Published:Updated:

வானவில்! ரீடர்ஸ்

ரெவ்யூ: ட்ரையம்ப் போனெவில் T100 ச.ஜெ.ரவி படங்கள்: தி.விஜய்

வானவில்! ரீடர்ஸ்

ரெவ்யூ: ட்ரையம்ப் போனெவில் T100 ச.ஜெ.ரவி படங்கள்: தி.விஜய்

Published:Updated:

புதிதாக கார், பைக் விற்பனைக்கு வருகிறது என்று செய்திகள் வருவதற்கு முன்பே, அதை வாங்கி வீட்டில் நிறுத்திவிடும் கில்லாடிகள் கோவைக்காரர்கள். இப்போதுதான் சென்னையிலேயே டீலர்ஷிப் திறந்தார்கள், அதற்குள் டிரையம்ப் போனெவில் பைக்கை கோவையில் வாங்கிவிட்டார் அரசு.

ஏன் ட்ரையம்ப் போனெவில்?

'நான் காலேஜ் படிக்கிறப்போ, 'தி கிரேட் எஸ்கேப்' படம் பார்த்தேன். அந்தப் படத்தில் 'ட்ரையம்ப்’போட ஓல்டு மாடல் பைக் இருக்கும். அப்ப இருந்தே ட்ரையம்ப் பைக் மேல எனக்கு ரொம்ப ஆர்வம். எப்படா இந்த பைக்கை வாங்குவோம்னு இருந்தது. இப்போ அது நனவாகியிருக்கு. இதுக்கு முன்னாடி புல்லட் கிளாஸிக் 500 வெச்சிருந்தேன். ட்ரையம்ப் பைக் வாங்கணும்னு முடிவு பண்ணின உடனே, என் மனசுக்குப் பட்டது ட்ரையம்ப் போனெவில்தான். நாம ஓட்டுற பைக் புதுசாவும், யுனிக்காகவும், நமக்கு வசதியாவும் இருக்கணும். அதுக்கு இந்த போனெவில்தான் சரியான சாய்ஸ். கோயமுத்தூர்ல இப்போது என்கிட்ட மட்டும்தான் இந்த பைக் இருக்கு. இது எனக்குப் பெருமைதானே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வானவில்! ரீடர்ஸ்

ஷோ ரூம் அனுபவம்

முதல்ல பெங்களூருலதான் இந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்த்தேன். அதுக்குள்ள சென்னையில ட்ரையம்ப் ஷோரூம் ஆரம்பிக்கிற தகவல் கிடைச்சது. சென்னைக்குப் போய் அங்கிருக்கிற ஷோரூமுக்கு போன் பண்ணினேன். ஹோட்டலுக்கே பைக்கைக் கொண்டுவந்தாங்க. டெஸ்ட் டிரைவ் பண்ணினேன். ஒப்பிட்டுப் பார்க்கிறதுக்காக, ஹார்லி டேவிட்சனையும் ஓட்டிப் பார்த்தேன். ஆனா, ட்ரையம்ப் போனெவில் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. உடனே புக் பண்ணினேன். ஷோரூம்கூட ஓப்பன் ஆகலை. அதுக்கு முன்னாடியே நான் புக் பண்ணிட்டேன். ரெண்டு மாசத்துலேயே டெலிவரி பண்ணிட்டாங்க. கஸ்டமர் சர்வீஸ் ரொம்பவும் திருப்திகரமாக இருந்தது.

சர்வீஸ் எப்படி?

பைக் வாங்குறப்போ சர்வீஸுக்கு என்ன பண்றதுனு ஒரு கேள்வி மனசுக்குள்ள இருந்தது. 'போன் பண்ணினா நாங்களே வந்துடுவோம்’னு சொன்னாங்க. சர்வீஸ் டயம் வந்ததும் போன் பண்ணினேன். சென்னையில் இருந்து ரைடிங் கிட் உட்பட எல்லா கிட்டோடயும் சர்வீஸுக்கு வந்துட்டாங்க. நாம இருக்கிற இடத்துக்கே வந்து சர்வீஸ் செஞ்சு கொடுத்துட்டுப் போறாங்க. சர்வீஸைப் பொறுத்தவரை இது வரைக்கும் பெஸ்ட்டா இருக்கு.

பிடித்தது

பைக்கோட ஸ்மூத்னெஸ்தான் ரொம்பப் பிடிச்சது. சூப்பர் பைக்குகளைப் பொறுத்தவரை 1,000 சிசி வரைக்கும் டிஸ்ப்ளேஸ்மென்ட் இருக்கிறதால, பைக்கில் போகும்போது அதிர்வுகள் அதிகமா இருக்கும். ஆனா, ட்ரையம்ப் போனெவில் பைக்கில் அதிர்வுகள் இல்லை. ரொம்ப ஸ்மூத்தா இருக்கு.

அடுத்து ஆஃப் ரோடு பயணத்துக்கு ஏற்ற பைக் இதுதான். ஆஃப் ரோடு செல்லும்போது, ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட சில பைக்குகள் கீழே அடி வாங்கும். ஆனா, இந்த பைக் கீழே தட்டலை. அதேமாதிரி, பைக் ஹீட் ஆகும்கிற பேச்சுக்கும் இடம் இல்லை. எத்தனை தூரம் வேணும்னாலும் தொடர்ச்சியா பைக்கை ஓட்டலாம். பைக்கோட குரோம் ஃபினிஷிங் செம அட்ராக்டிவ். பெட்ரோல் டேங்க், சைலன்ஸர்ல குரோம் மின்னுது.

பிடித்த இடத்திலேயே நிற்கும் பிரேக்; டர்னிங் ரேடியஸ் குறைவுங்கிறதால, ஈஸியா சின்னச் சின்ன ரோட்டுலகூட ஓட்ட முடியுது; நல்ல பவர் டெலிவரி; அட்டகாசமான பெர்ஃபாமென்ஸ்... இப்படிப் பிடிச்ச விஷயங்கள் நிறைய!

வானவில்! ரீடர்ஸ்

பிடிக்காதது

பைக் லுக்தான்! பார்க்கிறவங்க இதை புல்லட்னு நெனைச்சுக்கிறாங்க. ஹார்லி டேவிட்சன் மாதிரி ஹைகேட்ச்சிங்கா இந்த பைக் இல்லைங்கிறது மைனஸ். அதே மாதிரி, சைலன்ஸர் சத்தம் ரொம்பவும் குறைவு. இதற்காக 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு செய்ய வேண்டியது இருக்கு. பைக்கோட எடை 240 கிலோ. அதனால, பைக்கை நிறுத்தி எடுக்கிறதுல கொஞ்சம் சிரமம் இருக்கு. மத்தபடி பெரிய குறைகள் எதுவும் இல்லை.

எப்படி இருக்கிறது ட்ரையம்ப் போனெவில்?

பெர்ஃபாமென்ஸ்ல சிறப்பா இருக்கு. பைக் வாங்கினதும் பாண்டிச்சேரி வரைக்கும் ரைடு போனேன். கிட்டத்தட்ட 1,000 கி.மீ. கொஞ்சம்கூட அலுப்பு தெரியலை. 160 கி.மீ. வேகம் வரைக்கும் பாதுகாப்பாப் போக முடியுது. லிட்டருக்கு 18 கி.மீ. மைலேஜ் கிடைக்குது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு கார் மாதிரியான சொகுசு வாகனம். ட்ரையம்ப் போனெவில்... ஒரு கலர்ஃபுல் வானவில்!