Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

கியர் குறைந்த ஹூண்டாய் ஐ20!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஆண்டு ஹூண்டாய், ஐ20 டீசல் காரை விற்பனைக்குக் கொண்டு வந்தபோது, அதில் கூடுதலாக ஆறாவது கியரை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் ஆறாவது கியர் தேவையற்றது என்பதோடு, தயாரிப்புச் செலவும் அதிகமாக இருப்பதால், இப்போது ஆறாவது கியரைத் தூக்கிவிட்டது ஹூண்டாய். ஐ20 இப்போது 5-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸுடன் விற்பனை செய்யப்படுகிறது!

சொகுசு கார்களின் விற்பனை குறைந்தது!

மோட்டார் நியூஸ்

உயர்ந்து கொண்டே வந்த சொகுசு கார்களின் விற்பனை, கடந்த ஜூலை மாதம் 16 சதவிகிதம் குறைய... அதிர்ந்து போய் இருக்கின்றன பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள். அதுவும் சொகுசு கார்களில் ஆரம்ப மாடல்களான பென்ஸ் சி-கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி ஏ4 கார்களின் விற்பனைதான் அதிகமாக இருக்கிறதே தவிர, விலை உயர்ந்த மாடல்களின் விற்பனை நாளுக்கு நாள் இறங்கிக்கொண்டே போகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் விற்பனை, கடந்த ஜூலை மாதம் 17 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதேபோல் பிஎம்டபிள்யூ, ஆடி கார்களின் விற்பனையும் குறைந்திருக்கிறது!

இந்தியன் ரேஸிங் லீக்!

மோட்டார் நியூஸ்

கலர் கிளாமர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகளின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவில்

 ##~##
ஆரம்பமாக இருக்கிறது இந்தியன் ரேஸிங் லீக். ஐபிஎல் பாணியிலேயே இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகளும் நடைபெற இருக்கிறது. மொத்தம் இதில் 9 அணிகள் கலந்துகொள்ள இருக்கின்றன. ஒன்பது அணிகளிலும் ஒரு வெளிநாட்டு ரேஸர் மற்றும் ஒரு உள்நாட்டு ரேஸ் வீரர் என இரண்டு ரேஸர்கள் என மொத்தம் 18 ரேஸ் வீரர்கள் போட்டி போடுவார்கள். சென்னை, டெல்லி மட்டும் அல்லாமல் துபாய், அபுதாபி, கத்தார், மலேசியா, பேங்காக் ஆகிய இடங்களிலும் ரேஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆனால், ஐபிஎல் போல் ரேஸ் வீரர்கள் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன் மேக் ரேஸ் போட்டியாக நடைபெற உள்ளது இந்தியன் ரேஸிங் லீக். 230240 bhp சக்திகொண்ட, V8 இன்ஜின் கொண்ட காரில்தான் இந்த ரேஸ் போட்டி நடைபெறும் எனத் தெரிகிறது. நரேன் கார்த்திகேயன், கரூண் சந்தோக், அர்மான் இப்ராஹிம், ஆதித்யா பட்டேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த இந்தியன் ரேஸிங் லீக் போட்டிக்கு, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்தான் பிராண்ட் அம்பாசிடர்!

-  ஆர்.கே.சஞ்சீவ் குமார்

கார் தயாரிக்கும் முடிவை கைவிட்டது அசோக் லேலாண்ட்!

மோட்டார் நியூஸ்

கமர்ஷியல் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான அசோக் லேலாண்ட் நிறுவனம், நிஸானுடன் இணைந்து சின்ன கார் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக அறிவித்திருந்தது. ''முதன்முறையாக லைட் கமர்ஷியல் வாகனத் தயாரிப்பில் 'தோஸ்த்’ எனும் வாகனம் மூலம் இறங்கியிருக்கும் அசோக் லேலாண்ட், ''கடும் போட்டி நிறைந்த சின்ன கார் தயாரிப்பில் இறங்குவது நல்ல முடிவாக இருக்காது'' என்று கூறியிருக்கிறார் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்!

விபத்தில் சிக்கிய மிஸ்டர் பீன்!

மோட்டார் நியூஸ்

'மிஸ்டர் பீன்’ நகைச்சுவைத் தொடர் நாயகன் ரோவன் அட்கின்ஸன், கடந்த மாதம் பயங்கர விபத்தில் சிக்கி உயிர் பிழைத்திருக்கிறார். ஷூட்டிங் முடித்து விட்டு இரவு வீடு திரும்பிய ரோவன் அட்கின்ஸனின் மெக்லாரன் எஃப்-1 கார், கன்ட்ரோலை இழந்து மரத்தின் மீது மோதியதில் கார் முழுவதுமாகத் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது. விபத்தில் சிக்கி கார் தீப்பிடித்தாலும், பெரிய அடி எதுவும் இல்லாமல் தப்பித்திருக்கிறார் அட்கின்ஸன். 14 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பில் இருந்த இந்த மெக்லாரன் எஃப்-1 காரை, 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் அட்கின்ஸன். 60,000 கி.மீ வரை ஓடியிருக்கும் இந்த காரை சென்டிமென்ட் காரணமாக அப்படியே பயன்படுத்தி வருகிறார். விபத்தான பிறகும் ராசியில்லாத கார் என விட்டுவிடாமல், மீண்டும் காரை பழையபடியே புதுப்பிக்கச் சொல்லியிருக்கிறார்!

