குவிக்கக் கூடாது.

கார் வாங்கச் செல்லும் எந்த ஒரு குடும்பமும் காரின் டிஸைன், செயல்திறன், வெளிப்பார்வை, விலை ஆகியவற்றுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, பாதுகாப்பு அம்சங்களுக்கும் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர் தரும் அழுத்தமும் அரசு கொடுக்கும் நிர்ப்பந்தமும் ஒருசேர நிகழும்போதுதான், சர்வதேசத் தரத்துக்குப் பாதுகாப்பு அம்சங்கள் நம் நாட்டில் விற்பனையாகும் எல்லா கார்களுக்கும் கிடைக்கும்.

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்