Published:Updated:

மோட்டார் கிளினிக்!

மோட்டார் கிளினிக்!

மோட்டார் கிளினிக்!

மோட்டார் கிளினிக்!

Published:Updated:

நான் ஒரு காம்பேக்ட் செடான் காரை வாங்க விரும்புகிறேன். பட்ஜெட் பற்றிப் பிரச்னை இல்லை, ஆனால், கார்கள் பற்றிய தெளிவு எனக்கு இன்னும் வரவில்லை. கடந்த ஆகஸ்டு மாத மோட்டார் விகடன் இதழில், டாடா ஜெஸ்ட் பற்றி எழுதியிருந்தீர்கள். புது காராக இருக்கிறதே... அதை வாங்கலாம் என்றால், என் நண்பர்கள் 'டாடா வேண்டாம். மாருதி டிசையர் வாங்கு' என்கிறார்கள். ஏன், டாடா ஜெஸ்ட் நன்றாக இல்லையா? இ.பிரேம்குமார், கோவை.

மோட்டார் கிளினிக்!

இந்தியச் சந்தையில் ஜெஸ்ட் கார்தான் டாடா மோட்டார்ஸுக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை. டாடா மான்ஸாவின் காம்பேக்ட் செடான் மாடல்தான் ஜெஸ்ட். ஆனால், ஒரு புதிய கார் என்று சொல்லும் அளவுக்கு காரின் அனைத்து விஷயங்களையும் புதிதாக மாற்றியிருக்கிறார்கள். மேலும், இப்போது இந்தியச் சந்தையில் டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன்கொண்ட ஒரே கார் ஜெஸ்ட்தான். புதிய ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் சுமார் எனச் சொல்லலாம். காரின் உள்ளே டச் ஸ்க்ரீன், வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் போன்றவை இந்த செக்மென்ட்டுக்கு மிகவும் புதிது. எல்லாவற்றையும்விட டாடா மோட்டார்ஸ் ஜெஸ்ட்க்குக் கொடுத்திருக்கும் மிகப் பெரிய டானிக் - விலைதான். விலை குறைவாக இருக்கிறது ஜெஸ்ட். குறைந்த பட்ஜெட்டுக்குள் அதிக வசதிகள்கொண்ட செடான் கார் வாங்க வேண்டும் என்றால், ஜெஸ்ட் நல்ல சாய்ஸ்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னிடம் ஹூண்டாய் ஆக்ஸென்ட் கார் இருக்கிறது. நிறைய வருடங்களாக என்னிடம் இருக்கும் இந்த காரை இப்போது விற்கத் திட்டமிட்டிருக்கிறேன். காரை வாங்க ஒருவர் தயாராக இருக்கிறார். ஆனால், காரை விற்கும்போதே நோ-க்ளைம் போனஸை அவர் பெயருக்கு மாற்றச் சொல்கிறார். இதுபோன்ற இன்ஷூரன்ஸ் விஷயங்களை என் மகன்தான் பார்த்துக் கொள்வான். அவன் இப்போது வெளிநாட்டில் இருப்பதால், என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. நோ-க்ளைம் போனஸை எப்படி அவர் பெயருக்கு மாற்றுவது? ஜெ.கிளாட்வின், திருச்சி.

நோ- க்ளைம் போனஸ் என்பது காரின் இன்ஷூரன்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள்

மோட்டார் கிளினிக்!

ஆக்ஸென்ட் காரை வாங்கியதில் இருந்தே, நீங்கள் எந்த க்ளைமும் செய்யவில்லை என்றால், உங்களுக்கு நோ-க்ளைம் போனஸ் அதிகமாக இருக்கும். இதனால், காருக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியமும் குறைவாக இருக்கும். ஆனால், 'நோ- க்ளைம் போனஸ் என்பது இன்ஷூரன்ஸ் எடுப்பவரின் பெயருக்குக் கொடுக்கப்படுவதே தவிர, காருக்குத் தரப்படுவது இல்லை. உங்கள் காரின் இன்ஷூரன்ஸை மட்டுமே அவருக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும். நோ-க்ளைம் போனஸை அவர் பெயருக்கு மாற்ற முடியாது' என்கிறது ஐஆர்டிஏ (மிஸிஞிகி இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டரி அண்டு டெவெலப்மென்ட் அத்தாரிட்டி). நீங்கள் சேமித்த நோ-க்ளைம் போனஸை, நீங்கள் வாங்கப்போகும் அடுத்த காருக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது உங்கள் மகன் பெயருக்கு டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும், இந்த நோ க்ளைம் போனஸ் விஷயத்தை வித்தியாசமாகக் கையாளும். எனவே, கவனம் தேவை.

நான் ஹோண்டா பிரியோ கார் வைத்திருக்கிறேன். என் வேலையின் இயல்பு காரணமாக, வாரத்தில் மூன்று முறையாவது மதுரையில் இருந்து கோவைக்கோ, திருநெல்வேலிக்கோ தனியாக காரிலேயே சென்று திரும்புவது வழக்கம். எப்போதுமே நான்தான் கார் ஓட்டுவேன். கிட்டத்தட்ட 6 மாத காலங்களாக இப்படிச் செய்துவருகிறேன். எனக்கு வயது இப்போது 40 ஆகிறது. கடந்த வாரம் இரண்டு முறை கார் ஓட்டும்போது லேசாகக் கண் அயர்ந்துவிட்டேன். நல்லவேளையாக, உடனடியாக விழித்துக்கொண்டதால், இரண்டு முறையும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இன்னொரு முறை ஓட்டும்போது தூங்கி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. வேலை காரணமாக, இந்தப் பயணங்களையும் தவிர்க்க முடியாது. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? மு.முகமது முஸ்தபா, திருமங்கலம்.

மோட்டார் கிளினிக்!

வழக்கமாக, நீங்கள் எந்த நேரத்தில் கார் ஓட்டுகிறீர்கள் என்று குறிப்பிடவில்லை. எப்படியிருந்தாலும், இரவு நேரத்தில் தனியாக கார் ஓட்டினால், தயதுசெய்து நிறுத்திவிடுங்கள். பகல் நேரத்தில் ஓட்டினாலும், கூடவே யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். மியூஸிக் சிஸ்டம் எல்லாம் இருந்தாலும், தொடர்ந்து ஓட்டும்போது எல்லோருக்கும் தூக்கம் வருவது இயல்புதான். உடன் பயணிக்க யாரும் இல்லை என்றால், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை காரைவிட்டுக் கீழே இறங்கி, டீ அல்லது தண்ணீர் குடித்துவிட்டு, சின்னதாக சில எக்சர்சைஸ்களைச் செய்துவிட்டு பயணத்தைத் தொடருங்கள்.

நான் கோவைக்கு அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சூப்பர்வைசராகப் பணிபுரிகிறேன். என் தேவை, ஓட்ட மிக எளிதாக இருக்கும் ஒரு ஸ்கூட்டர். அடிக்கடி, சர்வீஸ், ரிப்பேர் என என்னால் அலைய முடியாது என்பதால், மெயின்டெனன்ஸ் எளிதாக உள்ள ஸ்கூட்டராக இருக்க வேண்டும். இப்போது டிவிஎஸ், யமஹா, சுஸ¨கி என நிறைய நிறுவனங்கள் இருப்பதால், எந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாங்குவது எனக் குழப்பம்.  கே.ஹரிணி, அவினாசி.

மோட்டார் கிளினிக்!

சந்தையில் இப்போது 100சிசி, 125சிசி என இரண்டு ஸ்கூட்டர் செக்மென்ட்டுகள் உள்ளன. இவற்றில், 125 சிசி செக்மென்ட்டில் உள்ள ஸ்கூட்டர்களான சுஸ¨கி ஸ்விஷ், ஆக்சஸ், ஹோண்டா ஆக்டிவா 125 ஆகியவை சற்று பருமனான ஸ்கூட்டர்கள். உங்களால் எடை அதிகமான ஸ்கூட்டர்களை எளிதாக ஓட்ட முடியும் என்றால், 125 சிசி செக்மென்ட் ஸ்கூட்டர்களை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டுத் தேர்ந்தெடுக்கலாம். பெரிய ஸ்கூட்டர்களை ஓட்ட முடியாது என்றால், ஹோண்டா ஆக்டிவா ஐ, யமஹா ரே, டிவிஎஸ் ஜூபிட்டர் ஆகிய ஸ்கூட்டர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். டிவிஎஸ், ஜெஸ்ட் எனும் புதிய ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டுவருகிறது. அதையும் ஒருமுறை ஓட்டிப் பாருங்கள். மற்ற ஸ்கூட்டர்கள் போல் இல்லாமல், ஸ்டைலிஷான ஸ்கூட்டர் வேண்டுமென்றால், பியாஜியோ வெஸ்பாவை வாங்கலாம். ஆனால், விலை அதிகம்.

150சிசி செக்மென்ட்டில் பஜாஜ், டிஸ்கவர் மாடல் பைக்குகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதே செக்மென்ட்டில் பல்ஸர் பைக்கையும் வைத்திருக்கிறது. நான் பல்ஸரை வாங்க இருந்த இந்த

மோட்டார் கிளினிக்!

நேரத்தில், டிஸ்கவர் 150 பைக் விற்பனைக்கு வந்திருப்பதால், இரண்டில் எதை வாங்குவது என்று குழப்புகிறது. எதை வாங்கலாம்? க.சத்யா, தூத்துக்குடி.

டிஸ்கவர் 150, பல்ஸர் 150 - இரண்டுமே 150சிசி செக்மென்ட்டில் இருந்தாலும், வெவ்வேறான வாடிக்கையாளர்களைக் குறிவைத்து விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பல்ஸர் சற்று ஸ்போர்ட்டியான பைக். பைக்கின் பெர்ஃபாமென்ஸில் இருந்து மைலேஜ் வரை எல்லாமே ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்குக்கான குணாதிசயங்களோடு இருக்கும். டிஸ்கவர் 150 ஒரு ப்ரீமியம் கம்யூட்டர் பைக். தினமும் அலுவலகத்துக்குச் சென்றுவர, ஒரு குடும்பத் தலைவருக்கு ஏற்ற பைக் என டிஸ்கவர் 150 மாடல்களைச் சொல்லலாம். பல்ஸரும் இதே செக்மென்ட்தான் என்றாலும், அதில் ஒரு யூத்தான, ஸ்போர்ட்டியான அப்பீல் உள்ளது. எனவே, உங்கள் மனதுதான் இதற்கான விடையைச் சொல்ல வேண்டும். இரண்டு பைக்குகளையும் டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுங்கள்.