Election bannerElection banner
Published:Updated:

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?

சுஸூகி ஜிக்ஸர்தமிழ், படங்கள்: ஆ.முத்துக்குமார்

கன்னாபின்னா விற்பனை, ஏகப்பட்ட சர்வீஸ் நெட்வொர்க் என்று டூ-வீலர் மார்க்கெட்டில் கலக்கவில்லை என்றாலும், ஜாலியான ரைடிங், ஸ்மூத் இன்ஜின், நியாயமான மைலேஜ் மற்றும் விலைக்காக, சுஸ¨கி பைக்குகளை நம்பி வாங்கலாம்.

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?

சுஸ¨கியிடம் ஏற்கெனவே 150 சிசி செக்மென்ட்டில் GS150R பைக் இருந்தாலும், விற்பனையில் பேர் சொல்லும் பிள்ளையாக இல்லாததால், அதே செக்மென்ட்டில் செல்லமாக அவதரித்திருக்கிறது - ஜிக்ஸர். திடீர் மழை, திடீர் வெயில் என்ற கண்ணாமூச்சி கிளைமேட்டுக்கு நடுவே, புனேவில் சுஸ¨கி ஜிக்ஸரை ஃபர்ஸ்ட் டிரைவ் செய்தேன்.

ஸ்டைல்

டிஸைனைப் பார்த்ததுமே சொல்லிவிடலாம் - நிச்சயம் இது யமஹா FZ-க்குப் போட்டி என்று. சில பைக்குகளின் ஃபேரிங் ஸ்போர்ட்டியாக இருக்கும்; ஆனால், பின்பக்கம் டல் அடிக்கும். சில பைக்குகளின் சீட் பொசிஷன் நன்றாக இருக்கும்; ஆனால், சைடு புரொஃபைல் மொழுக்கென இருக்கும். நீங்கள் ஜிக்ஸரை எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் உங்களுக்குப் பிடிக்கும். காரணம், ஜிக்ஸரின் டிஸைனர்கள். ஹயபூஸா, GSX 1000R, பேண்டிட் பைக்குகளின் டிஸைனர்களின் கைவண்ணத்தில், மினி சூப்பர் பைக்போல ஜொலிக்கிறது ஜிக்ஸர்.

இதன் சேஸி ஹயபூஸா பைக் டிஸைனில் இருந்தும், ஃப்ரேம் GSX 1000R பைக் டிஸைனில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. முன்பக்க ஃபெண்டரில் இருந்து பின்பக்க கிராப் ரெயில் வரை ஒரே நேர்கோட்டில் ஒன்றாக அமைந்திருப்பதால், ஸ்ட்ராங்கான பைக் போலத் தெரிகிறது ஜிக்ஸர். பக்கா ஏரோ - டைனமிக்ஸ் டிஸைனில் அமைந்திருக்கும் இதன் 'V’ வடிவ ஹெட்லைட் மாடலே, 'நான் ஒரு யூத் பைக்’ என்று கெத்து காட்டுகிறது. உள்ளே ஹாலோஜன் லேம்ப்களும், பார்க்கிங் லைட்டும் இரவு நேரத்தில் தைரியமாகப் பயணிக்க உதவுகின்றன. முழுக்க முழுக்க டிஜிட்டல் மயத்தில் ஜொலிக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் நிச்சயம் இளைஞர்களைக் கவரும். ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், இரட்டை ட்ரிப் மீட்டர்கள், ஃப்யூல் மீட்டர், டேக்கோ மீட்டர் என்று எதிலும் அனலாக் கிடையாது. பக்கவாட்டில் ஆர்பிஎம் இண்டிகேட்டரும் உண்டு.

எத்தனையாவது கியரில் பயணிக்கிறோம் என்று சொல்லும் டிஜிட்டல் கியர் இண்டிகேட்டர் ஜிக்ஸரிலும் உண்டு. கூடுதலாக, நேரம் பார்ப்பதற்கு டிஜிட்டல் கடிகாரம். ஐடிலிங்கின்போது, ஸ்பீடோ மீட்டரில் '00’ என்று காட்டுவதற்குப் பதில் (GO) என்று ஆங்கிலத்தில் ஒளிர்வது, நல்ல ஐடியா. எல்இடி டெயில் லாம்ப் செம ஸ்டைலிஷ். ஸ்போர்ட் பைக்குகளுக்கே உரிய, டேங்க்குக்குக் கீழே காற்றைக் கிழிக்கும் வகையில் உள்ள ஃபேரிங் டிஸைன் ஜிக்ஸரிலும் உண்டு. கீழே செயினுக்கு கார்டு கிடையாது. இரண்டு பக்கமும் 'Y’ ஷேப் 6 ஸ்போக் அலாய் வீல்கள் செம ஸ்போர்ட்டி!

