Published:Updated:

கியாஷி என்றால் நல்ல சகுனம்! - ஆனால்... மாருதி சுஸூகிக்கு?

கியாஷி
பிரீமியம் ஸ்டோரி
கியாஷி

சுஸூகியின் ‘S’ லோகோவைப் பார்க்காமலேகூட, இது ஒரு சுஸூகி கார் என ஒரு குழந்தைகூடச் சொல்லிவிடும் அளவுக்கு சுஸூகி குடும்பத்தின் சாயல் இருந்தது.

கியாஷி என்றால் நல்ல சகுனம்! - ஆனால்... மாருதி சுஸூகிக்கு?

சுஸூகியின் ‘S’ லோகோவைப் பார்க்காமலேகூட, இது ஒரு சுஸூகி கார் என ஒரு குழந்தைகூடச் சொல்லிவிடும் அளவுக்கு சுஸூகி குடும்பத்தின் சாயல் இருந்தது.

Published:Updated:
கியாஷி
பிரீமியம் ஸ்டோரி
கியாஷி

மாருதி என்றாலே வாடிக்கையாளர்களிடம் மலிவு விலையில் குடும்பத்துக்கு ஏற்ற ஒரு பக்கா பட்ஜெட் கார் தயாரிக்கும் நிறுவனம் என்ற எண்ணம்தான் இருந்தது. இந்த இமேஜை உடைக்க, “நானும் மதுரக்காரன்தான்டா!” என வரிந்து கட்டிக்கொண்டு சொகுசு செடான் பிரிவில் கியாஷி கொண்டு நுழைந்தது மாருதி சுஸூகி. ‘கியாஷி’ என்றால் ஜப்பான் மொழியில் ‘நல்ல சகுனம்’ என அர்த்தம். இந்த கார் மாருதி சுஸூகிக்கு நல்ல சகுனமாக ஆகவில்லை. கியாஷி எங்கே சறுக்கியது… ஏன் கெட்ட சகுனம் ஆரம்பித்தது எனப் பார்க்கலாம்.

டபுள் பேரல் ஹெட்லேம்ப், டூயல் க்ரோம் எக்ஸாஸ்ட், 17 இன்ச் அலாய் வீல்கள் என படகுபோல் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருந்தது கியாஷி. சுஸூகியின் ‘S’ லோகோவைப் பார்க்காமலேகூட, இது ஒரு சுஸூகி கார் என ஒரு குழந்தைகூடச் சொல்லிவிடும் அளவுக்கு சுஸூகி குடும்பத்தின் சாயல் இருந்தது. பின்னாளில் வந்த மாருதியின் சியாஸ் செடானும் இதே டிசைன் மொழியைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கியாஷி என்றால் நல்ல சகுனம்! - ஆனால்... மாருதி சுஸூகிக்கு?

இதன் 2.4லிட்டர் சக்தி வாய்ந்த பெட்ரோல் இன்ஜின், 175 bhp பவர் மற்றும் 230 Nm உச்சபட்ச டார்க்கை முன் வீல்களுக்கு மட்டும் செலுத்தியது. 6 ஸ்பீடு மேனுவல், மற்றும் CVT ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் மாடல்களில் வந்தது கியாஷி. மேனுவல் மற்றும் CVT மாடல்கள் முறையே 215 km/h மற்றும் 205 km/h டாப் ஸ்பீடை அடைந்தன. இது அப்போதைய ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா, ஃபோர்டு, செவர்லே போன்ற கார்களுக்குக்கூட டஃப் ஃபைட் கொடுக்கப் பார்த்தது நிஜம்தான். ஆனாலும் கியாஷிக்குச் சறுக்கல் ஏற்பட்டது எங்கே?

ஏன் தோல்வியுற்றது?

மைலேஜைப் பொறுத்தவரை மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கு 12.45 கிமீயும், CVT-க்கு 12.53 கிமீயும் கொடுக்கும் என மாருதி சொல்லியது. ஆனால், இதைப் பயன்படுத்திய வர்கள், இதைவிடக் குறைவாகவே சொல்லிக் குறைபட்டுக் கொண்டார்கள்.

