Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

அறிமுகமானது ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட்!

மோட்டார் நியூஸ்

ஃபோக்ஸ்வாகன் தனது போலோ காரின் ஃபேஸ்லிப்ஃட் மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. முன்/பின் பம்பர்கள், க்ரில், ஹெட்லைட்ஸ், சென்டர் கன்ஸோல், அலாய் வீல் ஆகியவற்றின் டிஸைன் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. புதிய மாடலில் ஃப்ளாட்பாட்டம்டு (Flat Bottomed) ஸ்டீயரிங் வீல் உள்ளது. இது, கால்வைக்கும் இடவசதி மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்துக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு காற்றுப் பைகள் அனைத்து வேரியன்ட்டுகளிலும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகிறது. புதிய 1.5 லிட்டர் TDI 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் 1,498சிசி கொள்ளளவுகொண்டது 1.5 TDI மாடலில் 88 hp சக்தியையும், 23.45 kgm டார்க்கையும் அளிக்கிறது.GT TDI மாடலில் இதே இன்ஜின் 103 hp சக்தியையும், 25.48 kgm டார்க்கையும் அளிக்குமாறு ட்யூன் செய்யப்பட்டுள்ளது. க்ராஸ்போலோ, GT TDI.GT TSI மாடல்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருகின்றன. போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் சென்னை ஆன் ரோடு விலை 5.91 லட்ச ரூபாயில் துவங்கி 9.42 லட்சம் வரை இருக்கின்றன. மேலும், இந்தியாவில் கார் தயாரிப்புச் செலவுகளைக் குறைப்பதற்காக, 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது ஃபோக்ஸ்வாகன் நிறுவனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான்கு புதிய டூவீலர்கள்  மஹிந்திரா 2 வீலர்ஸ் திட்டம்!

மோட்டார் நியூஸ்

இந்த ஆண்டின் இறுதிக்குள் நான்கு புதிய தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் களமிறக்க இருக்கிறது மஹிந்திரா 2வீலர்ஸ். இதில், ஒரு புதிய ஸ்கூட்டரும் (G101), ஒரு புதிய என்ட்ரி லெவல் பைக்கும் இருக்கின்றன. மற்ற இரண்டு தயாரிப்புகளும் ஏற்கெனவே இருக்கும் வாகனங்களின் வேரியன்ட்டுகளாக இருக்கும். எனவே, சென்டியூரோ பைக் டிஸ்க் பிரேக்குகளுடன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும், பேன்ட்டீரோ பைக்கின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தியை, மஹிந்திரா 2வீலர்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஆக்டிவ் ஹைபிரிட்!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் 7 சீரிஸ் ஆக்டிவ்ஹைபிரிட் மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது பிஎம்டபிள்யூ. ஜெர்மன் நிறுவனங்களிலேயே முதன் முறையாக ஒரு ஹைபிரிட் காரை, இந்தியாவில் அறிமுகப்படுத்துவது பிஎம்டபிள்யூதான். 7 சீரிஸ் லாங் வீல்பேஸ் மாடலான இந்த ஆக்டிவ்ஹைபிரிட் காரில், 320bhp சக்தியை அளிக்கும் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் இன்ஜினுடன், 55 bhp சக்தியை அளிக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் இந்த கார் டெல்லி, மும்பை, சென்னையில் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஆக்டிவ் ஹைபிரிட் காரின் விலை 1.35 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்).

பென்ஸின் சிலிகி 45 கிவிநி இந்தியாவுக்கு வந்துவிட்டது.

மோட்டார் நியூஸ்

உலகில் தொடர் தயாரிப்பில் இருக்கும் சக்திவாய்ந்த நான்கு சிலிண்டர் இன்ஜின்கொண்ட மெர்சிடீஸ் பென்ஸ் CLS 45 AMG காம்பேக்ட் பெர்ஃபாமென்ஸ் செடான் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் 2.0 லிட்டர் டர்போபெட்ரோல் இன்ஜின் 355  bhp  சக்தியையும், 45.9 kgm டார்க்கையும் அளிக்கிறது. இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஏழாவது ஏஎம்ஜி பெர்ஃபாமென்ஸ் கார். 4MATIC ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்கொண்ட இந்த கார், தேவைப்படும் நேரங்களில் மட்டுமே அனைத்து சக்கரங்களுக்கும் டார்க்கை அனுப்புகிறது, மற்ற நேரங்களில் ஃப்ரன்ட் வீல் டிரைவ் காராகவே இயங்குகிறது. மெர்சிடீஸ் பென்ஸ் CLA 45 AMG  காரின் விலை 68.50 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம் டெல்லி). ஆடி A3 காருடன் போட்டி போடும் சாதாரண CLA  செடான், இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது மெர்சிடீஸ் பென்ஸ்.

ஜப்பானில் அறிமுகமானது புதிய பஜேரோ ஃபேஸ்லிஃப்ட்!

மோட்டார் நியூஸ்

மிட்சுபிஷி பஜேரோ ஃபேஸ்லிஃப்ட் மாடல், ஜப்பானில் விற்பனைக்கு வந்துள்ளது. காரின் வெளிப்பக்கமும், உள்பக்கமும் சின்ன மாற்றங்கள் உள்ளன. காரின் முன்பக்கம் க்ரில்லின் டிஸைன் க்ரோம் பட்டையுடன் புதிய டிஸைனில் பிரம்மாண்டமாக இருக்கிறது. காரின் விலை உயர்ந்த மாடலில் LED டே டைம் ரன்னிங் லைட்ஸ் அளிக்கப்படுகிறது. மெக்கானிக்கலாக ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எந்த மாற்றங்களும் இல்லை. அதே 3.0 லிட்டர் V6 பெட்ரோல், 3.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்கள்தான். இது இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை மிட்சுபிஷி. அடுத்த தலைமுறை பஜேரோ எஸ்யுவி, பிளக்-இன் ஹைபிரிட் காராக விற்பனைக்கு வரும். மிட்சுபிஷி, 2013 நவம்பரில் டோக்கியோ ஆட்டோ ஷோவில் காண்பித்த GCPHEV கான்செப்ட் காரை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்படுகிறது புதிய பஜேரோ.

சமூகப் பொறுப்புகளுக்காக கூடுதல் முதலீடுகளைச் செய்கிறது ஹூண்டாய்!

மோட்டார் நியூஸ்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் 62 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சுத்தம், சுகாதாரம், கல்வி, குடிநீர் போன்ற விஷயங்களில் உதவிகளைச் செய்துவருகிறது. அடுத்து ஆலப்பாக்கம், நல்லூர், குதிரம்பாக்கம், மெலோட்டிவாக்கம், நெய்குப்பம் போன்ற ஊர்களில் இந்த வேலைகளைச் செய்ய இருக்கிறது. இங்கு ஹூண்டாயின் 13-ஆவது பேட்ச்சாகக் களமிறங்கும் 120 'ஹேப்பி மூவ்’ மாணவர்கள் செயல்படுவார்கள். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவும், காட்ரம்பாக்கத்தில் 100 கழிவறைகளைக் கட்டவும் திட்டமிட்டிருக்கிறது, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம்.

முதல் நான்கு இடங்களில் மாருதி!

ஜூன் மாதம் கார்களின் விற்பனை 14 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. மாருதியின் விற்பனை மட்டுமே 30 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆல்ட்டோ 30,499 கார்களுடன் முதல் இடத்திலும், ஆச்சரியமாக 17,119 கார்களுடன் வேகன் ஆர் இரண்டாவது இடத்திலும் உள்ளன. டிசையர் 15,990 கார்களுடன் மூன்றாவது இடத்திலும், ஸ்விஃப்ட் 13,632 கார்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. ஆக, முதல் நான்கு இடங்களும் மாருதி கையில். ஹூண்டாயின் கிராண்ட் ஐ10, எக்ஸென்ட் கார்கள் முறையே 7,901 கார்களும், 7,069 கார்களும் விற்பனையாகின.  

மோட்டார் நியூஸ்

ஹோண்டா அமேஸ் 7,075 கார்களுடன் டாப் 10 லிஸ்ட்டில் இடம் பிடித்தது. ஆனால், ஜெஸ்ட் அறிமுகமானவுடன் அமேஸின் எண்ணிக்கைக்கு பாதிப்பு வரக்கூடும். எஸ்யுவிகளில் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் 5,176 கார்கள் விற்பனையானது. இதுவரை இந்தியாவில் சுமார் 60,000 எக்கோஸ்போர்ட் கார்கள் விற்பனையாகியுள்ளது. புதிய வரவான டொயோட்டா கரோலா, 922 கார்கள் விற்பனையாகி ஹூண்டாய் எலான்ட்ராவை முந்தியது.

ஹூண்டாய் ஃபேக்டரி விசிட்!

வாசகர்களிடம் இருந்து வந்து குவிந்துள்ள ஏராளமான விண்ணப்பங்கள், பரிசீலனையில் உள்ளன. ஃபேக்டரி விசிட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாசகர்களுக்கு, தனியே நிகழ்ச்சி குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism