Published:Updated:

வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

Published:Updated:

ஒரு காரை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்தைவிட, அந்த கார் தங்களின் பணிமனைக்கு சர்வீஸுக்கு வரும்போதுதான் கார் நிறுவனங்களும் அவர்களின் முகவர்களும் லாபம் பார்க்கிறார்கள். அதனால்தான் மாருதி துவங்கி, டாடா, மஹிந்திரா, ஃபோர்டு, ஹூண்டாய் என எந்த கார் நிறுவனமாக இருந்தாலும், 'கார் உதிரிபாகங்களை தங்களுக்குத்தான் விற்பனை செய்ய வேண்டும். தனியார் நடத்தும் பணிமனைகளுக்கோ அல்லது மெக்கானிக்குகளுக்கோ அவை கிடைக்கும் விதத்தில் வெளி மார்க்கெட்டில் நேரடியாக விற்பனை செய்யக் கூடாது’ என்று உதிரிபாக உற்பத்தியாளர்களை கார் நிறுவனங்கள் நிர்பந்தித்து வருகின்றன.

'வெளியில் இருக்கும் பணிமனைகளில் காரை சர்வீஸுக்குவிட்டால்... அவர்கள் போலியான, தரமற்ற உதிரிபாகங்களை உங்கள் காரில் பொருத்திவிடுவார்கள். இது உங்கள் காருக்கு மட்டுமல்ல, உங்கள் பாதுகாப்புக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது’ என்று சொல்லி, மறுபுறம் தங்கள் வாடிக்கையாளர்களை எச்சரிப்பதையும் கார் நிறுவனங்கள் வழக்கமாகக்கொண்டிருக்கின்றன.

'வெளி மார்க்கெட்டில் கிடைப்பதைப்போலவே, நியாயமான விலைக்கு கார் உதிரிபாகங்கள் கம்பெனி சர்வீஸ் சென்டர்களில் கிடைத்தால், நாங்கள் ஏன் தனியார் சர்வீஸ் சென்டருக்குப் போகிறோம்?’ என்ற கார் வாடிக்கையாளர்களின் குரலை, கார் நிறுவனங்கள் பொருட்படுத்துவதே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், 'தங்களிடம் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் சர்வீஸ் சென்டரில் மட்டும்தான் சர்வீஸுக்குவிட வேண்டும் என்கிற நிர்பந்தத்தை உருவாக்கும்விதமாக கார் நிறுவனங்கள் நடந்துகொள்வது நேர்மையான வியாபாரம் இல்லை’ என்று சொல்லி, இப்படி நேர்மையற்று நடந்துகொண்டதற்கு அபராதமாக, 14 கார் நிறுவனங்களுக்கு சுமார் 2,500 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது, காம்பெடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா!

எதிர்பார்த்தபடியே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கின்றன கார் நிறுவனங்கள். செய்யட்டும்; அது இந்த நாடு அவர்களுக்கும் வழங்கியிருக்கும் ஜனநாயக உரிமை. அதே சமயம், அவர்கள் இன்னொரு விஷயத்தையும் நினைவில்கொள்ள வேண்டும். தங்கள் காரை கம்பெனியின் சர்வீஸ் சென்டரில் விட வேண்டுமா அல்லது தனியார் சர்வீஸ் சென்டரில்விட வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும், இதே ஜனநாயகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது.

கார் நிறுவனங்கள் நீதிக்கும், ஜனநாயகத்துக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தலைவணங்கித்தான் ஆக வேண்டும்!

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்