Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

விரைவில் புதிய மஹிந்திரா ஸைலோ!

மோட்டார் நியூஸ்

மஹிந்திரா ஸைலோவின் விற்பனை படிப்படையாகக் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த நிதியாண்டில் 44.3 சதவிகிதம் ஸைலோவின் விற்பனை குறைந்துள்ளது. எனவே, புதுப் பொலிவுடன் ஸைலோ விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. காரின் வெளிப்புறத்தில் ஸ்டைலான கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களும், காரின் பின்பக்கம் க்ரோம் பூச்சுகளும், காரின் உள்ளே டூயல் டோன் கறுப்பு மற்றும் பீஜ் வண்ண டேஷ்போர்டும், புதிய இருக்கைகளும், புதிய டிஸைனில் டயல்களும் இடம்பெற இருக்கின்றன. மூன்றாவது வரிசை இருக்கைகள், 60:40 அமைப்பில் மடிக்கும்படி அமைக்கப்பட இருக்கிறது. இன்ஜினில் கை வைக்கவில்லை என்றாலும், சஸ்பென்ஷனை மேம்படுத்த இருக்கிறது மஹிந்திரா. தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது புதிய ஸைலோ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹோண்டா சிட்டி  தயாரிப்பு நிறுத்தம்?

மோட்டார் நியூஸ்

மொபிலியோவை அறிமுகப்படுத்திய ஒரு வாரத்துக்குள் 10,000 புக்கிங்குகள் குவிந்து விட்டதால், சிட்டியின் தயாரிப்பை ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் இருந்து நிறுத்தி வைத்திருக்கிறது ஹோண்டா. டெல்லி அருகேயுள்ள நொய்டா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த சிட்டி, இனி ராஜஸ்தானில் உள்ள ஹோண்டாவின் புதிய தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். புதிய சிட்டியின் தயாரிப்பு மீண்டும் செப்டம்பர் இறுதியில்தான் துவங்கும் எனத் தெரிகிறது. இதனால், ஹோண்டா சிட்டி பெட்ரோல், டீசல் என எந்த காரை புக் செய்தாலும், டெலிவரி கிடைக்க நான்கு மாதங்களுக்கு மேல் ஆகலாம்.

ஜெஸ்ட்டுக்கு வெயிட்டிங் பீரியட்!

டாடா ஜெஸ்ட் செடானின் XMA வேரியன்ட்தான், இந்தியாவிலேயே விலை குறைந்த டீசல் ஆட்டோமேட்டிக் கார். அறிமுகமான நாளில் இருந்தே இந்த காருக்கு நல்ல வரவேற்பு. இந்த நிலையில், இந்த ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் டீசல் மாடலை, ஷோரூம்களில் காட்சிக்கு வைக்கவே இன்னும் இரண்டு மாதங்கள் ஆகுமாம். வெயிட்டிங் பீரியடும் இப்போது 3 முதல் 4 மாதங்கள் என்கிறார்கள்.

மோட்டார் நியூஸ்

இந்த வெயிட்டிங் பீரியடுக்குக் காரணம், 'ஏஎம்டி’ கியர்பாக்ஸின் சப்ளை குறைவாக இருப்பதுதான்.  இந்த கியர்பாக்ஸை 'மேக்னடி மரேலி’ நிறுவனம் மாருதியுடன் இணைந்து தயாரிக்கிறது. செலெரியோ காருக்கும் இந்த நிறுவனம்தான் 'ஏஎம்டி’ கியர்பாக்ஸ் சப்ளை செய்கிறது. செலரியோவின் வெயிட்டிங் பீரியட் இப்போது 6 முதல் 7 மாதங்கள். எனவே, மாருதிக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், ஜெஸ்ட் ஆட்டோமேட்டிக் மாடலின் வெயிட்டிங் பீரியட் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி, வழக்கமான டிரான்ஸ்மிஷன் கொண்ட ஜெஸ்ட் மாடல்களுக்கு, 45 முதல் 60 நாட்கள் வெயிட்டிங் பீரியட்.

மொபிலியோவில் மேலும் இரண்டு வேரியன்ட்டுகள்!

மோட்டார் நியூஸ்

ஹோண்டா மொபிலியோ காரில் இரண்டு புதிய வேரியன்ட்டுகளைச் சேர்த்துள்ளது ஹோண்டா. இந்த வேரியன்ட்டுகளில் AVN (ஆடியோ, வீடியோ, நேவிகேஷன்) மற்றும் ரிவர்ஸ் கேமரா வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

V(O) Petrol  –

மோட்டார் நியூஸ்

9.46 லட்சம், V(O) Diesel 

மோட்டார் நியூஸ்

10.45 லட்சம்,

RS(O) Diesel   

மோட்டார் நியூஸ்

11.55 லட்சம்

[எக்ஸ் ஷோரூம், டெல்லி]

அர்ஜூன் நோவா!

மோட்டார் நியூஸ்

டிராக்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா, சமீபத்தில் 'அர்ஜூன் நோவா’ என்ற பெயரில் டிராக்டரை அறிமுகப்படுத்தியது. சென்னை அருகே உள்ள மஹிந்திரா சிட்டியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் உருவானது இந்த டிராக்டர். புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த டிராக்டர்57 HP 605 DI-i மற்றும் HP 605 DI-PS என இரண்டு வேரியன்ட்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான பல்வேறு தொழிநுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த டிராக்டர்களில் ஏ.சி கேபின் போன்ற ஆப்ஷனல் வசதிகளும் உள்ளன. மஹிந்திரா நிறுவனத்தின் வேளாண்மை உபகரணங்கள் செயல் இயக்குநர் ராஜேஷ் ஜெஜுரிக்கர் பேசியபோது, ''விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் எழுச்சியைப் பெறும்வகையில், அர்ஜூன் நோவா வடிமைக்கப்பட்டுள்ளது. 2,200 கிலோ பளு தூக்கும் திறன், அட்வான்ஸ் சின்க்ரோமெஸ் 18 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், 400 மணி நேர சர்வீஸ் இடைவேளை, எரிபொருள் சிக்கனம் ஆகிய அம்சங்களுடன் வந்துள்ள அர்ஜூன் நோவா டிரென்ட் செட்டராக அமையும்'' என்றார். அர்ஜூன் நோவா டிராக்டரின் விலை 7.35 லட்சம் (எக்ஸ் ஷோரூம்).

டர்போ சார்ஜ்!

மோட்டார் நியூஸ்

சென்னை அருகே உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை, ஆண்டுதோறும் 'டர்போ’ என்ற பெயரில் சிம்போஸியம் நடத்திவருகிறது. ஆட்டோமொபைல் பிரிவு மாணவர்கள் ஒருங்கிணைத்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை, இந்த ஆண்டு சென்னை ஐஐடி பேராசிரியர் வி.கணேசன் துவக்கிவைத்தார். சுமார் 700-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த சிம்போஸியத்தில், மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆட்டோமொபைல் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆட்டோமொபைல் உதிரிபாகங்களில் தயாரித்த ரோபா மாதிரிகள் அனைவரையும் கவர்ந்தன. ஆட்டோ க்விஸ், ஆர்.சி.கார் ரேஸ், பைக்கை விரைவாகப் பிரித்து மீண்டும் சேர்ப்பது போன்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இனி மூன்றாண்டுக்கு இன்ஷூரன்ஸ்!

ஆட்டோமொபைல் வாகனங்களைப் பொறுத்தவரை, மூன்றாம் நபர் காப்பீடு என்கிற தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் கட்டாயமானது. இது இல்லாமல் எந்த வாகனமும் சாலையில் ஓடக் கூடாது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமில்லாமல் இருக்கிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள்தான் பெரும்பான்மையாக இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்த பாலிஸிக்கு பிரீமியம் தொகையும் குறைவுதான். ஆனால், விபத்து என்று வரும்போது, கையிலிருந்து பெரும் தொகையைக் கொடுக்க வேண்டும்.

மோட்டார் நியூஸ்

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாக, இரு சக்கர வாகனங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தேர்டு பார்ட்டி பாலிஸியை, 'காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்’ (ஐஆர்டிஏ) அனுமதித்துள்ளது. அதனால், விரைவில் ஒருங்கிணைந்த இன்ஷூரன்ஸ் பாலிஸியை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் கொண்டுவரப்படும் சூழல் இருக்கிறது. 

மோட்டார் நியூஸ்

'இந்தப் புதியமுறை வாகன ஓட்டிகளுக்கு லாபமாக இருக்குமா?’ என, யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முதுநிலை மேலாளர் வி.சுப்பிரமணியனிடம் கேட்டோம்.

'மூன்றாண்டுகளுக்குச் சேர்த்து பாலிஸி எடுக்கும்போது, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு நிர்வாகச் செலவு குறையும். அதனால், நிச்சயம் தள்ளுபடி கிடைக்கும். வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு சாலை வரி விதிப்பதுபோல, தேர்டு பார்ட்டி பாலிஸியையும் வாகனம் வாங்கும்போதே 15 ஆண்டுகளுக்கு பிரீமியம் வசூலித்தால், இன்னும் தொகை கணிசமாக குறையும்'' என்கிறார்.

- சி.சரவணன்

ஒரு லட்சம் கார்கள் விற்பனை!

கடந்த ஆகஸ்ட் மாதம் கார்களின் விற்பனையில் மிக முக்கியமான மாதம். பல கார்கள் 1 லட்சம் என்கிற மைல்கல்லைத் தொட்ட மாதம் ஆகஸ்ட் 2014.  ஒரு லட்சம் கிராண்ட் ஐ10 கார்களை வெறும் 10 மாதங்களுக்குள் விற்பனை செய்து சாதனை படைத்தது ஹூண்டாய். இந்தியாவில் மிக வேகமாக 1 லட்சம் கார்கள் விற்பனையானது கிராண்ட் ஐ10தான். 2013-ம் ஆண்டு மே மாதம் அறிமுகமான ஹோண்டா அமேஸ் காரின் விற்பனை 1 லட்சத்தை இந்த ஆகஸ்டு மாதத்தில் கடந்தது. மேலும், ஹோண்டாவின் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களின் விற்பனையும் ஒரு லட்சத்தைத் தாண்டியது. மாருதியின் 'கே-சீரிஸ்’ இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களின் மொத்த விற்பனை 25 லட்சத்தைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.  

ஃபோர்டு எக்கோஸ்போர்ட் 13 மாதங்கள் கழித்து 1 லட்சம் கார்கள் எண்ணிக்கையை கடந்தது. ரெனோ டஸ்ட்டர், 23 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் 1 லட்சம் யூனிட்டுகளைக் கடந்தது. 2011-ல் அறிமுகமான மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் விற்பனை, 24 மாதங்களுக்குப் பிறகு 1 லட்சம் கார்களைத் தாண்டியுள்ளது.

ஜூலை மாத டாப்10 கார்கள்!

மோட்டார் நியூஸ்

டூவீலர் விற்பனை!

மோட்டார் நியூஸ்

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியா முழுக்க 5,29,862 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது ஹீரோ மோட்டோ கார்ப். இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹோண்டா, 3,63,977 இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. மெதுவாக விற்பனையில் முன்னேறும் டிவிஎஸ், 1,64,571 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதனால், 1,25,033 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்துள்ள பஜாஜை வீழ்த்தி, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது டிவிஎஸ். யமஹா நிறுவனம் ஜூலை மாதத்தில் 50,286 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.  ஆண்டுதோறும் விற்பனையில் உயர்ந்துகொண்டே வரும் ராயல் என்ஃபீல்டின் விற்பனை, ஜூலை மாதத்தில் 26,796 பைக்குகளாக இருக்கிறது. மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனம் 12,330 பைக், ஸ்கூட்டர்களை விற்பனை செய்து கடைசி இடத்தில் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism