கார்ஸ்
Published:Updated:

விலையைக் குறைத்த ஹோண்டா!

HONDA NEW JAZZ

சார்லஸ்

டிஸ்கவுன்ட் என்றாலே ஏற்ற இறக்கத்துடன் பார்க்கும் ஹோண்டா, கடந்த மூன்று மாதங்களாக டிஸ்கவுன்ட் மேளாக்களை தமிழகம் முழுக்க நடத்தியது ஹோண்டா டீலர்களுக்கே ஆச்சரியமான விஷயம்தான். உதிரி பாகங்களில்கூட டிஸ்கவுன்ட் தர மறுக்கும் ஹோண்டா டீலர்கள், ஹோண்டா ஜாஸ் வாங்கினால் 1.50 லட்சம் ரூபாய் தள்ளுபடி என தெருவுக்கே வந்து கூவிக் கூவி விற்றார்கள்!

விலையைக் குறைத்த ஹோண்டா!
விலையைக் குறைத்த ஹோண்டா!

அதிக இடவசதி, ஹோண்டாவின் தரம், அதிக மைலேஜ் என பல ப்ளஸ்கள் இருந்தாலும், சின்ன காரான ஹோண்டா ஜாஸை 8 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது ஹோண்டா. விற்பனைக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே ஜாஸின் விற்பனை சரிய ஆரம்பித்துவிட்டது. ஏராளமான கார்கள் விற்பனையாகாமல் ஷோ ரூமுக்குள் முடங்க, டீலர்களிடம் இருந்தே ஹோண்டாவுக்கு பிரஷர்! இதனால் டீலர்களிடம் இருந்த பழைய கார்களை எல்லாம் டிஸ்கவுன்ட் மூலம் விற்றுவிட கிரீன் சிக்னல் கொடுத்து, பழைய ஸ்டாக்குகளை கிளியர் செய்தது ஹோண்டா.

இப்போது அதிகாரப்பூர்வமாக பழைய ஜாஸைவிட இரண்டு லட்ச ரூபாய் விலை குறைவான புதிய ஜாஸை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஹோண்டா. புதிய ஜாஸின் இன்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை. வெளித் தோற்றத்தில்தான் அத்தனை மாற்றமும். முன்பக்க கிரில் ட்ரிம் செய்யப்பட்டு இன்னும் கூடுதல் பொலிவுடன் காட்சி தருகிறது. அலாய் வீல்களை அறிமுகப்படுத்தி இருப்பதோடு பின் பக்க பம்பர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இன்னமும் மியூஸிக் சிஸ்டம் இதில் இல்லை. ஐ-பாட் இணைத்துப் பாட்டு கேட்கும் வசதி மட்டுமே உண்டு!