கார்ஸ்
Published:Updated:

ரஜினியுடன் மோதும் தீபக்!

தேசிய பைக் ரேஸ்

சார்லஸ், அ.இராமநாதன்   ப.சரவணகுமார்

 ##~##

 கஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதி, சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கில்  ஒரே 'வ்ர்ர்ரூம்’ சத்தம்தான். தேசிய பைக் ரேஸ் பந்தயத்தின் மூன்றாவது சுற்றுக்கான அறிகுறிகள்தான் அது!

 சென்னை ரேஸ் வீரரும், தேசிய பைக் ரேஸ் சாம்பியனுமான கிருஷ்ணன் ரஜினியின் அதிரடியில் குலுங்கியது சென்னை ரேஸ் டிராக். ஆசியன் ஜீபியில் கோட்டை விட்ட ரஜினி, தேசிய சூப்பர் பைக் ரேஸில் 'டபுள்’ அடித்தார்.

600 சிசி சூப்பர் பைக் ரேஸில் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்து, ரேஸை முதலிடத்தில் இருந்து துவங்கினார் ப்ரீத்தி ரேஸிங் அணியின் தீபக் ரவிக்குமார். முதலிடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினாலும், சென்னை ரேஸ் டிராக்கின் வளைவு நெளிவுகளைக் கரைத்துக் குடித்த மோட்டோ ரெவ் அணியின் கிருஷ்ணன் ரஜினியிடம் தீபக்கின் பாச்சா பலிக்கவில்லை. 8 லேப்புகள் கொண்ட முதல் ரேஸில், ரஜினி 15 விநாடிகள் வித்தியாசத்தில் தீபக்கை முந்திச் சென்று வெற்றி பெற்றார். இரண்டாவது ரேஸிலும் ரஜினியை வீழ்த்த யாரும் இல்லை. இரண்டாவது ரேஸில் ரஜினி வெற்றி பெற்று போடியம் ஏற, தீபக் இரண்டாவது இடத்தையும், ரோஹித் கிரி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ரஜினியுடன் மோதும் தீபக்!

சூப்பர் பைக் ரேஸில், இரண்டு ரேஸ்களிலும் இரண்டாவது இடம் பிடித்த தீபக், 165 சிசி குரூப் 'பி’ ரேஸ் போட்டியில் இரண்டு ரேஸ்களில் வெற்றி பெற்று அசத்தினார் தீபக். இரண்டு ரேஸ்களிலும் டிவிஎஸ் ரேஸ் வீரர்கள் ஜெகன் குமார் மற்றும் ஹாரி சில்வஸ்டரைத் தோற்கடித்து முதலிடம் பிடித்தார் தீபக்.

குரூப் 'டி’ 165 சிசி ரேஸ் போட்டியில், மோட்டோ ரெவ் இந்தியா வீரர்கள் ஷியாம் ஷங்கர் மற்றும் பிரபு முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.

ஒன் மேக் ரேஸாக நடந்த ஹோண்டா சிபிஆர் 250ஆர் ரேஸ் போட்டியில், முழுக்க முழுக்க மோட்டோ ரெவ் இந்தியா அணி வீரர்களின் அராஜகம்தான்! ஷ்யாம் ஷங்கர், பிரபு, கௌதம் மயில்வாகனன் என மோட்டோ ரெவ் அணியின் மூன்று வீரர்களுமே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

ஹோண்டா சிபி ஸ்டன்னர் ரேஸ் போட்டியில் பத்மநாபன், அருண், தாமரைக் கண்ணன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

மற்றொரு ஒன் மேக் ரேஸான யமஹா ஆர்-15 ரேஸில் ஷ்யாம் ஷங்கர் முதலிடம் பிடித்து வெற்றி பெற... கே.வினோத் இரண்டாம் இடத்தையும், சுதாகர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர் இரண்டாவது ரேஸ் போட்டியில் ஆல்வின் ஜெபாஸ் முதலிடத்தையும், பிரத்திவ் இரண்டாவது இடத்தையும், சஞ்சய் குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்!