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?

ஹெட் லைட்டுக்குப் பிறகு ஜிக்ஸருக்கு அழகு சேர்ப்பது இதன் எக்ஸாஸ்ட். 150 சிசி செக்மென்டில் முதன்முதலாக டூயல் டைப் எக்ஸாஸ்ட் கொண்ட பைக் ஜிக்ஸர். மேலும் இது உயரமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், மழை நேரங்களில் வீதியில் தேங்கி நிற்கும் நீரில் பயணிக்கும்போது, பைக் ஆஃப் ஆகிவிடுமோ என்ற பயம் வராது. யமஹா FZ போலவே இதன் நீளமான, அகலமான ஹேண்டில்பார் பிடித்து ஓட்ட, ஸ்டைலாக இருக்கிறது. சிவப்பு, அடர் நீலம், கறுப்பு, கிரே, வெள்ளை என்று ஐந்து நிறங்களில் வெளிவருகிறது ஜிக்ஸர். யமஹாவை சவாலுக்கு அழைக்கும் இதன் நேக்கட் டிஸைனுக்கு, நிச்சயம் இளைஞர்கள் ஸ்மைலி போடுவார்கள்.

இன்ஜின்

ஜிக்ஸரில் பழைய முறையில் இயங்கும் கார்புரேட்டர் டைப் இன்ஜின் இருக்கிறது. சுஸ¨கி  இன்ஜின்கள் பட்டர் ஸ்மூத் இன்ஜின் எனப் பெயர்பெற்றவை. 155 சிசி சிங்கிள் சிலிண்டர் மற்றும் ஏர்-கூல்டு இன்ஜின் கொண்ட ஜிக்ஸரிலும் அதே பட்டர் ஸ்மூத்னெஸ் உண்டு. கியர் விழுந்த அடுத்த மில்லி செகண்டில், பவர் அனைத்தும் பின் பக்க வீலுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிறது. டார்க் விஷயத்தில் ஜிக்ஸரை அடித்துக்கொள்ள 150 சிசி போட்டி பைக்குகளால் முடியாது. 6,000 ஆர்பிஎம் வரை 1.43kgm டார்க் இருப்பதால், பிக்-அப்பில் செம பில்டப் கொடுக்கிறது ஜிக்ஸர்.

கிட்டத்தட்ட 180 சிசி பைக்குகளுக்குத் தேவையான டார்க் இருப்பதால், ஆக்ஸிலரேட்டரைத் திருகிய 5.61 விநாடிகளில் தடாலென 60kph-ஐத் தாண்டுகிறது பைக். இதுவே 100kph-யை அடைய 19.25 விநாடிகள் ஆகிறது. 14.6bhp பவரை வெளிப்படுத்தும் ஜிக்ஸரில், கிட்டத்தட்ட 116 கி.மீ. வரை டாப் ஸ்பீடில் இன்ஜினை த்ராட்டில் செய்ய முடிகிறது. ஹோண்டாவில் 'HET’ மாதிரி, சுஸ¨கியிலும் இப்போது SEP எனும் லேட்டஸ்ட் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இன்ஜினில் எந்த காம்ப்ரமைஸும் இல்லை; மைலேஜிலும் எந்தக் குறைபாடும் இல்லை; அதேநேரம், பெர்ஃபாமென்ஸை வாரி வழங்குவதுதான் 'Suzuki Eco Performance’ என்று அழைக்கப்படும் இந்த SEP-யின் வேலை.

மோட்டோ ஜீபி இன்ஜினீயர்களின் அனுபவத்துடன் தயாராகியுள்ள ஜிக்ஸர் இன்ஜின், கம்யூட்டர் பைக்காக மட்டும் இல்லாமல், ரேஸிங் டெக்னாலஜியுடனும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது சுஸ¨கி.

