Published:Updated:

மோட்டார் நீயூஸ்

மோட்டார் நீயூஸ்

மோட்டார் நீயூஸ்

மோட்டார் நீயூஸ்

Published:Updated:

நிஸானின் CVT டிரான்ஸ்மிஷன், டட்ஸனில் வருமா?

மோட்டார் நீயூஸ்

CVT டிரான்ஸ்மிஷனைப் பிரபலப்படுத்துவதற்காக, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில், 'நிஸான் ஆட்டோமேஜிக்’ எனும் நிகழ்ச்சியை நடத்தியது நிஸான். அங்கு CVT டிராஸ்மிஷனை உருவாக்கும் ஜட்கோ நிறுவனத்தின் தலைவர் ஹிரோகி சுகியாமாவைச் சந்தித்தேன். ''எங்களுடைய புதிய CVT டிரான்ஸ்மிஷன் இப்போது ஸ்மூத்தான பெர்ஃபாமென்ஸையும், நல்ல மைலேஜையும் அளிக்கிறது. டட்ஸன் கோ காரில் CVT டிரான்ஸ்மிஷன் சேர்க்கப்படுமா என்பது குறித்து இப்போது எந்தக் கருத்தையும் சொல்ல இயலாது. முதலில்  CVT டிரான்ஸ்மிஷனை இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பிரபலப்படுத்த இருக்கிறோம்!'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ர.ராஜா ராமமூர்த்தி

2017ல் வருகிறது புதிய ஸ்கோடா ஹேட்ச்பேக்!

மோட்டார் நீயூஸ்

புதிய ஸ்கோடா ஃபேபியாவை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டாம் என முடிவெடுத்து விட்டது ஸ்கோடாவின் இந்தியத் தலைமை. பழைய ஃபேபியாவே நஷ்டத்தில் விற்பனையான நிலையில், புதிய ஃபேபியாவை இந்தியாவில் தயாரிப்பது பெரும் செலவு வைக்கும். அதனால், காரின் விலையும் அதிகமாகவே இருக்கும் என நினைக்கிறது ஸ்கோடா. ஆனால், ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் ஒரு காரைக் களமிறக்கியாக வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது. இதனால், ரேபிட் செடான் பிளாட்ஃபார்மில் 'இன்ஜினீயரிங்’ வேலைகளைச் செய்து, புதிய ஹேட்ச்பேக் ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது ஸ்கோடா. 2017-ல், புதிய பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது, ஸ்கோடாவின் புதிய ஹேட்ச்பேக்.

ஆகஸ்ட் மாத டாப்10 கார் விற்பனைப் பட்டியல்!

மோட்டார் நீயூஸ்

புதிய X3 ஃபேஸ்லிஃப்ட் மாடலை, சமீபத்தில் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ. புதிய X3 டீசல் இன்ஜின் மாடலில், இரண்டு வேரியன்ட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் சென்னையில் இருக்கும் பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய X3 பார்ப்பதற்கு X5 கார் போன்றே தோற்றமளிக்கிறது. பிஎம்டபிள்யூவுக்கே உரிய புதிய டிஸைன், காரை கம்பீரமாகக் காட்டுகிறது. காருக்கு வெளியே ட்வின் சர்க்குலர் ஹெட்லைட்ஸ், கிட்னி கிரில், முன் - பின் பம்பர்கள் போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காருக்கு உள்ளேயும் டிக்கியிலும் இடவசதி அதிகரித்திருக்கிறது. காருக்குள்ளே சென்டர் கன்ஸோல், டேஷ்போர்டில் ஏ.சி சிஸ்டம், அப்போல்ஸரி புதிதாக வடிவமைக்கப்பட்டவை. கூடுதல் தரத்துடன் பளிச்சென்று கவர்கிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள 2 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு இன்ஜின் 190தீலீஜீ சக்தியை அளிக்கிறது. 46 - 52 லட்சம் ரூபாய் விலைக்கு வந்திருக்கிறது புதிய X3.

விற்பனைக்கு வந்தது கேடிஎம் RC 200, RC 390

மோட்டார் நீயூஸ்

  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட  RC 200, RC 390 சூப்பர் ஸ்போர்ட்ஸ் வகை பைக்குகளை, இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது கேடிஎம் நிறுவனம். கேடிஎம் 200 டியூக், 390 டியூக் பைக்குகளை அடிப்படையாக வைத்தே இந்த இரண்டு பைக்குகளும் உருவாக்கப்பட்டிருக்கிறது. RC 390 பைக்கின் இன்ஜின் 43 bhp சக்தியை அளிக்கிறது. RC 200 பைக் 25 bhp சக்தியை அளிக்கிறது.

சாதாரண மாடல்களைவிட RC மாடல் பைக்குகள் இரண்டும் சுமார் 8 கிலோ எடை அதிகமாக இருக்கின்றன. ஃபேரிங், லைட்டுகள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளதால், எடை கூடியிருக்கிறது.

வாழ்வை மாற்றிய வால்வோ!

மோட்டார் நீயூஸ்

நம் நாட்டில், பஸ் போக்குவரத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது வால்வோ பேருந்துகள்தான். வால்வோ பேருந்து அறிமுகமானமானபோது, அதன் விலையைக் கண்டு மலைத்த ஆபரேட்டர்கள் எல்லாம், இன்று வால்வோ பேருந்தின் உரிமையாளர் என்பதில் பெருமிதம் கொள்கின்றனர். சமீபத்தில் பெங்களூருவில் உள்ள வால்வோ தொழிற்சாலையில் நடந்த விழாவில், வால்வோவின் மேலாண்மை இயக்குநர் வி.ஆர்.வி ஸ்ரீபிரசாத்திடம் பேசினேன். ''இன்றைக்கு இந்தியாவின் 15 நகரங்களில் டவுன் பஸ்ஸாக வால்வோ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருக்கும் தொழிற்சாலை வளாகத்தில் இருக்கும் டிரைவர் பயிற்சிப் பள்ளியில், இதுவரை 25,000 டிரைவர்களுக்கு வால்வோ பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் இதுவரை 5,000 பேருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. வால்வோ பேருந்துகள் எப்போதும் பாதுகாப்பு, தரம், தொழில்நுட்பம் ஆகிய விஷயங்களில் சமரசம் செய்துகொள்வது இல்லை!'' என்றார் ஸ்ரீபிரசாத்.

- கா.பாலமுருகன்

வந்துவிட்டது பிஎம்டபிள்யூ X3 ஃபேஸ்லிஃப்ட்!

மோட்டார் நீயூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism