Published:Updated:

வெடிக்கும் பனிப் போர்!

சார்லஸ்

வெடிக்கும் பனிப் போர்!

சார்லஸ்

Published:Updated:

ராஸ்பெர்க்கா, ஹாமில்ட்டனா? சாம்பியன் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்துக்கொண்டே போகிறது. இந்த ஆண்டு இதுவரை 13 ரேஸ் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், 11 போட்டிகளில் நிக்கோ ராஸ்பெர்க்கும், லூயிஸ் ஹாமில்ட்டனும் மாறி மாறி வெற்றி பெற்றிருக்கிறார்கள். சாம்பியன்ஷிப் பட்டியலில் ராஸ்பெர்க்கைவிட 11 புள்ளிகள் பின்தங்கியிருக்கும் ஹாமில்ட்டன், சாம்பியன் பட்டம் வெல்வாரா என்கிற சஸ்பென்ஸுடன், இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது ஃபார்முலா-1.

வெடிக்கும் பனிப் போர்!

ஹங்கேரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2014-ம் ஆண்டுக்கான ஃபார்முலா-1 ரேஸின் 13-வது சுற்று, ஹங்கேரியின் புத்தபெஸ்ட் நகரில் ஜூலை 27-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் முதல் இடம்பிடித்த மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க், ரேஸை முதல் இடத்தில் இருந்து துவங்க, ரெட்புல் அணியின் வெட்டல் இரண்டாவது இடத்தில் இருந்தும், வில்லியம்ஸ் அணியின் வால்ட்டரி பொட்டாஸ் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். தகுதிச் சுற்றின்போது இன்ஜின் தீப்பிடித்ததால், கடைசி இடமான 22-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார் லூயிஸ் ஹாமில்ட்டன்.

கடைசி இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினாலும், ஹாமில்ட்டனின் கார் மின்னல் வேகத்தில் பறந்தது. 70 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில் நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ரெட்புல் அணியின் டேனியல் ரிச்சியார்டோ முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். ஃபெராரி அணியின் ஃபெர்னாண்டோ அலான்சோ இரண்டாம் இடம் பிடிக்க, பேய் வேகம் காட்டிய லூயிஸ் ஹாமில்ட்டன், மூன்றாம் இடம் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்தார். மெர்சிடீஸ் அணியின் மற்றொரு வீரர் நிக்கோ ராஸ்பெர்க் நான்காவது இடம்பிடித்தார்.

வெடிக்கும் பனிப் போர்!

இதற்கிடையே ஹங்கேரி ரேஸ் முடிவடைந்ததும், ''ரேஸ் ஓட்டும்போதே, நிக்கோ ராஸ்பெக்கை முன்னால் விடுமாறு அணியில் இருந்து எனக்கு ஆர்டர் வந்தது. அணியின் இந்தப் போக்கு அதிர்ச்சியாக இருக்கிறது'' என்று ரகசியத்தை ஹாமில்ட்டன் போட்டு உடைக்க, டீம் செம அப்செட். ஹாமில்ட்டனின் மின்னல் வேக மூன்றாம் இடம் கொண்டாட்டம் இல்லாமலேயே முடிந்தது.

இன்னும் 8 ரேஸ்களே மீதம் இருக்கும் நிலையில் ராஸ்பெர்க், ஹாமில்ட்டன் பனிப்போர் தீவிரமடையும் என்றே தெரிகிறது!

(இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன்பு, அடுத்த சுற்று பெல்ஜியத்தில் ஆகஸ்ட் 24-ம் தேதி நடந்து முடிந்திருக்கும்)