கார்ஸ்
Published:Updated:

பாலைவனத்தில் நடந்த பெல்லி டான்ஸ்!

பாலைவனத்தில் நடந்த பெல்லி டான்ஸ்!

எஸ்.ஷக்தி

 ##~##

லாய்ப்பதற்காகவே பிறவி எடுத்தவர்கள் ஆர்ஜே-க்கள்! 'ஹலோ’வில் ஆரம்பித்து 'ஓ.கே பை’ என்று முடிக்கும் வரைக்கும் தனது லைனுக்கு வந்தவரை 'ஆளை விடுங்கப்பா’ என்று நோகுமளவுக்கு வறுத்தெடுக்கும் இந்த ஆர்.ஜே பேர்வழிகள் புரட்டியெடுக்கப்பட்ட கதை ஒன்றைப் பார்க்கலாமா!  இது நடந்தது ஒட்டகங்கள் உலாவும் துபாயில்!

'ரேடியோ சிட்டி எஃப்.எம் நிர்வாகம் நாடெங்கிலுமிருக்கும் தனது ஸ்டேஷனின் ஆர்.ஜேக்களை உற்சாகப்படுத்துவதற்காக, துபாய்க்கு பேட்ஜ் பை பேட்ஜாக அனுப்பி இருக்கிறது. அதில் கோவை ரேடியோ சிட்டி டீம் உள்ளிட்ட சில டீம்கள், கடந்த ஜூன் 1-ம் தேதியிலிருந்து 5-ம் தேதி வரை துபாயில் செம ஆட்டம் போட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அதில் ஹை லைட் விஷயம்தான் 'பாலைவன சவாரி!’

'துபாய் மண்ணே வணக்கம்’ என்று அங்கே கால் வைத்த நொடியிலேயே பரவசம் பக்காவாகப் பற்றிக் கொண்டதாம். இவர்கள் அத்தனை பேரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு பாலைவனம் நோக்கிப் பறந்திருக்கின்றன லேண்ட் க்ரூஸர்கள்.

பாலைவனத்தில் நடந்த பெல்லி டான்ஸ்!

கணிசமான நேரப் பயணத்தில் அந்த பாலைவன சஃபாரி ஏரியா வந்திருக்கிறது. 'வி ஸ்டார்ட் தட்

பாலைவனத்தில் நடந்த பெல்லி டான்ஸ்!

த்ரில்லிங் ஜர்னி ஹியர்’ என்று சொல்லி இறங்கிய கார் டிரைவர்கள், டயர்களிலிருந்து சுமார் 40 சதவிகிதம் காற்றை இறக்கிவிட்டிருக்கிறார்கள். (காற்று இந்த அளவில் இருந்தால்தான் பாலைவனத்தில் மேக்ஸிமம் பாதுகாப்பாகச் செல்ல முடியுமாம்). காரின் கண்ணாடிக் கதவுகள் பக்காவாக ஏற்றிவிடப்பட்ட பின் அத்தனை பேரும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ள, அந்த மணல் கடலில் மூழ்கி நகர ஆரம்பித்திருக்கின்றன லேண்ட் க்ரூஸர்கள்.

பாதையற்ற பாலைவனத்தில் எகிடு தகிடாய் டிரைவ் செய்வது டிரைவர்களின் சாமர்த்தியம். செங்குத்தான மணல் மேடுகளில் 90 டிகிரியில் ஏறி சறுக்குவது, ஜஸ்ட் லைக் தட் ஆக டர்ன் செய்வது, மணல் மேடுகளுக்கிடையில் வெகுவேகமாகப் பாய்ந்து நான்கு வீல்களையும் காற்றில் சுழல வைப்பது என்று அந்த மணல் தேசத்தில் அதகளம் பண்ணுகிறார்கள் டிரைவர்கள்.

ஆளுக்கொரு திசையிலும் ஓட்டிக் கொள்ளலாம். ஆனால், சில நேரங்களில் இதில் ரேஸும் நடக்குமாம். மிக மேடான பகுதியிலிருந்து செங்குத்தாக இறங்கி, அந்த பெரும் பள்ளத்திலிருந்து மீண்டும் மேடேறும் நொடிகளில், 'கோதாவரி, என் வயித்துக்குள்ளே யாரோ ஆட்டோ ரிக்ஷா ஓட்டுற மாதிரி இருக்குடி!’ என்று விசு பாணியில் புலம்பியிருக்கிறார்கள். கோவை ரேடியோ சிட்டி டீம் இருந்த கார் கெக்கே பிக்கேவென சாய்ந்து, பாய்ந்து ஓடியபோதுதான் 'ஹெவியா லஞ்ச் எடுத்துக்கிட்டது எவ்வளவு இம்சைடா சாமீ’ என்று அந்தப் பாலைவனத்தில் வெந்து போயிருக்கிறார் லட்சுமி நாராயணன்.

பிறகு, மணல் வெளிக்குள் வந்து மீண்டும் அந்த த்ரில்லிங் பயணம் தொடங்கியிருக்கிறது. இப்படியாக சுமார் இரண்டு மணி நேரம் இந்த த்ரில்லிங் பயணம் நடந்திருக்கிறது. இந்தப் பயணம் முடிந்த இடத்தில் இருக்கிறது பெல்லி டான்ஸ் நடத்தப்படும் ஏரியா! பெல்லி டான்ஸ் ஆரம்பமான போது, அங்கே இங்கே அசையாமல் அத்தனை பேரும் (குறிப்பாக ஆண்கள்) ஆணியடித்தது போல் உட்கார்ந்து விட்டார்களாம். இதெல்லாம் முடிந்த பிறகு அந்த இடத்திலிருந்து மீண்டும் துபாய் சிட்டி நோக்கி தார் சாலையில் பயணமாகி திரும்பியிருக்கிறார்கள்!