Published:Updated:

சிவகங்கை இளைஞர் தயாரித்த எலெக்ட்ரிக் ஜீப்; உதவ உத்தரவிட்ட ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

பேட்டரி வாகனங்களை உருவாக்குவதில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம் அசத்திவருகிறார். அவருக்கு உதவுவதற்காக ஆனந்த் மஹிந்திரா முன்வந்திருக்கிறார்.

சிவகங்கை இளைஞர் தயாரித்த எலெக்ட்ரிக் ஜீப்; உதவ உத்தரவிட்ட ஆனந்த் மஹிந்திரா

பேட்டரி வாகனங்களை உருவாக்குவதில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம் அசத்திவருகிறார். அவருக்கு உதவுவதற்காக ஆனந்த் மஹிந்திரா முன்வந்திருக்கிறார்.

Published:Updated:
ஆனந்த் மஹிந்திரா

பேட்டரியால் ஓடும் ஜீப், சைக்கிள் என்று கண்டுபிடித்து வரும் சிவகங்கை மாவட்ட இளைஞரை, மஹிந்திரா ஜீப் நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டி அவருக்கு உதவ முன்வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா

தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாக, தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்த அருணகிரி- கவிதா தம்பதியினரின் மகன் கவுதம். மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படித்து முடித்து வேலை தேடிக் கொண்டே கிடைக்கிற வேலைகளைப் பார்த்து வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர் படிக்கிற காலத்திலிருந்தே மோட்டார் வாகனங்களை நவீன முறையில் வடிவமைப்பதிலும், எரிபொருள் சிக்கனத்துக்காக சுற்றுச்சூழல் மாசில்லாத மின்வாகனமாக உருவாக்குவதிலும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் எலெக்டரிக் ஜீப் கண்டுபிடித்தார். தற்போது 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார். இவர் கண்டுபிடித்த பேட்டரி வாகனங்கள் குறித்த வீடியோவை, சமூக ஊடகத்தில் கண்ட ஆனந்த் மஹிந்திரா இவரைப் பாராட்டியுள்ளார். மேலும் அவருக்கு உதவ தன் நிறுவனத்தின் தமிழக அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

கண்டுபிடித்த பேட்டரி ஜீப்பில் கவுதம்
கண்டுபிடித்த பேட்டரி ஜீப்பில் கவுதம்

இது குறித்து கவுதமிடம் பேசினேன். "சின்ன வயசிலருந்து மோட்டார் கார்களில் புதுசா ஏதாவது செய்யணும்னு ஆர்வம். சின்னச் சின்னதா செய்து பார்ப்பேன். அந்த அடிப்படையில்தான் சில மாதங்களுக்கு முன் பேட்டரியால் இயங்கும் வகையில் ஜீப்பை வடிவமைத்தேன். பெட்ரோல், டீசலால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்பதால், அனைத்து நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வண்டிகளைத் தயார் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த அடிப்படையில்தான் நான் பழைய ஜீப் ஒன்றை வாங்கி, டீசலுக்குப் பதிலாக லித்தியம் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்தேன். இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் ஏற்ற 40 ரூபாய் செலவாகும். அதன் மூலம் 280 கிலோ மீட்டர் டிராவல் பண்ணலாம். இது கிராமப்புற விவசாய வேலைகளுக்கு உதவியாக இருக்கும்.

இதிலிருந்து அதிக சத்தம், புகையும் வராததால் சுற்றுச்சூழலுக்கு உபயோகமாக இருக்கும். இந்த ஜீப்பை டெஸ்ட்டிங் முறையில் என்னுடைய தேவைக்காக கிராமத்தில் ஓட்டி வருகிறேன். இது சாலையில் ஓட அரசு அனுமதித்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோல் பல வாகனங்களைப் பேட்டரிக்கு மாற்றினால் டீசல் செலவு மிச்சமாகும். சாமானிய மக்களுக்கும் பயன்படும்.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா

இப்போது எலெக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடித்துள்ளேன். மற்ற எலெக்ட்ரிக் சைக்கிளுக்கும் இதற்குமுள்ள வேறுபாடு என்னவென்றால், 3 பேட்டரிகளில் உள்ள சக்தியை இந்த சைக்கிளில் உள்ள கம்ப்ரஸர் இழுத்து ஒரே பேட்டரிக்குக் கொடுக்கும். இதன் மூலம் 20 முதல் 30 கி.மீ வேகத்தில் செல்லலாம்.

என் கண்டுபிடிப்புகளுக்கு என் பெற்றோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அரசோ, பெரிய நிறுனங்களோ சப்போர்ட் செய்தால் இன்னும் பல விஷயங்களைப் பண்ணலாம்.

கவுதம்
கவுதம்

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத் தலைவர் என் முயற்சியை பாராட்டியுள்ளதாக கேள்விப்பட்டு மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை!" என்றார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரவு கொடுக்க முன்வராதபோது ஆனந்த் மஹிந்திரா முன் வந்துள்ளார்.

வாழ்த்துகள் கவுதம்.!