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?

கியர்

புதிதாக பைக் ஓட்டுபவர்களுக்கு, பெரும்பான்மையான சுஸ¨கி பைக்குகள் வசதியாக இருக்கும். காரணம் - கியர் இண்டிகேட்டர். ஜிக்ஸரிலும் கியர் இண்டிகேட்டர் டிஜிட்டலில் உண்டு. சுஸ¨கியின் முந்தைய GS150R பைக்கில் 6 கியர்கள் உண்டு. ஆனால், ஜிக்ஸரில் 5 கியர்கள் போதும் என்று நினைத்துவிட்டது சுஸ¨கி. 1-டவுன், 4-அப் முறையில் இயங்கும் கியர்பாக்ஸ் - இன்ஜின் போலவே ஸ்மூத்தாகவும், இன்ஜினுக்கு ஏற்றதாகவும் இயங்குகிறது. கிளட்ச்சும் மென்மையாக இருக்கிறது. மொத்தத்தில் கியர்பாக்ஸ் - கிளட்ச் பார்ட்னர்ஷிப் பிரமாதம். வழக்கம்போல, கியரில் 'டோ ஷிப்ட்’ மட்டுமே!

கையாளுமை, சஸ்பென்ஷன்

கையாளுமையிலும் பல லைக்ஸ் போடலாம். பைக்கில் ஏறி உட்கார்ந்ததுமே, புதிய ஓட்டுநர்களுக்கும் ஒரு புரொஃபஷனல் லுக் வந்துவிடும். காரணம் - அகலமான இதன் ஹேண்ட்பார்கள். ஹேண்டில்பார் நீளமாக, பிடிப்பதற்கு ஏற்றபடி இருப்பதால்... வளைத்துத் திருப்பி ஓட்டுவதில் எந்தச் சிரமமும் இல்லை. சுலபமான இதன் கையாளுமைக்கு எடையும் உறுதுணை. பல்ஸரைவிட (143 கிலோ), GS 150R-ஐவிட (149 கிலோ) கிட்டத்தட்ட 12 கிலோ வரை (135 கிலோ) எடை குறைவாக இருப்பதால், பேலன்ஸ் செய்வதற்கு ஈஸி.

சீட் பொசிஷன் அருமை! ஆறு அடி வளர்ந்தவர்கள் உட்கார்ந்தால் கூட, ஹேண்டில்பாரில் முழங்கால் இடிக்காத அளவு சீட் பொசிஷன் பிரமாதம். ஆனால், காதலர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாலோ என்னவோ, பில்லியன் சீட் கொஞ்சம் உயரம். பின் பக்கப் பயணி, டிரைவரின் சப்போர்ட்டிலோ அல்லது பின்னால் கிராப் ரெயிலைப் பிடித்துக் கொண்டோதான் பயணிக்க வேண்டும். பெட்ரோல் டேங்க் பெரிதாக, கால்களை நன்கு வசதியாக வைத்து ஓட்ட உதவுகிறது.

டயர்கள், வழக்கம்போல இரண்டு பக்கமும் ட்யூப்லெஸ். எம்.ஆர்.எஃப் ரேடியல் டயர்கள் நல்ல க்ரிப். மழை தூறிக்கொண்டிருந்த மலைப் பாதைகளில் ஜிக்ஸரில் பிரேக் அடித்தபோது, இதை நன்கு உணர முடிந்தது. முன் பக்கம் எப்போதும் போல டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன். மேடு - பள்ளங்களில் இறக்கும்போது ரொம்ப சாஃப்ட்டாகவும் இல்லை... டைட்டாகவும் இல்லை. பின்பக்கம் உள்ள மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் தன் கடமையைச் செய்கிறது. வேகமாகச் செல்லும்போது, மழைக் காற்றில் கொஞ்சம்கூட அலைபாயவில்லை ஜிக்ஸர்.

மைலேஜ், விலை

SEP டெக்னாலஜி, மைலேஜில் நிச்சயம் எந்தக் குறையும் வைக்காது என்கிறது சுஸ¨கி. நகரச் சாலைகளில் டெஸ்ட் செய்தபோது, லிட்டருக்கு 41.7 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 44.2 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது ஜிக்ஸர். GS 150R  பைக்கின் விலைதான் கிட்டத்தட்ட ஜிக்ஸரின் விலையும். இதன் சென்னை ஆன்-ரோடு விலை

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?

