Published:Updated:

ஹூண்டாயில் ஒரு நாள்!

வாசகர் விசிட் ர.ராஜா ராமமூர்த்தி, படங்கள்: ஆ.முத்துக்குமார், கு.கார்முகில்வண்ணன்

ஹூண்டாயில் ஒரு நாள்!

வாசகர் விசிட் ர.ராஜா ராமமூர்த்தி, படங்கள்: ஆ.முத்துக்குமார், கு.கார்முகில்வண்ணன்

Published:Updated:
ஹூண்டாயில் ஒரு நாள்!

மோட்டார் விகடன் நடத்திய 'ஹூண்டாய் ஃபேக்டரி விசிட்’ போட்டியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் பங்கேற்க... அதில், 50 பேருக்கு அடித்தது ஜாக்பாட் வாய்ப்பு. ஆகஸ்டு 14-ம் தேதி மோட்டார் விகடன் வாசகர்களுக்காக இருங்காட்டுக் கோட்டையில் இருக்கும் ஹூண்டாய் தொழிற்சாலையின் கதவுகள் திறக்க, அன்றைய நாள் முழுவதும் கார்களின் உருவாக்கத்தை அருகில் இருந்து பார்த்தனர் வாசகர்கள்.

ஹூண்டாயில் ஒரு நாள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹூண்டாய் தொழிற்சாலை அதிகாரிகள் பருந்துப் பார்வை என்று சொல்வதைப் போல, கார்களின் தயாரிப்பில் எத்தனை கட்டங்கள் இருக்கின்றன என்பதையும் அதன் தாத்பரியங்களையும் முதலில் விளக்க... வாசகர்கள் அதை படு ஆர்வமாகவும் அமைதியாகவும் கேட்டனர். முதலில் வந்து வாசகர்களுக்கு ஹாய் சொல்லி வரவேற்றார் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜே.ஸ்டீஃபன் சுதாகர்.

ஹூண்டாயில் ஒரு நாள்!

நடையிலேயே முழு தொழிற்சாலையையும் சுற்றிப் பார்க்கப் போகிறோம் என நினைத்தார்களோ என்னவோ, பேருந்தில் தொழிற்சாலைக்குள் செல்லப் போகிறோம் என்று தெரிய வந்ததும்தான், 'அப்ப இது எவ்வளவு பெரிய ஃபேக்டரியா இருக்கும்!’ என ஒரு சில வாசகர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

முதலில் வாசகர்கள் சென்றது பாடி ஷாப். காரின் கட்டமைப்பை உருவாக்கத் தேவைப்படும் பாடி

ஹூண்டாயில் ஒரு நாள்!

பேனல்கள், மற்றும் ரூஃப் ஆகியவை இங்கேதான் தனித்தனியாக ப்ரெஸ் (வெட்டி எடுக்கப்பட்டு) செய்யப்பட்டு, அசெம்பிளிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வந்திருந்த வாசகர்களில் சிலர் ஹூண்டாய் கார்களை வைத்திருந்ததால், 'என் காரும் இப்படித்தானே தன் வாழ்க்கையைத் துவங்கியிருக்கும்’ என ஆர்வத்துடன் பேசிக்கொண்டே வந்தார்கள். புதிதாக அறிமுகமான எக்ஸென்ட் காம்பேக்ட் செடான் எலும்புக்கூடாக நிற்க, நாம் தினமும் சாலையில் பார்க்கும் ஒரு காரை இந்தக் கோணத்தில் தரிசிக்கக் கிடைத்த முதல் வாய்ப்பு என்பதால், ஆர்வத்துடன் கவனித்தனர்.

ஒரு பக்கம் ரோபோக்கள் தங்கள் வேலையைச் செவ்வனே செய்துகொண்டே இருக்க, ஒவ்வொரு 72 விநாடிகளுக்கும் ஒரு கார் வெளிவருகிறது என்று ஹூண்டாய் அதிகாரி சொன்னதைக் கேட்டு, எல்லோருக்கும் ஆச்சரியம்.

அடுத்து அசெம்பிளி ஷாப், இங்கேதான் காரின் பாடி பேனல்கள், சேஸி, இன்ஜின் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. அதாவது, ஒரு காருக்கு முதலில் உயிர் கிடைப்பது இங்கேதான். ஹூண்டாயின் இந்தத் தொழிற்சாலையின் பிரத்யேக விஷயம், ஒரு லைனில் விதவிதமான கார்கள், வேரியன்ட்டுகள், ஏற்றுமதிக்கான மாடல்கள் என அனைத்தையும் அசெம்பிள் செய்ய முடிவது. நம் ஊர் எலீட் ஐ20 கார் அசெம்பிள் ஆன அடுத்த நிமிஷத்தில், அதே லைனில், ஏற்றுமதிக்கான ஐ10 அசெம்பிளாகிறது. இந்த விஷயம் குறித்து வாசகர்கள் ஹூண்டாய் அதிகாரியிடம் கேள்விகளால் துளைத்தெடுக்க, மிகப் பொறுமையாக ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் அளித்தார்கள்.

'ப்ரீ டெலிவரி இன்ஸ்பெக்ஷன்’ பகுதியில், ஒவ்வொரு காரையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு சோதிக்கிறார்கள். கியர் மற்றும் பிரேக்குகள் துவங்கி... ஹாரன், ஆடியோ சிஸ்டம், லைட்டுகள் என எல்லா விஷயத்தையும் சோதிக்கிறார்கள். ஒரு தொழிலாளர் காரின் பாடியில் ஸ்க்ராட்ச் ஏதும் இருக்கிறதா என்று தடவித் தடவி சோதிக்கிறார். ஒவ்வொரு காரின் பிறப்பையும் பார்த்துக்கொண்டே வந்த வாசகர்களுக்கு, சமீபத்தில் அறிமுகமான எலீட் ஐ20 ஒன்று ஃபேக்டரி ஃப்ரெஷ்ஷாக நிற்க, அதன் தயாரிப்பு முறை பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

அடுத்து, அவர்கள் அழைத்துச் சென்றது ஒரு குளத்துக்கு. கார் தொழிற்சாலையில் குளத்துக்கு என்ன வேலை என வாசகர்கள் பார்க்க, தொழிற்சாலைக்குள் எங்கு மழை பெய்தாலும், அந்த மழைநீர் இது போன்று இருக்கும் நான்கு குளங்களுக்குள் வந்து தேங்கிவிடும் என்று விளக்கினார்கள் ஹூண்டாய் அதிகாரிகள்.

ஹூண்டாயில் ஒரு நாள்!

மொத்தத்தில், தனித்தனியாக தமிழகத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்து வந்திருந்த நமது வாசகர்கள், அன்றைய நாள் முடிவில் போட்டியின் வெற்றியாளர்கள் என்று சொல்வதை விட, நண்பர்களாகவே மாறினார்கள். இறுதியில் ஒரு குரூப் போட்டோவுடனும், சில பல செல்ஃபிக்களுடனும் நிறைவடைந்தது ஃபேக்டரி விசிட்.