கார்ஸ்
Published:Updated:

இம்பாலா சுந்தரவர்மன்!

வின்டேஜ் கலெக்டர்

ப.பிரகாஷ்  க.தனசேகரன்

 ##~##

சேலம் வின்சென்ட் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவர்மன். இவருக்கு 'இம்பாலா சுந்தர வர்மன்’ என்ற பெயரும் உண்டு! 'புதுமை ஆட்டோ கேரேஜ்’ என்பது  இவரது வொர்க் ஷாப் பெயர். ஆனால், இங்கு நிற்பவையோ வின்டேஜ் கார்களும், பழைய மாடல் பைக்குகளும், ஸ்கூட்டர்களும்தான்!

''பழைய பொருட்களை இனிமே யாரும் தயாரிக்க மாட்டார்கள். அது எப்படி இருக்கும் என்பதுகூட இளைய தலைமுறைக்குத் தெரியாமல் போய்விடக்கூடாது. அதனால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இம்பாலா, மோரீஸ் மைனர், புல்லட் போன்ற வாகனங்களைப் பாதுகாத்து வருகிறேன். சின்ன வயதில், நான் பார்த்த ஆங்கிலப் படங்களில் இடம்பெற்ற கார், பைக்குகள் எங்கள் ஊருக்குள் வந்தால், அதன் பின்னால் ஓடுவேன். 1967-ல் ஒரு ஆட்டோமொபைல் வொர்க் ஷாப்பில் உதவியாளராகச் சேர்ந்து தொழில் கற்றுக் கொண்டு, 1972-ல் தனியே வொர்க் ஷாப்பைத் துவக்கினேன். இதில் கிடைத்த வருமானத்தில்தான் ஆங்கிலப் படத்தில் பார்த்த பழைய காரை

இம்பாலா சுந்தரவர்மன்!

1,450க்கு வாங்கினேன். அதுதான் 1937-மாடல் மோரீஸ் மைனர் புல்டாக் கார். இதை வாங்கிய பிறகு எந்த நிகழ்ச்சிக்குச் செல்வதென்றாலும் மோரீஸ் மைனர்தான்.

இம்பாலா சுந்தரவர்மன்!

மோரீஸ் மைனர் நாளடைவில் பழுதடைந்துவிட்டது. அதற்கான சில முக்கிய உதிரி பாகங்கள் எங்கும் கிடைக்கவில்லை. ஆனாலும் இதை விற்கவும் மனமில்லாமல் வொர்க் ஷாப்பில் வைத்துவிட்டேன். அதன் பின்பு, 1962-ம் ஆண்டு மாடல் இம்பாலா காரை வாங்கி இன்று வரை பராமரித்து ஓட்டி வருகிறேன். இப்போதும் ஏதாவது நிகழ்ச்சிக்குச் செல்வதென்றால், இம்பாலாதான். அதனால்தான் என் பெயருக்கு முன்னால் 'இம்பாலா’ சேர்ந்து கொண்டது!'' என்று தனது பெயர் காரணத்தைச் சொன்னார் சுந்தரவர்மன்.

''வின்டேஜ் வாகனங்களை வாங்கி மீண்டும் புத்தம் புது பொலிவுடன் இயங்கச் செய்வதில் இருக்கும் த்ரில் வேறெதிலும் கிடைக்காது. என்னுடைய சேகரிப்பில் மோரீஸ் மைனர் புல்டாக், இம்பாலா, ராஜ்தூத், புல்லட், 1984-மாடல் ஸ்கூட்டர், பழைய கடிகாரங்கள், நாணயங்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இன்றுவரை நான் அதிகம் பயன்படுத்துவதும் 1969-ம் ஆண்டு மாடல் புல்லட்தான். நான் சமயச் சொற்பொழிவு ஆற்றவும் செல்வதுண்டு. அதில் கிடைக்கும் வருமானத்தை என் வாகனங்களுக்குச் செலவு செய்யப் பயன்படுத்துகிறேன்!'' என்கிறார் இம்பாலா சுந்தரவர்மன்.