82,600. இது பல்ஸரைவிட 4,000 ரூபாய் அதிகம். ஆனால், இது யமஹா FZ-S கார்புரேட்டர் இன்ஜின் பைக்கைவிட 1,000 ரூபாய் மட்டுமே விலை குறைவு. ஸ்டைலிங், பெர்ஃபாமென்ஸ், ஹேண்ட்லிங் என்று ஒட்டுமொத்தமாகக் கலக்கும் ஜிக்ஸரை, விற்பனையில் சிக்ஸர் அடிக்கவைப்பது, சுஸ¨கியின் சர்வீஸ் தரத்தில்தான் இருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக டல்லடித்துக் கொண்டிருந்த 150சிசி செக்மென்ட் - சுஸுகி ஜிக்ஸர், யமஹா திஞீஷி க்ஷி2.0 பைக்குகளின் வரவால் பரபரத்துக் கிடக்கிறது. இரண்டு பைக்குகளும் அறிமுகமானதும், இரண்டையும் ஒப்பிடச் சொல்லி நிறைய வாசகர்கள் மெயில் தட்ட, பைக்குகளை விரட்டினோம்.

சுஸுகியா, யமஹாவா?

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?

டிசைன்

இரண்டும் ஜப்பானிய பைக்குகளாக இருப்பதாலோ என்னவோ, யமஹா FZ-S V2.0  பைக்கும், சுஸ¨கி ஜிக்ஸரும் பார்க்க ஒரே நிறுவனத்தின் டிஸைன் போலத்தான் இருக்கின்றன. ஜிக்ஸரின் முன்பக்கம் சற்று தாழ்வாகத் தோற்றமளிக்கிறது. பின்பக்கம் கிராப் பார்கள் பைக்கின் டிஸைனுடன் ஒன்றிப்போகின்றன. இந்த இரண்டு பைக்குகளில் திஞீஷி க்ஷி2.0 பைக்தான் பழையது. ஆனால், வயதானாலும் அதன் ஸ்டைல் குறையவில்லை.  

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்கள் பார்க்க, படிக்கத் தெளிவாக இருக்கின்றன. ஜிக்ஸரில் ஷிஃப்ட் வார்னிங் லைட் இருப்பதால், இன்ஜினை தேவைக்கும் அதிகமாக ரெவ் செய்யும்போது எச்சரிக்கை செய்கிறது. FZ-S V2.0  பைக்கில் எகானமி மோடு லைட் இருப்பது, எரிபொருள் சேமிப்புக்கு உதவும்.

யமஹா திஞீஷி க்ஷி2.0 பைக்கின் ஸ்விட்ச் கியர், ஜிக்ஸரைவிட தரமானது. இரண்டு பைக்குகளின் பெட்ரோல் டேங்குகளும் தொடைகளுக்குச் சரியான சப்போர்ட் அளிக்கிறது. மிரட்டலான டிஸைன் இதன் ப்ளஸ். ஜிக்ஸரின் பெரிய ரியர் மட்கார்டை, தேவைப்பட்டால் அகற்றிக் கொள்ளலாம்.  FZ-S V2.0  பைக்கின் வழக்கமான மட்கார்டும், 'டயர் ஹக்கரும்’ பார்க்க, ஸ்மார்ட்டாக இல்லை.

ஜிக்ஸரின் கோனிக்கல் டிஸைன் எக்ஸாஸ்ட் கேனிஸ்டரில் க்ரோம் பூசப்பட்டும், இரண்டு பைப்புகளும் இருப்பதால், கண்களைப் பறிக்கிறது.  FZ-S V2.0 பைக்கின் எக்ஸாஸ்ட், பைக்கின் டிஸைனுக்கு மேட்ச்சிங்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?

இன்ஜின்

யமஹா  FZ-S V2.0 , சுஸ¨கி ஜிக்ஸர் இரண்டு பைக்குகளிலுமே ஏர்கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் இன்ஜின்தான். ஆனால், ஜிக்ஸரில் இருப்பது 155 சிசி, கார்புரேட்டர் மூலம் சுவாசிக்கும் இன்ஜின். இது 14.6 bhp சக்தியை 8,000 ஆர்பிஎம்-லும், 1.43 kgm டார்க்கை 6,000 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது.  யமஹா  FZ-S V2.0  பைக்கில் இருப்பதோ 149 சிசி, ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின். இது 12.9 bhp சக்தியை 8,000 ஆர்பிஎம்-மிலும், 1.3 kgm டார்க்கை 6,000 ஆர்பிஎம்-மிலும் அளிக்கிறது.

பவர் டெலிவரியில் ஜிக்ஸரை விட வெண்ணெய் போல ஸ்மூத்தாக இருப்பது யமஹா FZ-S V2.0 ன் இன்ஜின்தான். டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸில் இரண்டு இன்ஜின்களுமே வீக்தான். குறைவான ஆர்பிஎம்களிலும், மிட் ரேஞ்சிலும் நல்ல சக்தியை அளிக்கின்றன இந்த இன்ஜின்கள். இரண்டு பைக்குகளின் கிளட்ச்சும், கியர் பாக்ஸும் ஓ.கே!

மணிக்கு 0-60 கி.மீ வேகத்தை 5.61 விநாடிகளில் ஜிக்ஸர் அடைய,  யமஹா இதே வேகத்தை அடைய 5.60 விநாடிகள் எடுத்துக் கொண்டது. மணிக்கு 0-100 கி.மீ வேகத்தை எடுத்துக்கொண்டால், ஜிக்ஸர் 19.25 விநாடிகளில் முதல் இடத்தையும், யமஹா 21.77 விநாடிகளில் இரண்டாம் இடத்தையும் பிடிக்கிறது. அதற்குமேல் விரட்டினால், FZ-S V2.0  மணிக்கு 109 கி.மீ வேகத்தில் தனது டாப் ஸ்பீடை எட்டிவிட, ஜிக்ஸர் 116 கி.மீ வரை பெர்ஃபாமென்ஸ் காட்டுகிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

இரண்டிலுமே முன்பக்கம் 41 மிமீ டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பெரிய டிஸ்க் பிரேக்குகளும் இருக்கின்றன. இரண்டு பைக்குகளிலும் டியூப்லெஸ் MRF டயர்கள் நல்ல க்ரிப்பைத் தருகின்றன. நகரச் சாலைகளுக்கு ஏற்ற எளிதான கையாளுமையையும் கொண்டிருக்கின்றன. பின்பக்கம் டிரம் பிரேக்குகளே இருந்தாலும்,  இந்த பைக்குகளின் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ் சூப்பர். மணிக்கு 60 கி.மீ வேகத்தில் இருந்து ஃபுல் ஸ்டாப் செய்தால், ஜிக்ஸர் 16.10 மீட்டர்களை மட்டுமே எடுத்துக்கொள்ள, FZ-S V2.0  17.55 மீட்டர்கள் எடுத்துக்கொண்டது.

ஒட்டுமொத்த மைலேஜில் பட்டையைக் கிளப்புவது, யமஹாவின் ஃப்யூல்  இன்ஜெக்டட் FZ-S V2.0

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?

  பைக்தான். லிட்டருக்கு 47.5 கி.மீ அளிக்கிறது. சுஸ¨கி ஜிக்ஸரின் மைலேஜ் - லிட்டருக்கு 42.9 கி.மீ!

மைலேஜ் தவிர, மற்ற எல்லா விஷயங்களிலும் ஒரே மாதிரி பெர்ஃபார்ம் செய்வதால், இந்த இரண்டு பைக்குகளையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, நம்மிடம் இருக்கும் கடைசி ஆயுதம் - விலை.

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?

89,150 விலையில் FZ-S V2.0 விற்பனையாக, ஜிக்ஸர்

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?

82,600 விலைக்கு சென்னை ஷோ ரூம்களில் ஆன்-ரோடுக்கு விற்பனையாகிறது. 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் போல இதுவரை முன்னோக்கி ஓடிக் கொண்டிருந்த யமஹாவிடம் இருந்து வெற்றிக் கிரீடத்தை எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு ஓடத் தயாராகி விட்டது சுஸ¨கி ஜிக்ஸர்!

சிக்ஸர் அடிக்குமா ஜிக்ஸர்?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு