Published:Updated:

எலெக்ட்ரிக் கார்களின் பாதுகாப்பு நிரூபிக்கப்படவில்லையா? - ஓர் எளிய விளக்கம்

எலெக்ட்ரிக் கார்
எலெக்ட்ரிக் கார்

பெட்ரோல்/டீசல் கார்களைவிட, எலெக்ட்ரிக் கார்கள் குறைந்த தூரமே செல்லும். அதாவது, சிங்கிள் சார்ஜில் சராசரியாக 250 கி.மீ தூரம் செல்லக்கூடியவை.

இன்றைக்கு கார் வாங்க நினைப்பவர்கள்கூட 'பிறகு பார்த்துக்கொள்ளலாமே...' என்று நினைக்க முக்கியக் காரணம் எலெக்ட்ரிக் கார்கள். இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளின் பட்டியல் வெகு நீளம். எனவேதான் லியோனார்டோ டிகாப்ரியோ, கேமரூன் டயஸ் போன்ற ஹாலிவுட் பிரபலங்கள் எலெக்ட்ரிக் கார்களையே பயன்படுத்துகிறார்கள். என்றாலும், நம்மவர்களுக்கு எலெக்ட்ரிக் கார்கள் பற்றிப் பல சந்தேகங்கள் உள்ளன. அவற்றுக்கான எளிய விளக்கங்கள் இங்கே...

> சந்தேகம்: அதிக தூரம் பயணிக்க முடியாது!

விளக்கம்: பெட்ரோல்/டீசல் கார்களைவிட, எலெக்ட்ரிக் கார்கள் குறைந்த தூரமே செல்லும். அதாவது, சிங்கிள் சார்ஜில் சராசரியாக 250 கி.மீ தூரம் செல்லக்கூடியவை. ஆனால், அவற்றின் செயல்பாடு பேட்டரியின் சைஸ், வாகனத்தின் எடை, காரை ஓட்டும் முறை, எலெக்ட்ரிக் மோட்டாரின் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். கோனா EV, நெக்ஸான் EV, MG eZS போன்ற லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் கார்களில் டிரைவிங் மோடுகள், ஷிஃப்ட்-பை-வயர் (Shift-By-Wire) அமைப்பு, பல்வேறு லெவல்களைக்கொண்ட ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங், பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம், அதிக செயல்திறனுக்குப் பெயர்பெற்ற 'Permanent Magnet Synchronous' வகை எலெக்ட்ரிக் மோட்டார், லித்தியம் அயான் பேட்டரி (Lithium Ion Battery) எனப் பல்வேறு வசதிகள் இதற்காகவே இடம்பெற்றுள்ளன.

எலெக்ட்ரிக் கார்களின் பாதுகாப்பு நிரூபிக்கப்படவில்லையா? - ஓர் எளிய விளக்கம்

> சந்தேகம்: வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோல சார்ஜிங் ஸ்டேஷன்கள் நம் நாட்டில் இல்லை!

விளக்கம்: எலெக்ட்ரிக் கார்களுடன் வழங்கப்படும் போர்ட்டபிள் ஏசி (Portable AC) சார்ஜரைக்கொண்டே வீடுகளிலுள்ள 220V ப்ளக் பாயின்ட்டில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இந்த வாகனங்களுக்கு மானியம் வழங்கக்கூடிய ஃபேம் 2 (FAME II) திட்டத்தின்படி, நாடெங்கும் 2,636 சார்ஜிங் பாயின்ட்களை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. அந்தப் பட்டியலில் தமிழகத்தில் அமைக்கப்படும் 256 சார்ஜிங் பாயின்ட்டுகளும் அடக்கம்; சென்னையில் 141, கோவையில் 25, மதுரையில் 50, வேலூர், சேலம், ஈரோடு, தஞ்சை ஆகிய நகரங்களில் தலா 10 என்ற எண்ணிக்கையில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும்.

நகரத்தில் ஒவ்வொரு 3 கி.மீட்டருக்கும், நெடுஞ்சாலைகளில் 25 கி.மீட்டருக்கும், எலெக்ட்ரிக் பஸ் மற்றும் ட்ரக்குகளை சார்ஜ் செய்ய ஒவ்வொரு 100 கி.மீட்டருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கும். ஏத்தர் (Ather) போன்ற சில எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், ஷாப்பிங் மால், ரயில்வே/பஸ் ஸ்டேஷன், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்து வருகின்றன. இவை தவிர, எலெக்ட்ரிக் கார்களுடன் வழங்கப்படும் CCS Type 2 சார்ஜர்களைப் பயன்படுத்தினால், வேகமாக மின்னேற்றம் செய்ய முடியும்.

> சந்தேகம்: எலெக்ட்ரிக் கார்களின் பாதுகாப்பு நிரூபிக்கப்படவில்லை! விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2RKYqEd

உண்மை: பெட்ரோல்/டீசல் இன்ஜின் தவிர எலெக்ட்ரிக் அமைப்பைப் பொருத்தக்கூடிய திறனுடனேயே கார் உற்பத்தியாளர்கள் தங்கள் சமீபகாலத் தயாரிப்புகளைத் தயாரித்து வருகின்றனர். எனவே, காரின் சேஸி/பாடியில் எடை குறைவான அதே நேரம் திடமான உலோகங்கள் இடம்பெறுவதுடன், கட்டுமானத்தில் நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன. Euro NCAP நடத்திய பாதுகாப்புச் சோதனையில் கோனா EV மற்றும் MG eZS ஆகியவை 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.

எலெக்ட்ரிக் கார்களின் பாதுகாப்பு நிரூபிக்கப்படவில்லையா? - ஓர் எளிய விளக்கம்

மேலும் Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் வழக்கமான நெக்ஸான் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் நெக்ஸானும் அந்த வரலாற்றைத் தொடரும் என நம்பலாம். பேட்டரி அமைப்புக்கு IP67 மற்றும் AIS-48/UL 2580 ரேட்டிங் தவிர, லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டீல் பேக்கேஜிங் வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். இவை தவிர வழக்கமான கார்களில் இருக்கும் காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, BA, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரிவர்ஸ் கேமரா, சீட் பெல்ட் ரிமைண்டர், க்ரூஸ் கன்ட்ரோல் எனப் பல பாதுகாப்பு வசதிகள் லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் கார்களில் இடம்பெற்றுள்ளன.

- இவற்றுடன் பராமரிப்புச் செலவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெட்ரோல், டீசல் கார்கள்போல வேகம், இடவசதி உள்ளிட்ட சந்தேகங்களையும் நீக்கும் முழுமையான கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > https://www.vikatan.com/news/general-news/seven-doubts-regarding-electric-cars-answered

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு