Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

என்னுடைய பட்ஜெட் 4-5 லட்சம். எனக்கு மைலேஜ் அதிகம் தரக் கூடிய சின்ன கார்தான் வேண்டும்.காரில் சிறப்பம்சங்கள் அதிகம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்ன கார் வாங்கலாம்?

 அருணாச்சலம், திருச்சி.

செவர்லே பீட் டீசல் உங்களுக்கு நல்ல சாய்ஸாக இருக்கும். இந்தியாவிலேயே அதிகம் மைலேஜ் தரக்கூடிய சின்ன பட்ஜெட் கார் இதுதான். தவிர, டீசல் இன்ஜின் என்பதால், எரிபொருள் செலவும் குறைவாகவே இருக்கும்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

முதல் கார் வாங்கப் போகிறேன். என்னுடைய சாய்ஸ் ஹூண்டாய் சான்ட்ரோ அல்லது செவர்லே ஸ்பார்க்! எனக்கு மைலேஜ் அதிகமாகவும், பராமரிப்புச் செலவுகள் குறைவாகவும் இருக்க வேண்டும். எந்த கார் வாங்கலாம்?

கருணாகரன், செய்யாறு.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஹுண்டாய் சான்ட்ரோ, செவர்லே ஸ்பார்க் இரண்டுமே விலை குறைவான, தரமான  

 ##~##
;கார்கள். ஸ்பார்க்கில் மூன்று ஆண்டுகள் இலவச வாரன்டி திட்டம் இருப்பது கூடுதல் பலம். மைலேஜைப் பொறுத்தவரை இரண்டு கார்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தோற்றத்தில் சான்ட்ரோவைவிட பார்க்க ஸ்டைலாக இருக்கிறது ஸ்பார்க். ஆனால் இட வசதி, மற்றும் ஓட்டுதல் தரத்தில் ஸ்பார்க்கை ஓரங்கட்டி விடுகிறது சான்ட்ரோ! ஸ்பார்க்கைவிட பழைய கார் சந்தையில் அதிக டிமாண்ட் உள்ள கார் சான்ட்ரோ என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் ஹோண்டா சிட்டி கார் வைத்திருக்கிறேன். ஓனர்ஸ் மேனுவலில் ஆறு மாதம் அல்லது 10,000 கி.மீ.க்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும் என்று எழுதியிருக்கிறது. நான் அதிக தூரம் பயணம் செய்யமாட்டேன். ஆனால், எனக்கு ஆறு மாதத்துக்கு காரை சர்வீஸ் செய்யாமல் வைத்திருப்பது கார் கெட்டுப் போய்விடுமோ என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது. என் சந்தேகம் சரியானதுதானா?

முத்து சரவணன், சேலம்.

இன்ஜினில் இருந்து ஏடாகூடமாகச் சத்தம் வருகிறது, கியர் பாக்ஸ் பிரச்னை தருகிறது, கிளட்ச், பிரேக்குகளில் இருந்து கடமுடா சத்தம் கேட்கிறது, ஏ.ஸி ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பது போன்ற முக்கிய, பெரிய பிரச்னைகள் எதுவும் இருந்தால், நீங்கள் முன்கூட்டியே சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்வது சரிதான்! மற்றபடி நீங்கள் ஓனர்ஸ் மேனுவலில் குறிப்பிட்டுள்ளபடி சரியான கிலோ மீட்டர் அல்லது கால இடைவெளிகளில் சர்வீஸ் செய்தாலே போதுமானது. கார் கெட்டுப் போய்விடும் என்றெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. முன்கூட்டியே சர்வீஸ் செய்வதால் பணம்தான் விரயமாகும்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் கடந்த மூன்று ஆண்டுகளாக மாருதி ஸ்விஃப்ட் டீசல் காரைப் பயன்படுத்தி வருகிறேன். இப்போது மிட் சைஸ்  கார் வாங்க வேண்டும் என்பது திட்டம். ஸ்விஃப்ட் வைத்திருப்பதால், இந்த காரை மாருதியிடமே கொடுத்துவிட்டு மாருதி எஸ்எக்ஸ்-4 கார் வாங்கலாமென முடிவெடுத்திருக்கிறேன். பராமரிப்புச் செலவு குறைவாக இருக்கும் என்பதால்தான் இந்த முடிவு. என் முடிவு சரிதானா?

ஹரிகுமார், கோவை.