CVT ஆட்டோமேட்டிக்கின் கியர் ரேஷியோ ஜப்பானின் நெடுஞ்சாலைப் பயணங்களுக்காக ட்யூன் செய்யப்பட்டிருந் ததால், குறைந்த வேகங்களில் இதன் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. ஒப்பீட்டுக்கு, மேனுவல் மாடல் 0-100 கிமீ வேகத்தை 7.8 விநாடிகளில் அடைய, அதே வேகத்தை எட்ட CVT மாடல் 8.8 வினாடிகள் எடுத்துக் கொண்டது. இதனால் நகர ட்ராபிக்கில் ஓட்ட CVT மாடல் கடுப் பேற்றியது உடன், செவர்லே க்ரூஸ் மற்றும் ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா போன்ற டி-பிரிவு செடான்களுடன் போட்டியிட முடியவில்லை.

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை கீலெஸ் என்ட்ரி, டிரைவர் மற்றும் முன்பக்கப் பயணிக்கு மெமரி உடன் கூடிய எலெக்ட்ரானிக் சீட் அட்ஜஸ்ட், CVT மாடலுக்கு பேடில் ஷிஃப்டர், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், ABS & ESP, 6 காற்றுப்பைகள் என 2011 காலகட்டத்திலேயே ‘வாவ்’ சொல்லும் அளவுக்கு வசதிகள் இருந்தன.

கியாஷி என்றால் நல்ல சகுனம்! - ஆனால்... மாருதி சுஸூகிக்கு?

கியாஷியை ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு CBU வழியாக சுஸூகி கொண்டு வந்தது. இதனால் 2011 - ம் ஆண்டு இதை அறிமுகப்படுத்தும்போது, மேனுவல் மாடலுக்கு 16.5 லட்சமும், ஆட்டோ மேட்டிக்குக்கு 17.5 லட்சமும் (எக்ஸ் - ஷோரூம்) விலை நிர்ணயம் செய்தது சுஸூகி. இறக்குமதி செய்த ஸ்டாக்குகளை விற்க முடியாமல், இரண்டே ஆண்டுகளில் 5 லட்ச ரூபாய் வரை கியாஷிக்குத் தள்ளுபடி கொடுத்தது சுஸூகி. டீலர்ஷிப் வட்டாரங்களில் விசாரித்தபோது, கடைசியாக தேங்கிக் கிடந்த கியாஷிகளை டீலர்ஷிப் ஓனர்களுக்குப் பாதிக்குப் பாதி விலையில் சுஸூகி விற்பனை செய்துவிட்டதாக காதில் கிசுகிசுத்தனர். இன்றும்கூட சாலையில் நீங்கள் ஒரு கியாஷியைப் பார்த்தால், அது ஒரு மாருதி டீலர்ஷிப் ஓனரின் காராக இருக்கக் கூடும்.

கிராண்ட் விட்டாரா எஸ்யூவியைத் தொடர்ந்து, ஜப்பான் சுஸூகியிடம் இருந்து இறக்குமதி செய்து தோல்வியுற்ற இரண்டாவது கார் இந்த கியாஷிதான். ஏனென்றால், இந்த ப்ரீமியம் செக்மென்ட்டின் வாடிக்கையாளர்கள், இவ்வளவு செலவு செய்து மாருதி கார் வாங்கி சர்வீஸ் செய்ய விரும்பவில்லை. 2014-ல் கியாஷியின் ஃபைலை மூடும்போது, மாருதியும் இதை உணர்ந்தது. எனவே, மாருதி பிராண்டில் இருந்து விலகி ‘நெக்ஸா’ என்னும் ப்ரீமியம் சேல்ஸ் & சர்வீஸ் அனுபவத்தைத் தருவதற்கு சுஸூகி தயாரானது. இன்று இந்த நிறுவனத்தின் பெரும்பாலான லாபம் நெக்ஸா சேனலில் இருந்துதான் வருகிறது.

கியாஷி என்றால் நல்ல சகுனம்! - ஆனால்... மாருதி சுஸூகிக்கு?

ஒரு காராக விற்பனையில் இந்த ப்ரீமியம் செடான் தோற்றபோதிலும், சுஸூகி நிறுவனத்துக்கு நல்வழியைக் காண்பித்துச் சென்றுள்ளது கியாஷி. கியாஷிக்கான அர்த்தம் இந்த கட்டுரையின் அறிமுகத்தில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism