Published:Updated:

கொரோனா ரெட் ஸோனில் 42% ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்... என்னவாகும் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம்?

ஆட்டோமொபைல் துறை - Automobile Industry
ஆட்டோமொபைல் துறை - Automobile Industry

கொரோனாவுக்குப் பிறகான வாழ்க்கை முன்பு போல இருக்கப்போவதில்லை. நிறைய மாற்றங்கள் உள்ளன. அதை ஏற்றுக்கொள்ளத் தயாரா என்ற கேள்வி இப்போது நமக்கு எழுந்திருக்கிறது.

மாற்றங்களுக்கு இன்னும் நீங்கள் தயாராகவில்லையா... பிரச்னை இல்லை. கொரோனா நமக்கு இன்னும் நிறைய நேரம் கொடுக்கும் என்றே தெரிகிறது. ஒரு கார்/பைக் ஆர்வலராக, ஆட்டோமொபைல் துறையில் அல்லது அந்தத் துறை சார்ந்து இயங்குபவராக உங்களின் துறை எப்படி எதிர்கால மாற்றங்களைச் சந்திக்கப்போகிறது என்று பார்க்கத் தயாரா?

Automobile Factory
Automobile Factory

தயாரிப்பாளர்கள் மற்றும் டீலர்களின் நிலை

பணம், பெரிய நம்பிக்கையைத் தரக்கூடிய விஷயம். கொரோனாவால் தற்போது எல்லோரிடமும் பணக் கையிருப்பு குறைவாகவே இருக்கிறது. இதனால், அடிப்படைத் தேவை என்பதைத் தாண்டி லக்ஸூரியாக இருக்கும் சில விஷயங்களை நாம் விட்டுக்கொடுக்கவேண்டிய நேரம். அதில் ஆட்டோமொபைல் ஒன்று. 

Past 5 years sales of Automobiles in India
Past 5 years sales of Automobiles in India

கொரோனா ஓய்ந்த பிறகு பொது வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் கார்பூலிங் பயன்படுத்துபவர்களிடம் சீனாவில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் வைரஸ் தொற்று மீண்டும் வரும் என்ற பயத்தில் 72 சதவிகிதம்பேர் தங்களுக்கென தனி வாகனம் வாங்கப்போவதாகக் கூறியுள்ளார்கள். இந்த நிலை உலகம் முழுவதும் உள்ள நிலைதான். "இந்தியாவிலும் இதேபோல தனி வாகனங்களின் தேவை வரும்மாதங்களில் அதிகரிக்கும். ஆனால், விலை உயர்ந்த வாகனங்களைவிட விலை குறைவான, மைலேஜ் அதிகமான வாகனங்கள்தான் விற்பனையாகும்" என்கிறார் ஆட்டோமொபைல் துறை வல்லுநர் டி.முரளி.

T. Murrali (Automobile Expert)
T. Murrali (Automobile Expert)
ஆன்லைனில் வாகன விற்பனை... ஆட்டோமொபைல் துறைக்கு உதவிகரமாக இருக்குமா?

இதற்கு கொரோனா மட்டும் ஒரே காரணம் இல்லை. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் மட்டும் அதிகம் பாதிப்பு அடைந்ததற்கு BS-6, மின்சார வாகனங்கள், ஆக்ஸில் நார்ம்ஸ், ஏபிஎஸ் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் என ஆட்டோமொபைல் நிறுவனங்களின் லாபமும், மக்களின் நுகர்வும் குறைய கிட்டத்தட்ட 9 காரணங்கள் இருக்கின்றன" என்கிறார் முரளி.

20 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் கார்களின் விற்பனை நிச்சயம் சரியப்போகிறது. அதே சமயம் 3 முதல் 8 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் கார்களின் விற்பனை உயரப்போகிறது. இதில் முக்கியமாக லாபம் ஈட்டப்போகும் நிறுவனங்கள் மாருதி சுஸூகி, ஹூண்டாய் மற்றும் டாடா.

Car Dealers in India
Car Dealers in India
நம் நாட்டின் பொருளாதாரத்துக்கு கமர்ஷியல் வாகனங்கள் மிக முக்கியமானவை.
விபின் சோந்தி

பாசஞ்சர் வாகனங்களின் நிலை இப்படியென்றால் கமர்ஷியல் வாகனங்கள் இன்னும் மோசம். அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விபின் சோந்தி பேசுகையில், "ஏற்கெனவே நலிவடைந்துகொண்டிருந்த கமர்ஷியல் வாகனத் துறை கொரோனாவால் ஸ்தம்பித்து உள்ளது. நம் நாட்டின் பொருளாதாரத்துக்கு கமர்ஷியல் வாகனங்கள் மிக முக்கியமானவை. கூட்ஸ் மற்றும் பொதுபோக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப கமர்ஷியல் வாகனங்களின் டிமாண்டை அதிகரிக்கவேண்டும். இதற்கு ஸ்கிராப்பேஜ் பாலிசி கொண்டுவந்து வாகனங்களை ஸ்கிராப் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி தள்ளுபடி, சாலை வரி தள்ளுபடி அல்லது பதிவுக் கட்டணம் தள்ளுபடி போன்றவை கொடுத்தால் டிமாண்ட் அதிகரிக்கும்" என்றார்.

Vipin Sondhi, MD & CEO Ashok Leyland
Vipin Sondhi, MD & CEO Ashok Leyland

இப்படி, இக்கட்டான சூழ்நிலையிலும் சில நல்ல குறியீடுகளும் தெரிகின்றன. தங்களது தேவைக்கு ஏற்ப உற்பத்தியைத் தகவமைத்துக்கொள்ளும் நிலைக்கு இந்தியாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வந்துவிட்டன. ஏப்ரல் மாதம் ஒரு வாகனம்கூட விற்பனையாகாத நிலையில் ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ரெனோ, எம்ஜி ஆகிய நிறுவனங்கள் சம்பளக் குறைப்போ, ஆட் குறைப்பு நடவடிக்கையிலோ நாங்கள் ஈடுபடமாட்டோம் என்று அறிவித்துவிட்டார்கள். அஷோக் லேலண்ட், மஹிந்திரா, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் ஒரே வாரத்தில் தங்களது கார் தொழிற்சாலையை வென்டிலேட்டர் தயாரிப்புக்கு உட்படுத்தியுள்ளார்கள். இந்தியா, நான்காம் தொழில் புரட்சிக்குத் தயாராகிவிட்டது என்பதைதான் இது உணர்த்துகிறது.

6 மாதம் நடைபெறவேண்டிய டிசைன் வேலைகளை ஒரு மாதத்தில் முடிந்துவிட்டோம்.
சத்தியசீலன்

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் வடிவமைப்பு துறை தலைவர் சத்தியசீலன் உடன் பேசும்போது, "டெல்லி, பூனே சென்று முடிக்கவேண்டிய விஷயத்தை ஒரு நிர்பந்தம் காரணமாக இங்கிருந்தே முடிக்கமுடிகிறது. இதனால், ஏகப்பட்ட பயண நேரம் மிச்சம், செலவுகள் மிச்சம். எங்களுடைய R&D வேலையைச் சுலபமாக்குகிறது. இந்தத் தொழில்முறை ஜனநாயகத்தில் வேலை வேகமாகவும், சுத்தமாகவும் நடைபெறுகிறது" என்றார்.

startupanz என்ற இணையதளம் உலகளவில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் 42 சதவிகித ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கொரோனா ரெட்ஸோனில் இருப்பதாகச் சொல்கிறது.
ஸ்டார்ட்அப்... சக்சஸ்!
ஸ்டார்ட்அப்... சக்சஸ்!

ஸ்டார்ட்அப்

ஆட்டோமொபைல் மற்றும் சுற்றுலாத் துறையில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துளிர்விடத் தொடங்கிய காலம் இது. ஆட்டோமொபைல் துறையின் மந்த நிலையின் போது கூட ஸ்டார்அப் நிறுவனங்கள் வளர்ந்துவந்தன. ஆனால், கொரோனாவால் இப்போது பொருளாதாரம் முடங்கியிருப்பதால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நிதி இப்போது கிடைப்பது குறைவு.

ஸ்டார்ட்அப்... சக்சஸ்! - நிம்மதியை விற்கும் பெண்!

மின்சார வாகனங்கள், டாக்ஸி/ரைடு பகிர்வு மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்களில்தான் ஸ்டார்அப் நிறுவனங்கள் அதிகம் இயங்கிவந்தன. startupanz என்ற இணையதளம் உலகளவில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் 42 சதவிகித ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கொரோனா ரெட்ஸோனில் இருப்பதாகச் சொல்கிறது.

Taxi Startups
Taxi Startups

ஆட்டோமொபைல் துறையில் தற்போது டாக்ஸி சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. உடனடியாக கிடைக்கவேண்டிய நிதி இவர்களுக்குக் கிடைக்காது. இதனால், 10 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருக்கின்றன என்கிறது ஆய்வு.

ஆட்டோமொபைல் உதிரியாக தயாரிப்பாளர்களுக்கு 66 சதவிகித டிமாண்டு OEM மூலகமாகவே வருகிறது. 19 சதவிகிதம் ஏற்றுமதியிலும், 15 சதவிகிதம் உள்நாட்டுச் சில்லறை விற்பனையிலும் கிடைக்கிறது.

உதிரிப்பாகங்கள் (components)

ஆட்டோமொபைல் உதிரிப்பாக உற்பத்தியாளர்களை மூன்று விதமாகப் பிரிக்கமுடியும். OEM சப்ளையர், Aftermarket விற்பனையாளர் மற்றும் ஏற்றுமதியாளர். இந்தியாவில் உதிரியாக தயாரிப்பாளர்களுக்கு 66 சதவிகித டிமாண்டு OEM-ல் இருந்தே வருகிறது. 19 சதவிகிதம் ஏற்றுமதி. உள்நாட்டுச் சில்லறை விற்பனை என்பது வெறும் 15 சதவிகிதம் மட்டுமே. 80 சதவிகிதத்துக்கும் அதிகமான உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் MSME துறையில் அடங்குபவர்கள். கடந்த ஆண்டு ஏற்கெனவே உற்பத்தி பாதிப்பு இருந்ததால் வெறும் 10 சதவிகித வளர்ச்சி மட்டுமே இந்தத் துறையில் இருந்தது. இந்த ஆண்டு அதைக்கூட எதிர்பார்க்கமுடியாத நிலை.

Automobile components Industry
Automobile components Industry

க்ரிசில் (Crisil) அறிக்கை படி 2019-20 நிதி ஆண்டில் ஆட்டோமொபைல் MSME நிறுவனங்களில் தேவை 12 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனாலும், ஏற்றுமதி ஓரளவுக்கு இந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. மார்ச் மாதத்துக்குப் பிறகு அதுவும் மொத்தமாக தடைபட்டுவிட்டது.  ஆட்டோமொபைல் உதிரிப்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் (ACMA) கொடுத்த தரவுகளின் படி இந்தியாவில் இந்தத் துறை நாளொன்றுக்கு ரூபாய் 1,000 முதல் 1,200 கோடி இழப்பைச் சந்தித்து வருகிறது.

Auto components Industry turnover/growth
Auto components Industry turnover/growth

பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய 70 சதவிகித வருமானத்தை உதிரிப்பாக தயாரிப்பாளர்களுக்காக செலவழிக்கும் நிலையில் இந்தியாவில் இந்த MSME செக்டார் மீண்டு வரும்போதுதான் உற்பத்தித் துறை மீண்டு வரும் என்று தெளிவாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு