கார்ஸ்
Published:Updated:

ட்ரீம் பைக்ஸ்..

ட்ரீம் பைக்ஸ்..

சார்லஸ்

''கையில் காசு இல்லை. ஆனால், நான் வாங்கினால் இந்த சூப்பர் பைக்தான் வாங்குவேன்!' என கனவு காணும் சூப்பர் பைக் ரசிகர்கள் பலர். அவர்கள் லிஸ்ட்டில் டாப் டென்னில் இருக்கும் பைக்குகள் இங்கே!

ட்ரீம் பைக்ஸ்..

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், புத்தம் புதிய 'டோர்ஸோடுர-1200’ பைக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஏப்ரில்லா. V  ட்வின் இன்ஜின், 1200 சிசி திறன் கொண்ட இந்த பைக், 8700 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 130 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஸ்போர்ட், ரெயின், டூரிங் என மூன்று வகையான செட்டிங்குகளைக் கொண்டிருக்கிறது டோர்ஸோடுர. எந்த வகையான சாலையில் பயணிக்கிறோமோ, அதற்கேற்றபடி செட் செய்து கொண்டு இதில் பறக்கலாம்!

ட்ரீம் பைக்ஸ்..

ஹோண்டாவின் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக் VFR-1200 F. 267 கிலோ எடை கொண்ட இந்த பைக், அதிகபட்சமாக 170 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஹோண்டாவின் பைக்குகளில் மிகவும் பவர்ஃபுல்லான பைக் இது. 6-ஸ்பீடு ட்யூல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸைக் கொண்டிருக்கிறது இந்த பைக். ட்யூல் கிளட்ச் என்பதால், நம்மூர் பைக்கு களில் கியர் மாற்றும்போது வரும் கடமுடா சத்தம் இதில் சுத்தமாக இருக்காது. சொல்லப் போனால், கியர் மாறுவதையே உணர முடியாது. 200 கி.மீ  வேகம் வரை பறக்கும் இந்த ஹோண்டா பைக்!

ட்ரீம் பைக்ஸ்..

ஹார்லி டேவிட்ஸனின் புத்தம் புதிய பைக் 'ஸ்போர்ட்ஸ்டர் ஃபார்ட்டி எய்ட்.’ கிளாஸிக் பைக்காக இதை வடிவமைத்திருக்கிறது பிரம்மாண்டமான பெட்ரோல் டேங்க்காக இல்லாமல், மிகவும் சிறிதாக வடிவமைத்து இருக்கிறது ஹார்லி. இதில் வெறும் 8 லிட்டர் பெட்ரோலையே நிரப்ப முடியும். ரியர் வியூ கண்ணாடிகள் ஹேண்டில் பாருக்கு மேலாக இல்லாமல் கீழே வைக்கப்பட்டு இருக்கிறது. 80  90 bhp சக்தி கொண்டது!

ட்ரீம் பைக்ஸ்..

பிஎம்டபிள்யூவின் சூப்பர் ஸ்பெஷல் சூப்பர் பைக் 'ஆர்-1200 ஆர்.’ 109 bhp சக்தி கொண்ட இந்த பவர்ஃபுல் பைக்கை, எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஏபிஎஸ் பிரேக்குடன், ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது பிஎம்டபிள்யூ. 223 கிலோ எடை வரை தாங்கக்கூடிய சூப்பர் சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கிறது ஆர்-1200 ஆர். மணிக்கு 200 கி.மீ வேகம் வரை பறக்கக் கூடிய இந்த பிஎம்டபிள்யூ, டூரிங் செல்ல சிறந்த பைக்!

ட்ரீம் பைக்ஸ்..

சுஸ¨கியின் எவர்கிரீன் பைக் ஹயபூஸா. 1300 சிசி திறன் கொண்ட ராட்சஸன் என்றே இதை அழைக்கிறார்கள். உலகிலேயே பவர்ஃபுல் பைக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பைக் சுஸ¨கி ஹயபூஸாதான். 1340 சிசி திறன் கொண்ட ஹயபூஸா அதிகபட்சமாக 197 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட ஹயபூஸா, 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.5 விநாடிகளில் கடந்துவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கி.மீ-க்கும் மேல்!

ட்ரீம் பைக்ஸ்..

சுஸ¨கி ஹயபூஸாவை வீழ்த்திய உலகின் பவர்ஃபுல் பைக், கவாஸாகி நின்ஜா ZX14. 0-100 கி.மீ வேகத்தை இரண்டே விநாடிகளில் கடக்கும் அல்ட்டிமேட் பைக். 1352 சிசி, 190 bhp சக்தி கொண்ட இந்த பைக், பர்ஃபாமென்ஸின் உச்சம். 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் எடை 257 கிலோ மட்டுமே! உலகின் பவர்ஃபுல் பைக்கான இதில் ஏபிஎஸ் பிரேக்ஸ் இல்லை. ஆனாலும், சூப்பர் ஸ்டெபிளிட்டி பைக்காக இருக்கிறது கவாஸாகி நின்ஜா ZX14.

ட்ரீம் பைக்ஸ்..

கேடிஎம் தயாரிக்கும் ஒரே சூப்பர் பைக் 'ஆர்சி-8 ஆர்.’ 1195 சிசி திறன் கொண்ட இந்த கேடிஎம், அதிகபட்சமாக 175 bhp சக்தியைச் சிதற விடுகிறது. சீட், கைப்பிடி, ஃபுட் ரெஸ்ட் ஆகியவற்றை ஓட்டுபவரின் உயரத்துக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியை இதில் அறிமுகப்படுத்தி இருக்கிறது கேடிஎம். 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட கேடிஎம் ஆர்சி-8 ஆர், மணிக்கு 250 கி.மீ வேகத்தைத் தாண்டிப் பறக்கிறது!

ட்ரீம் பைக்ஸ்..

இத்தாலியின் பவர்ஃபுல் நேக்கட் பைக், டுகாட்டி 'மான்ஸ்ட்டர் ஈவோ 1100.’ அடுத்த ஆண்டுக்கான புதிய மான்ஸ்ட்டர் ஈவோ 1100 பைக்கை இப்போதே அறிமுகப்படுத்தி விட்டது டுகாட்டி. 1100 சிசி திறன்,100 bhp சக்தி, 10.50 kgm டார்க் என பவர்ஃபுல் பைக்காக வலம் வருகிறது டுகாட்டி மான்ஸ்ட்டர். புதிய மான்ஸ்ட்டரில் காம்பேக்ட்டான எக்ஸாஸ்ட் சிஸ்டம், முழுக்க அட்ஜஸ்ட் செய்யக் கூடிய முன் பக்க ஃபோர்க், புதிய பின் பக்கத் தோற்றம் என மாற்றங்கள் அதிகம். பிரம்போ - பாஷ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் மான்ஸ்ட்டர் ஈவோவின் ஏபிஎஸ் பிரேக்ஸ்தான் உலகிலேயே நம்பர் ஒன் ஏபிஎஸ் பிரேக்ஸ் என பாராட்டப்படுகிறது!

ட்ரீம் பைக்ஸ்..

யமஹாவின் மோட்டோ ஜீபி பைக்தான் 'எம்டி-01.’ பைக் டிசைன் செய்யப்பட்டிருக்கும் விதமே இது பவர்ஃபுல் பர்ஃபாமென்ஸ் பைக் என்பதை உலகுக்கு உணர்த்தும். 1670 சிசி திறன் கொண்டு, அதிகபட்சமாக 90 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 265 கிலோ எடை கொண்ட இந்த பைக், 5-ஸ்பீடு கியர் பாக்ஸைக் கொண்டிருக்கிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 217 கி.மீ!

ட்ரீம் பைக்ஸ்..

இத்தாலியின் இன்னொரு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்தான் எம்வி அகுஸ்ட்டா ‘F 4 RR.’அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த பைக், 998 சிசி திறன் கொண்டது. இதன் அதிகபட்ச சக்தி 201 bhp. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 297 கி.மீ. பர்ஃபாமென்ஸ் பைக்குகளில் ஏப்ரில்லா ஆர்எஸ்வி-4, கவாஸாகி நின்ஜா ZX 10 R பைக்குகளுக்கு எம்வி அகுஸ்டா பைக் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்!