Published:Updated:

பைக்தான் ஹீரோ!

இதுதான் இரும்பு குதிரை! கா.பாலமுருகன்

பைக்தான் ஹீரோ!

இதுதான் இரும்பு குதிரை! கா.பாலமுருகன்

Published:Updated:
பைக்தான் ஹீரோ!

அதர்வா நடிக்கும் இரும்பு குதிரை, பைக்கர்களின் உலகம் பற்றிப் பேசுகிறது. பைக்கை மையமாக வைத்துப் படம் எடுக்க எப்படி ஐடியா வந்தது? - இயக்குநர் யுவராஜிடம் பேசினோம். ''முதலில், தமிழில் வெளிவரும் ஒரே ஆட்டோமொபைல் பத்திரிகையான மோட்டார் விகடனுக்கு நன்றி. ஏனென்றால், இந்தப் படத்தின் பல விஷயங்களுக்கு மோட்டார் விகடன் இதழ்கள் பெரிதும் பயன்பட்டன!'' என்று ஆரம்பித்தார் யுவராஜ்.

''இந்தப் படத்தின் கதையை ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பைக்தான் ஹீரோ!

உருவாக்கியிருக்கிறோம். இன்றைக்கு வாகனங்களால் பல வசதிகளை நாம் அனுபவித்தாலும், நிறைய இன்னல்களையும் சந்திக்கிறோம். சாலையில் பொறுப்பில்லாமல், விதிகளை மதிக்காமல் விளையாட்டுத்தனமான விபரீதங்களுக்கு, ஏராளமான உயிர்களை தினந்தோறும் பலி கொடுக்கிறோம். இது நச்சென்று உரைக்கும் வகையில், ஒரு பாடமாக இருக்க வேண்டும்; அதேசமயம், சினிமாவுக்கான விஷயங்களாகவும் இருக்க வேண்டும். அப்படி உருவாக்கியதுதான் இரும்பு குதிரை.

ஹீரோ அதர்வாவுக்கு பைக் ஓட்டத் தெரியுமே தவிர, சூப்பர் பைக்குகளைக் கையாண்டது இல்லை. இதற்காக அவருக்குப் பயிற்சி அளித்தோம். சூப்பர் பைக்கில் அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகம் வரை அதர்வா ஓட்டினார். அதற்கு மேலும் அந்த பைக்கை ஓட்ட முடியும். ஆனால், அதர்வா போதும் என்று சொல்லி விட்டார். இந்தப் படத்திலும் காதல் இருக்கிறது என்றாலும், பைக்குக்குத் தான் முக்கியமான பங்கு.

இரும்பு குதிரை நாயகன் அதர்வாவுக்கு, பைக் என்றால் உயிர். முதன்முதலாக பைக் வாங்கியபோது, உற்சாகத்தில் சாலையில் பறக்கிறான். பாதுகாப்பு, விதிமுறைகள், சிக்னல்கள் பற்றிக் கவலைப்படாத இளைஞனாக அவன் இருக்கிறான். ஒருமுறை அவனது தந்தையை பைக்கில் அழைத்துச் செல்லும்போது, வழக்கமாகச் செல்வதுபோல வேகமாகச் செல்கிறான். பின்னால் அமர்ந்திருக்கும் தந்தை, 'மெதுவாகப் போ, மெதுவாகப் போ’ என எச்சரித்தவாறு இருக்கிறார். ஆனால், அதைக் காதில் வாங்காமல் செல்லும் அதர்வா, விபத்தில் சிக்கிவிடுகிறான். அந்த விபத்தில் அவனது தந்தை உயிரிழக்கிறார். தன்னால்தான் தன் தந்தை இறந்தார் என்ற குற்ற உணர்வு, அந்த இளைஞனை முடக்கி மூலையில் போடுகிறது. மனரீதியாகப் பாதிக்கப்பட்டவனாகிறான். பைக்கைத் தொடுவதே இல்லை. தனக்குள் புழுங்கியவாறு தனியனாகிறான்.

பைக்தான் ஹீரோ!

அதர்வாவின் அம்மா, மகனின் பிரச்னையைப் புரிந்துகொள்கிறார். பைக்கால் உருவான குற்ற உணர்வை, பைக்கில்தான் தீர்க்க முடியும் என்று நம்புகிறார். பீட்ஸா டெலிவரி பாய் வேலைக்கு மகனை அனுப்புகிறார். ஹெல்மெட் அணிந்து, சிக்னல்களில் நின்று, சாலை விதிமுறைகளைப் பின்பற்றி பைக் ஓட்டுகிறான். இதனால், பீட்ஸாவை குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிவரி செய்ய முடியாமல், ஃப்ரீ டெலிவரி கொடுக்க வேண்டியது வழக்கமாகிறது. இதனால், மேனேஜரிடம் திட்டு வாங்குவதும் வாடிக்கையாகிவிடுகிறது.

இந்தச் சமயத்தில், அதர்வாவுக்கு ஒரு பெண்ணைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு, அது நட்பாக மலர்கிறது. அந்தப் பெண்ணுக்கு பைக் என்றால் கொள்ளை இஷ்டம். அதர்வாவுக்கோ, பைக் என்றாலே அலர்ஜி. ஆனால், அந்தப் பெண்ணின் அருகாமை மிகவும் பிடிக்கிறது. அதனால், பைக் வாங்குவது என்று தீர்மானிக்கிறான். தேடி அலைந்து, ஒரு பழைய டுகாட்டி டயாவெல் பைக்கை வாங்குகிறான்.

அப்போது ஒரு மோட்டோகிராஸ் பைக் ரேஸ் வீரன், தனது பைக்கைக் காணாமல் தேடிக்கொண்டிருக்கிறான். அந்த பைக்கை அதர்வா வைத்திருக்க... ஒரு கட்டத்தில் அதர்வாதான் தன்னுடைய பைக்கைத் திருடிவிட்டதாக நினைக்கிறான் வில்லன். இதையொட்டி ஹீரோ, காதலி, வில்லன் மூவருக்கும் இடையே நடக்கும் பிரச்னைகள்தான் படம்.  இறுதியில், ஹீரோவுக்கும் வில்லனுக்கும் மோட்டோகிராஸ் ரேஸ் நடக்கிறது. மோட்டோகிராஸ் ரேஸே தொழிலாக இருப்பவனும், பைக் என்றாலே பதறி நடுங்குபவனுக்கும் இடையே நடக்கும் போட்டிதான் கிளைமேக்ஸ். பிரியா ஆனந்த், ராய் லட்சுமி, வில்லனாக ஜானியும், அவருக்கு ஜோடியாக ரேஸ் வீரர் அலிஷாவும் நடித்துள்ளனர்!'' என்று முடித்தார் யுவராஜ்.

ஆக, இரும்பு குதிரை ஹீரோ, டுகாட்டி டயாவெல் பைக்தான். அதர்வா இல்லை போலிருக்கிறதே!