Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

நான் மோட்டார் விகடன் ஆன்லைன் வாசகர். எனக்கு 7 அல்லது 8 பேர் பயணிக்கக் கூடிய  எஸ்யுவி கார், 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் வேண்டும். எந்த கார் எந்த மாடல் வாங்கலாம்? நான் மாதம் 1,000 கி.மீ வரை ஓட்டுவேன். தற்போது 2010 மாடல் மாருதி எஸ்திலோ VXI மாடல் வைத்திருக்கிறேன். இந்த காரை என்ன விலைக்கு விற்கலாம் என்றும் சொல்லுங்கள்.

- வசீகரன், இமெயில்.

நீங்கள் சொல்லும் 15 லட்சம் பட்ஜெட்டில் உள்ள எந்த எஸ்யுவி காரிலும், 7 அல்லது 8 சொகுசாக பேர் பயணிக்க முடியாது. மேலும், எந்த எஸ்யுவி காரும் 8 பேர் செல்வதற்காக வடிவமைக்கப்படுவது இல்லை. உங்களுக்குத் தேவை ஒரு நல்ல எம்பிவி கார்தான். 15 லட்சம் ரூபாய்க்கு கீழ், நிஸான் எவாலியா, ஹோண்டா மொபிலியோ, டொயோட்டா இனோவா போன்ற கார்களில் 7 முதல் 8 பேர் பயணிக்கலாம். இந்த மூன்று கார்களில் 'உண்மையான’ எம்பிவி கார் இனோவாதான். இந்த காரின் 2.5 G 8 சீட்டர் அல்லது 2.5 GX 8 சீட்டர் வேரியன்ட் உங்களுக்கு ஏற்ற காராக இருக்கும். உங்களுடைய 2010 மாடல் மாருதி எஸ்திலோ VXI காரை உத்தேசமாக 2.5 லட்சம் வரை விற்பனை செய்யலாம்.

மாருதி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான், டட்ஸன் கோ ஆகிய இந்த மூன்று கார்களில் எது சிறந்த கார்? எனது பட்ஜெட் 5 லட்சம் ரூபாய். காரில் நான் உட்பட மூன்று பேர்தான் பயணிப்போம். பெட்ரோல் மாடல் போதும். நான் கொடுத்திருக்கும்  மூன்று கார்கள் தவிர, வேறு நல்ல கார் இருந்தாலும் சொல்லுங்கள்.

மோட்டார் கிளினிக்

- கே.தினேஷ் குமார், தர்மபுரி, இமெயில்.

உங்கள் பட்ஜெட்டுக்குள் வருகிற, அதே சமயம் ஒரு காற்றுப் பையுடன் (டிரைவர்) விற்பனைக்கு வரும் ஒரே கார் ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட். இதன் சென்னை ஆன் ரோடு விலை 4.51 லட்ச ரூபாய். இதில் தாராளமாக நான்கு பேர் வரை பயணிக்கலாம். நிதானமாக ஓட்டினால் நிறைவான மைலேஜை அளிக்கும் இதன் 814 சிசி பெட்ரோல் இன்ஜின். மாருதி ஆல்ட்டோ 800, டட்ஸன் கோ போன்ற கார்களைவிட தரமான இன்டீரியரும், ஸ்டைலான எக்ஸ்டீரியரும் இயானில் உள்ளன. ஆனால், பெர்ஃபாமென்ஸில் சற்று பின்தங்கிவிடும் இயான். உங்களுக்கு பாதுகாப்பும் (ஒரு காற்றுப் பை), ஸ்டைலும் முக்கியம் என்றால், இயான் வாங்கலாம். பெர்ஃபாமென்ஸ்தான் முக்கியம் என்றால், டட்ஸன் கோ வாங்கலாம்.  

ஸ்கோடா ஃபேபியா காரின் தீவிரமான ரசிகன் நான். முந்தைய தலைமுறை ஃபேபியாவை பல காரணங்களால் வாங்க முடியாமல் போய்விட்டது. அதனால், ஸ்விஃப்ட் வாங்கிப் பயன்படுத்தி

மோட்டார் கிளினிக்

வந்தேன். கடந்த மாதம்தான் என்னுடைய பழைய ஸ்விஃப்ட் காரை விற்பனை செய்தேன். மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் புதிய தலைமுறை ஃபேபியா காரைப் பார்த்தேன். அது எப்போது விற்பனைக்கு வரும்?

- கே.ரவீந்திரன், கோவை.

புதிய ஸ்கோடா ஃபேபியா இந்தியாவில் விற்பனைக்கு வராது. இன்னும் சில ஆண்டுகளுக்கு ரேபிட்தான் ஸ்கோடாவின் என்ட்ரி மாடல் காராக இருக்க வேண்டும் என அந்த நிறுவனமே சில ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்துவிட்டது. ஸ்கோடா இந்தியா நிறுவனம், புதிய ஃபேபியாவை அப்படியே இங்கு விற்பனைக்குக் கொண்டு வந்தாலும், போட்டி கார்களைவிட குறைவாக விலை நிர்ணயிப்பது மிகவும் கடினம். எனவே, புதிய ஸ்கோடா ஃபேபியா இப்போதைக்கு இந்தியாவில் விற்பனைக்கு வராது.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், மெர்சிடீஸ் ஏ கிளாஸ் ஆகிய இந்த இரண்டு கார்களில், நம்பகத்தன்மை கொண்ட கார் எது? நண்பர்களிடம் கேட்டபோது, '1 சீரிஸ் ரியர் வீல் டிரைவ். எனவே, அதை ஓட்டுவதற்கு நன்றாக இருக்கும்’ என்கிறார்கள். ஆனால், 1 சீரிஸ் காரை சாலைகளில் பார்க்க முடிவது இல்லையே? எனக்குத் தேவை நிம்மதியான ஓனர்ஷிப்தான். இந்த விஷயத்தில் எது பெஸ்ட்? 1 சீரீஸா... ஏ கிளாஸா?

- க.நிர்மல், சென்னை.

மோட்டார் கிளினிக்

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸுடன் ஒப்பிடும்போது, பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் ஓட்டுவதற்கு அருமையான கார். ஆனால், பின்பக்கம் இடவசதி மிகக் குறைவு. மேலும், ஸ்டைலிங்கும் சுமாராகவே இருக்கும். பென்ஸ் ஏ கிளாஸ் காரின் மிகப் பெரிய பிளஸ் பாயின்ட், இதன் ஸ்டைலிங். மேலும், 1 சீரிஸ் காரைவிட இதில் பின் இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. ஓட்டுதல் மற்றும் கையாளுமை விஷயத்தில் ஏ கிளாஸ் சற்று 'டல்’லான கார்தான். ஆனால், நிம்மதியான ஓனர்ஷிப் என்று பார்க்கும்போது,

ஏ கிளாஸ்தான் பெஸ்ட் சாய்ஸ்.

ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி கஃபே ரேஸர் பைக்கை வாங்கலாமா? ராயல் என்ஃபீல்டின் வழக்கமான தரம்தான் இதிலுமா? இந்த பைக்கை வாங்குவதற்காகவே பணம் சேமித்து வைத்திருக்கிறேன். என் உழைப்பில் கிடைத்த பணத்துக்கான மதிப்பு இந்த பைக்கில் இருக்கிறதா?

- த.நிக்கோலஸ், மதுரை.

மோட்டார் கிளினிக்

மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளைவிட, ஒட்டுமொத்த தரம் சிறப்பாக இருப்பது கான்டினென்ட்டல் ஜிடி பைக்கில்தான். சுமார் 2.09 லட்சம் ரூபாய் விலை கொண்டிருந்தாலும், கண்ணைப் பறிக்கும் ஸ்டைலிங், இருக்கைகளை மாற்றியமைத்துக்கொள்ளும் ஆப்ஷன், மிடுக்கான எக்ஸாஸ்ட் சத்தம், சக்தி வாய்ந்த இன்ஜின் என நிறைய ப்ளஸ் பாயின்ட்டுகள் இருக்கின்றன. நகருக்குள் கையாள சற்று சிரமமாக இருக்கும் என்றாலும், டூரிங் செல்ல ஏற்றது. ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி பைக்கை நிச்சயம் வாங்கலாம்.