கார்ஸ்
Published:Updated:

ஒரு ரிவர்ஸ் கியர் பயணம்

சென்னை TO மெட்ராஸ் - வின்டேஜ் கார் ராலி

  மோ.அருண்ரூபபிரசாந்த்

 ##~##

ட்டோமொபைல் உலகைப் பொறுத்த வரை சென்னையின் முகம் நிறையவே மாறிவிட்டது! உலகப் புகழ் வாய்ந்த பிராண்டுகள் தங்கள் புத்தம் புதிய மாடல்களோடு சென்னையை நோக்கிப் படையெடுத்து வரும் அதே வேளையில், வின்டேஜ் கார்களுக்கான மவுசும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் சென்னையில் உள்ள கார் பிரியர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.

சமீபத்தில் சென்னையில் 'மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்’ நடத்திய வின்டேஜ் கார் ராலியே அதற்குச் சாட்சி. 'நாங்கல்லாம் அந்தக் காலத்துல...’ என பழம் பெருமை பேசுகிறவர்கள்தான் வின்டேஜ் கார்களின் ரசிகர்களாக இருப்பார்கள் என்று நினைத்தால், ''அதெல்லாம் இல்லை, ஃபெராரி மாதிரியான கார்கள் எப்படி மாடர்ன் ஸ்டைலால் அட்ராக்ட் பண்ணுதோ, அதே மாதிரி மோரீஸ் மைனரும், மினியும் கிளாஸிக் தோற்றத்தினால் எங்கள சுண்டி இழுக்குது'' என ஜீன்ஸ் தலைமுறை டிஜிட்டல் கேமராவோடு அங்கும் இங்கும் துள்ளித் திரிந்து படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ரிவர்ஸ் கியர் பயணம்
ஒரு ரிவர்ஸ் கியர் பயணம்

கார்கள் போதாதென்று சின்னதாக ஹெரிடேஜ் பைக்குகளின் ஷோவும் அங்கு நடத்தப்பட்டது. டிரையம்ஃப், பிஎஸ்ஏ, ஜாவா என அந்தக் கால தயாரிப்புகள் ஏதோ நேற்றுதான் ஷோரூமில் இருந்து வெளியில் கொண்டு வந்ததைப் போன்று பளபளப்பாக, படு தோரணையாக நின்று கொண்டிருந்தன.

சைடு லாக்குக்குப் பதிலாக ஃப்ரன்ட் வீல் ஃபோர்க்குக்கு பின்னால் தொங்கும் பெரிய பூட்டு, ஆட்டோக்களிலேயே இப்போதெல்லாம் காணக் கிடைக்காத ஏர் ஹாரன் என ஒவ்வொரு பைக்கில்

ஒரு ரிவர்ஸ் கியர் பயணம்

இருந்தும் ஆட்டோமொபைல்களின் ஆரம்ப கால வளர்ச்சி பற்றி இன்றைய தலைமுறை நிச்சயமாக பாடம் கற்றிருக்கும். ராலியைத் தொடங்கி வைக்க வந்திருந்தது மயில்சாமி, கருணாஸ், 'மைனா’ விதார்த் ஆகிய மூவரும் ஆசை ஆசையாய் ஒவ்வொரு பைக்கிலும் உட்கார்ந்து போஸ் கொடுத்துக் கொண்டிருக்க... மயில்சாமி ஒரு படி மேலே போய், பழைய ராஜ்தூத் பைக்கைப் பார்த்ததும் ''ஹையா! பாபி பைக்'' என துள்ளிக் குதித்தார்.

''அந்தக் காலத்துல ராஜ்தூத் பைக்கோட பெயர்கூடத் தெரியாது. 'பாபி’ படத்துல, ரிஷிகபூர், டிம்பிள் கபாடியை பின்னாடி உக்கார வெச்சுக்கிட்டு இந்த பைக்குலதான் டூயட்டெல்லாம் பாடுவார். அந்தக் கால இளசுகளுக்கு பாபி பைக்குனு சொன்னாத்தான் புரியும்'' என்று பரவசப்பட்டார்.

ஒட்டுமொத்த ராலியின் ஹீரோ சந்தேகமே இல்லாமல், பிரிட்டிஷ் தயாரிப்பான 'எக்செல்ஸியர்’தான். இரண்டாம் உலகப் போரில், பிரிட்டிஷ் ராணுவத்தின் பாரா ட்ரூப்பைச் சேர்ந்த வீரர்கள் காடு மேடுகளில் ஓட்டிச் செல்வதற்காக, பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பைக் இது. கரடு முரடான பாதையில் ஒரு

ஒரு ரிவர்ஸ் கியர் பயணம்

கட்டத்துக்கு மேல் நடந்து செல்ல வாய்ப்பே இல்லை என்று ஆன பின், பிரிட்டிஷ் போர் விமானங்கள், ஒரு கன்டெய்னருக்குள், எக்செல்ஸியரை இரண்டாக மடக்கி வைத்து, ஒரு பாராசூட் மூலம் அந்த கன்டெய்னரை தரை இறக்குமாம்!

கன்டெய்னர் பிரிக்கப்பட்ட அடுத்த பதினொரு விநாடிகளுக்குள், ஹேண்டில் பார், சீட் ஆகியவற்றை அசெம்பிள் செய்து உடனே டிரைவ் செய்யலாம் இந்த பைக்கை! ஃப்யூல் டேங்க் மிகச் சின்னதாக இருந்தாலும், அதிகமான ஏர் பிரஷர் பயன்படுத்தி, இன்ஜினை ஆற்றலோடு இயங்க வைக்கலாம் என்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் சாட்சியாக நின்று கொண்டிருந்தது எக்செல்ஸியர்.

எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் இருந்து ராலி தொடங்கியபோது, கொஞ்ச நேரம் ட்ராஃபிக் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சற்று சூடான, மிஸ்டர் பப்ளிக் ஒருவர், தன் ஸ்கூட்டியை முறுக்கி முன்னேற முயல... அங்கே டிராஃபிக் கன்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஜெயசீலன் என்ற போக்குவரத்து காவலர் ஓடி வந்து, ஸ்கூட்டிகாரரின் இரு தோளிலும் கையைப் போட்டு, 'என்ன ஐயா அவசரம்? காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி கண்ணுக்கு எதிரில் நடக்குது. நின்னு ரசிச்சுட்டுப் போங்க! இது மாதிரி சான்ஸ் இன்னொரு தடவை வருமா?'' என சொல்ல... அதை ஆமோதிப்பதைப்போல தலையாட்டினார்கள் சுற்றியிருந்தவர்கள்.

''போன ஜெனரேஷன் ஃபோக்ஸ்வாகன் பீட்டிலுக்கும், இந்த ஜெனரேஷன் பீட்டிலுக்கும் லுக்குல ஏதோவொரு வித்தியாசம் இருக்குன்னு மட்டும் தெரியுது. ஆனா, அது என்னனுதான் தெரியல?'' என யூத் பட்டாளம் குழம்பிக் கொண்டிருக்க.... கார் ராலி, அண்ணாசாலையில் மிஞ்சியிருக்கும் மவுண்ட் ரோடைத் தேடிப் பயணிக்க... சென்னையில் இருந்து மெட்ராஸுக்குச் செல்லும் பயணம் இனிதே முடிந்தது!