வரப் போகும் புதிய அம்பாஸடர்!

இந்தியாவின் அதிகாரப்பூர்வ காரான அம்பாஸடர், அடுத்த ஆண்டு முதல் புத்தம் புது காராக புதிய தோற்றத்துடன் வெளிவர இருக்கிறது. புதிய அம்பாஸடர் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் முழுவதுமாக ட்யூன் செய்யப்பட்டு, புதிய இன்ஜினாகவே வெளிவருகிறது. பவர் ஸ்டீயரிங், ஏ.ஸி-யைத் தவிர எந்த சிறப்பம்சங்களும் இல்லாமல் இருக்கும் அம்பாஸடரில் பவர் விண்டோஸ், மியூஸிக் சிஸ்டம், சீட் அட்ஜஸ்ட், ஸ்டீயரிங் அட்ஜஸ்ட் என ஏராளமான சிறப்பம்சங்களுடன், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது!

குஜராத்தை குறி வைக்கும் கார் நிறுவனங்கள்!

மோட்டார் நியூஸ்

டாடா நிறுவனம் நானோ கார் தயாரிப்புத் தொழிற்சாலையை குஜராத்தில் துவங்க... இப்போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் குஜராத்தில் தொழிற்சாலை துவங்க ஆர்வமாக இருக்கின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக ஃபோர்டு நிறுவனம் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் குஜராத்தில் புதிய தொழிற்சாலை துவக்க இருக்கிறது. 460 ஏக்கர் பரப்பளவில் குஜராத்தின் சனந்த் நகரில் அமைய இருக்கும் இந்தத் தொழிற்சாலையில், ஆண்டுக்கு 2,40,000 கார்களையும், 2,70,000 இன்ஜின்களையும் தயாரிக்க இருக்கிறது ஃபோர்டு. இதற்கிடையே சென்னையில் புதிய தொழிற்சாலை துவக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸ¨கி நிறுவனமும் குஜராத்தில் புதிய தொழிற்சாலை துவக்க இருப்பதாகத் தெரிகிறது!

இந்தியாவுக்குள் வரும் அப்!

மோட்டார் நியூஸ்

போலோவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறது ஃபோக்ஸ்வாகனின் சின்ன காரான 'அப்!’ போலோவைவிட விலை குறைவாக 2013-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர இருக்கும் 'அப்,’ இந்தியாவில் நான்கு கதவுகள் கொண்ட காராக இருக்கும். கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய ஃபோக்ஸ்வாகன் அப் கார் இந்தியாவில் 1 அல்லது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் அப் காரை 3-4 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டு இருக்கிறது!

ஆரியாவின் 2 வீல் டிரைவ்!

மோட்டார் நியூஸ்

பிரீமியம் வகை கார் வரிசையில் டாடா ஏற்கெனவே அறிமுகம் செய்த ஆரியாவில் 4x4 மாடல் மட்டுமே இருந்தது. தற்போது புதிதாக அதில் 4x2 மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது டாடா. ஒரு செடான் காருக்கான ஸ்டைலிஷ் தோற்றம், எஸ்யூவி காருக்கான பயன்பாடு, எம்யூவியின் பன்முகத் தன்மை என அத்தனையும் கலந்த காராக இருக்கிறது ஆரியா. பிரீமியம் லெதர் கொண்டு செய்யப்பட்ட சீட் அப்போல்ட்ரி, பட்டர்ஃபிளை வைப்பர்கள், தியேட்டர் மாதிரியான உட்புற இன்டீரியர்ஸ் என தோற்றத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட்டுள்ளது ஆரியா!

ஹார்லி டேவிட்சனில் ஒரு நாள்!

மோட்டார் நியூஸ்

சென்னை அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த ஆட்டோமொபைல் சிம்போஸியத்தை, ஆட்டோமொபைல் படிக்கும் மாணவர்கள் ஒன்று திரண்டு திருவிழா போல அமர்க்களப்படுத்திவிட்டனர். வின்டேஜ் கார்கள் முதல் கடந்த மாதம் அறிமுகமான வெளிநாட்டு கார், பைக் வரை அனைத்து வாகனங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவர்ச்சி காட்டின. மாணவர்களின் புதிய புதிய கண்டுபிடிப்புகள், ரேடியோ கன்ட்ரோல் கார் ரேஸ், ஆட்டோமொபைல் க்விஸ்  என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரியின்  இந்த ஆட்டோமொபைல் திருவிழாவில் கலந்துகொண்ட ஆர்த்தி என்ற மாணவி, ஹார்லி டேவிட்சன் பைக் மீது உட்கார்ந்தபடியே, ''என்னோட ரொம்ப நாள் ஆசை இப்பதான் நிறைவேறி இருக்கு. எனக்கு பைக்குன்னா ரொம்பப் பிடிக்கும். ஹார்லி டேவிட்சன் பைக்கில் உட்கார வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. என் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே அந்த கனவு நிறைவேறிவிட்டது’ என்று ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்துடன் சொன்னார்!

-  நா.சிபி சக்கரவர்த்தி

படம்: ஜெ.தான்யராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism