Published:Updated:

சூப்பர்பை விட சூப்பர் கார்!

ரீடர்ஸ் ரெவ்யூ SKODA OCTAVIA NEWபா.சிதம்பர பிரியா படங்கள் ஏ.சிதம்பரம்

சூப்பர்பை விட சூப்பர் கார்!

ரீடர்ஸ் ரெவ்யூ SKODA OCTAVIA NEWபா.சிதம்பர பிரியா படங்கள் ஏ.சிதம்பரம்

Published:Updated:

தூத்துக்குடியில் பாரம்பரியமான நகைக்கடை எங்களுடையது. என் குடும்பத்தில் நான்கு பேர். என் மனைவி செண்பகவல்லி, மகள் ஸ்ரீநிதி, மகன் ஸ்ரீராம் கோவிந்த் ஆகிய நாங்கள் நால்வருடன் டிரைவரும் சேர்த்து ஐந்து பேர், வசதியாகப் பயணம் செய்வதற்கு ஏற்றதுபோல, ஒரு லக்ஸ¨ரி கார் தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது என் மகன் ஸ்ரீராம், மோட்டார் விகடனில் வந்த ஒரு கட்டுரையில், இமயமலைக்கு ஆக்டேவியா காரில் ஒருவர் பயணித்த தகவலைப் படித்துவிட்டு, 'வாங்கினால் இந்த கார்தான் வாங்க வேண்டும்’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். அதனால், புதிய ஸ்கோடா ஆக்டேவியா டீசல் காரை வாங்கத் தீர்மானித்தேன்.

என் கார் பதிவு எண்: TN 69 AP 4777. இது, எம்ஜிஆர் காரின் பதிவு எண். எனக்கு எம்.ஜி.ஆர் ரொம்பப் பிடிக்கும். அதனால், என்னிடம் உள்ள எல்லா காருக்கும் இதுதான் நம்பர்.

சூப்பர்பை விட சூப்பர் கார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படி இருக்கிறது ஆக்டேவியா?

தூத்துக்குடியில் முதன்முதலில் புதிய ஆக்டேவியா வாங்கியது நான்தான். இப்போது, எனக்குத் தெரிந்த எல்லோரிடமும் நான் இந்த காரைத்தான் பரிந்துரைக்கிறேன். அந்த அளவுக்கு என்னைக் கவர்ந்துவிட்டது ஆக்டேவியா. லிட்டருக்கு சராசரியாக 14 கி.மீ வரை மைலேஜ் அளிக்கிறது.

எவ்வளவு தூரம் பயணம் போனாலும்,  இதன் 2.0 லிட்டர் இன்ஜின் சூடாவதோ, சத்தம் போடுவதோ இல்லை. 30 - 32 லட்சம் வரை விலைகொண்ட ஸ்கோடா சூப்பர்ப்-ஐவிட, இதன் இன்ஜின் டாப்! காரின் பாடி, ஆடி கார் போல உறுதியாக இருக்கிறது. ஆன்டி பின்ச் விண்டோஸ் (குழந்தைகளுக்காக), பனோரமிக் சன் ரூஃப், 8 ஸ்பீக்கர்கள், டச் ஸ்கிரீன், யுஎஸ்பி போர்ட், 6 காற்றுப் பைகள், அலாய் வீல், முழுமையான அழகான வேலைப்பாடுகளுடன் லெதர் சீட் கவரிங், ஏ.பி.எஸ் ஈ.பி.டி, ஈ.எஸ்.பி என எல்லாமே பக்காவாக இருக்கின்றன. மேலும், இதன் DSG டிப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸின் செயல்பாடு, மிகவும் அருமையாக இருக்கிறது. டூயல் கிளட்ச் சிஸ்டம், கியர் மாறுவதே தெரியாமல் ஸ்மூத்தாக இயங்குகிறது. ஸெனான் எல்இடி ஹெட்லைட்ஸ், இந்த காரின் சூப்பர் அழகுக்குக் காரணம் எனச் சொல்லலாம். இதற்கு முன்பு நான் வைத்திருந்த ஃபோக்ஸ்வாகன் ஜெட்டாவை மாற்றுவதற்கு முக்கியக் காரணம், இட வசதிதான். இந்த காரில் நல்ல இருக்கை வசதி. பின் சீட்டில் மூன்று பேர் வசதியாக உட்காரலாம். டிக்கியில் ஒரு வீட்டையே பேக் செய்யும் அளவுக்கு இட வசதி அதிகம்.

ஷோரூம் அனுபவம்

திருநெல்வேலி ஆரோ மோட்டார்ஸ் ஸ்கோடா டீலரிடம் சென்றேன். கார் பதிவு செய்து கிடைக்க ஆறு மாதங்கள் ஆகும் எனச் சொன்னார்கள். எவ்வளவு சீக்கிரம் கிடைக்குமோ, அவ்வளவு சீக்கிரம் வேண்டும் எனச் சொன்னேன். எனக்கு மூன்று மாதங்களிலேயே டெலிவரி கொடுத்து விட்டார்கள். டெஸ்ட் டிரைவுக்காக திருநெல்வேலியில் இருந்து குற்றாலம் வரை அழைத்துச் சென்றார்கள்.

சூப்பர்பை விட சூப்பர் கார்!

பிடித்தது

முதலில் காம்பேக்ட்டான அளவு. ஸ்கோடா ரேபிட் மாதிரி சின்னதும் இல்லை; ஸ்கோடா சூப்பர்ப் அளவுக்குப் பெரியதும் இல்லை. சரியான அளவு ஸ்கோடா ஆக்டேவியா. இதன் சூப்பரான பிரேக் சிஸ்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. 120 கி.மீ வேகத்தில் சென்றாலும் பிரேக் அடித்ததும் கார் கட்டுப்பாட்டுக்குள் நிற்கிறது. இந்த காரில் இன்னொரு அழகான விஷயம், டயர்கள் திரும்பும் திசைக்கும் ஏற்ப திரும்பும் ஹெட்லைட்ஸ். பென்ஸ், ஜாகுவார் போன்ற காரில் இருக்கும் வசதிகள் எல்லாம் இதில் இருக்கின்றன. சிறப்பான உள்கட்டமைப்பு, ஏகப்பட்ட வசதிகள், சொகுசு என ஒரு ராயலான காருக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கின்றன.

சர்வீஸ்

எல்லா உதிரி பாகங்களும் திருநெல்வேலி ஆரோ மோட்டார்ஸிலே கிடைக்கிறது. இரண்டு முறை சர்வீஸ் செய்துள்ளேன். ஆனால், உதிரி பாகங்கள் விலைதான் ரொம்ப அதிகம். ஹெட்லைட்ஸ், எல்.ஈ.டி செட் மட்டுமே 1.25 லட்சம் ஆகிறது. வாரன்ட்டி இருக்கும் வரை பிரச்னை இல்லை. அதன் பிறகுதான்  கொஞ்சம் சிக்கல் என நினைக்கிறேன்.

பிடிக்காதது

சாலை மோசமாக இருந்தால், பின் சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்வது அலுப்பாக இருக்கிறது. பின்பக்க சஸ்பென்ஷன் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். மேலும், ரிவர்ஸ் கேமரா இல்லை. சென்ஸார் இருந்தாலும், கேமரா இல்லாமல் இருப்பது ரிவர்ஸ் எடுக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. இப்போது வருகிற தொழில்நுட்பங்களில் இந்த மாதிரி  சௌகரியம் இல்லாமல் இருக்கக் கூடாது. அப்புறம் ஸ்கோடா சூப்பர்ப்-ஐவிட ஸ்கோடா ஆக்டேவியாவில் ஹார்ன் சத்தம் ரொம்பக் குறைவு. வாரன்ட்டி பாதிக்கப்படும் என்பதால், ஷோரூமில் ஹாரனை மாற்றக் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள். சென்டர் லாக் சிஸ்டத்தில், அன் லாக் செய்தால், டிக்கியும் திறந்து விடுகிறது. அதனால், கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால், எல்லோரையும் உள்ளேவைத்துப் பூட்டிவிட்டுக் கீழே இறங்க வேண்டும். இது ஒரு பெரிய பின்னடைவு.

சூப்பர்பை விட சூப்பர் கார்!

உங்கள் தீர்ப்பு

பெரிய கார்களில் இருக்கும் அத்தனை அம்சங்களும் ஸ்கோடா ஆக்டேவியாவில் இருப்பதால், ஏகப்பட்ட பணம் செலவழித்து பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஜாகுவார் என வாங்காமல், ஆக்டேவியாவை செலக்ட் செய்யலாம். 26,000 கி.மீ சொகுசான பயணம் செய்த அனுபவத்தில் சொல்கிறேன், நம்பி வாங்கலாம். ராயல் லுக், சிறந்த உள்கட்டமைப்பு, நல்ல ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றுக்கு 24 லட்சம் செலவு செய்யலாம். ஸ்பேர் பார்ட்ஸ் விலையைக் குறைத்தால், இன்னும் தரமான காராக இருக்கும் ஆக்டேவியா.