Published:Updated:

பிரேக் போட்ட மார்க்யூஸ்!

சார்லஸ்

பிரேக் போட்ட மார்க்யூஸ்!

சார்லஸ்

Published:Updated:
பிரேக் போட்ட மார்க்யூஸ்!

தொடர்ந்து 10 ரேஸ்களாக வெற்றி பெற்று, சாதனை படைத்து வந்த மார்க் மார்க்யூஸின் வெற்றிப் பயணத்துக்குத் தடைபோட்டுவிட்டார், டேனி பெட்ரோஸா. ஹோண்டா அணியின் வீரரும் நடப்பு மோட்டோ ஜீபி சாம்பியனுமான மார்க்யூஸ், இந்த ஆண்டு நடைபெற்ற 10 ரேஸ்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுவந்தார். ஆனால், செக் குடியரசில் கடந்த மாதம் நடைபெற்ற ரேஸில், மார்க்யூஸ் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட... சாதனைப் பயணமும் தடைப்பட்டது.

அமெரிக்கா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டோ ஜீபியின் பத்தாவது ரேஸ் போட்டி, அமெரிக்காவின்  இண்டியானாபோலீஸ் நகரில் நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற மார்க்யூஸ், ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார். டுகாட்டியின் டோவிஸியோஸோ இரண்டாம் இடத்தில் இருந்தும், யமஹா வீரர்கள் லாரன்சோ மூன்றாவது இடத்தில் இருந்தும், ராஸி ஐந்தாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே, முதல் இடத்துக்கு முந்தினார் வாலன்டினோ ராஸி. டோவிஸியோஸோ இரண்டாம் இடத்தில் பறந்து கொண்டிருக்க, நான்காவது இடத்துக்குப் பின்தங்கினார் மார்க்யூஸ். ஆனால், பத்தாவது லேப்பின்போது அதிரடி வேகம் காட்டிய மார்க்யூஸ், வாலன்டினோ ராஸியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்துக்கு முன்னேறினார். அடுத்தபடியாக லாரன்சோவும், ராஸியைப் பின்னுக்குத் தள்ள, மூன்றாவது இடத்துக்குப் பின்தங்கினார் ராஸி. இறுதியில் மார்க்யூஸ் வெற்றிபெற, யமஹா வீரர்கள் லாரன்சோவும், ராஸியும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

பிரேக் போட்ட மார்க்யூஸ்!

செக் குடியரசு

செக் குடியரசின் புருனோ நகரில் மோட்டோ ஜீபியின் 11-வது சுற்று ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற்றது. வழக்கம்போல இங்கேயும் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றது மார்க்யூஸ்தான். டேனி பெட்ரோஸா ஐந்தாவது இடத்தில் இருந்தும், யமஹா வீரர்கள் லாரன்ஸோ, ராஸி இருவரும் ஆறாவது, ஏழாவது இடங்களில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். முதல் லேப்பில் முதல் இடத்துக்குப் பறந்தார் டுகாட்டியின் ஆண்ட்ரியா. ஆனால், இரண்டாவது லேப்பிலேயே முதல் இடத்துக்கு முன்னேறினார் லாரன்சோ. ஆறாவது லேப்பின்போது லாரன்சோவைத் தள்ளிவிட்டு, முதல் இடத்துக்கு முன்னேறினார் ஹோண்டா அணியின் டேனி பெட்ரோஸா. இறுதி வரை பெட்ரோஸாவை யாராலும் முந்த முடியவில்லை. தொடர்ந்து வெற்றி பெற்றுவந்த மார்க்யூஸால், இந்த ரேஸில் நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது. லாரன்சோ இரண்டாம் இடமும், ராஸி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

''தொடர்ந்து வெற்றி பெறும்போதே தோல்வியை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். இப்போது பாரம் குறைந்தது போல உணர்கிறேன். இப்போது மக்கள் அடுத்த ரேஸிலும் வெற்றி பெறுவீர்களா எனக் கேட்க மாட்டார்கள்'' என்று ரிலாக்ஸ் பேட்டி கொடுத்திருக்கிறார் மார்க்யூஸ்.

பிரேக் போட்ட மார்க்யூஸ்!

11 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், மார்க் மார்க்யூஸ் சாம்பியன்ஷிப் பட்டியலில் 263 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். டேனி பெட்ரோஸா 186 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், வாலன்டினோ ராஸி 173 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.