மாருதி ஸ்விஃப்ட்டில் இருக்கும் அதே 1.3 மல்ட்டி ஜெட் இன்ஜின்தான் மாருதி எஸ்எக்ஸ்-4 காரிலும் இருக்கிறது. ஆனால், அதிக பவருக்காக இதில் வேரியபிள் ஜியோமெட்ரி டர்போ சார்ஜர் இருக்கிறது. மற்றபடி எந்த வித்தியாசமும் இல்லை. அதிக இடவசதி கொண்ட, பராமரிப்புச் செலவு குறைவானதுதான் எஸ்எக்ஸ்-4 என்றாலும், மிட் சைஸ் கார்களுக்கான பர்ஃபாமென்ஸும், ஸ்டைலும் எஸ்எக்ஸ்-4 காரில் இல்லை. ஹூண்டாய் வெர்னா டீசல் அல்லது ஃபோர்டு ஃபியஸ்டா டீசல் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். இரண்டு கார்களின் பர்ஃபாமென்ஸும் சிறப்பாக இருப்பதோடு, மைலேஜும் அதிகம். இரண்டு கார்களில் உங்களுக்கான காரை டிக் செய்யுங்கள்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 கிளாஸிக் பைக் வாங்கலாமென முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், இதன் விலை 1.5 லட்ச ரூபாய் என்பதால், இதைவிட கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் அதிகமான ஹோண்டா சிபிஆர் 250-ஆர் வாங்கலாமா என யோசிக்கிறேன். எந்த பைக் எனக்குச் சரியாக இருக்கும்?

சங்கரேஸ்வரன், விழுப்புரம்.

நீங்கள் சொல்லும் இரண்டு பைக்குகளுமே இரு வேறுவிதமான வாடிக்கையாளர்களை மனதில் வைத்து தயாரிக்கப்படும் பைக்குகள். புல்லட் கிளாஸிக் ஒரு டூரர் பைக். ஹோண்டா சிபிஆர் ஸ்போர்ட்ஸ் பைக். இரண்டின் விலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால், இரண்டு பைக்குகளையும் ஒன்றாக வைத்து ஒப்பிட முடியாது. ஆனால், இரண்டு பைக்குகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு பைக்குகளில் நீங்கள் எந்த பைக்கை வாங்க வேண்டும் என்றாலும், குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது காத்திருக்க வேண்டும். ஸ்போர்ட்டியான, அதிக மைலேஜ் தரக் கூடிய சிறந்த பில்டு குவாலிட்டி கொண்ட பைக்கை வாங்க வேண்டும் என்றால், ஹோண்டா சிபிஆர் 250-ஆர் பைக்கைத் தேர்ந்தெடுங்கள். நீண்ட தூரம் பயணம் செய்ய டூரிங் பைக் வேண்டும் என்றால், புல்லட் கிளாஸிக் பைக்கைத் தேர்ந்தெடுங்கள்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் ஃபோர்டு ஃபியஸ்டா பெட்ரோல் கார் வைத்திருக்கிறேன். இதில் எல்பிஜி கிட் பொருத்தலாமா?

ஜான் பீட்டர், மதுரை-2.

தாராளமாக உங்கள் ஃபியஸ்டா பெட்ரோல் காரில் எல்பிஜி கிட்டைப் பொருத்தலாம். எல்பிஜி அதிக மைலேஜ் தரும். ஆனால், காரின் பர்ஃபாமென்ஸ் பெட்ரோலில் இயங்குவதைவிட, எல்பிஜியில் இயங்கும்போது குறைவாகத்தான் இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் கார் வாரன்டி சலுகைகளில் இருந்தால், எல்பிஜி கிட் பொருத்துவதால் அது பாதிக்கப்படுமா என்பதையும் டீலரிடம் செக் செய்துவிட்டு முடிவெடுங்கள்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஹாய்சங் ஜிடி 650-ஆர் பைக்கை வாங்கலாமா... அல்லது நின்ஜா 650-ஆர் பைக்கை வாங்கலாமா?

விக்னேஷ்வரன், சென்னை-36.

ஹாய்சங் ஜிடி 650-ஆர், ஸ்போர்ட்ஸ் பைக். நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் மற்றும் டூரிங் பைக். இரண்டு பைக்குகளில் சிறப்பான பில்டு குவாலிட்டி, பர்ஃபாமென்ஸ், சர்வீஸ் நெட்வொர்க் கொண்ட பைக் நின்ஜா 650-ஆர் தான். ஹாய்சங் ஜிடி 650-ஆர் பைக்கின் வேகம் சிறப்பாக இருந்தாலும், இதன் பில்டு குவாலிட்டி ரொம்ப சுமார். அதிர்வுகளும் அதிகம். மேலும், ஹாய்சங்கின் நம்பகத்தன்மையும் சந்தேகமே! சர்வீஸ் நெட்வொர்க்கும் குறைவு!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் 125 சிசி பைக் வாங்கலாமென இருக்கிறேன். எனக்கு ஸ்டைல் அதிகம் இல்லாத மைலேஜ் அதிகம் தரக் கூடிய பைக்தான் வேண்டும். என்ன பைக் வாங்கலாம்?

ஜீவா, ராஜபாளையம்.

125 சிசி செக்மென்ட்டில் ஹோண்ட£ ஷைன் நல்ல சாய்ஸ். இது மைலேஜ் அதிகம் தரக்கூடிய பைக் என்பதோடு, நீண்ட தூரம் ஓட்டவும் வசதியான பைக்!